நடப்பு
Published:Updated:

மகள்களின் உயர்கல்வி... அம்மாக்கள் எப்படிச் சேமிக்க வேண்டும்?

மகள்களின் உயர்கல்வி...  அம்மாக்கள் எப்படிச்  சேமிக்க வேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
News
மகள்களின் உயர்கல்வி... அம்மாக்கள் எப்படிச் சேமிக்க வேண்டும்?

ஆர்.ஜெயலெட்சுமி

பெண்களின் சேமிப்பே, குடும்பங்களின் பலம். தங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்குத் தாங்கள் சேமிக்கும் வழிகளைச் சொல்கிறார்கள், பணிக்குச் செல்லும் அம்மாக்கள் சிலர்...

அம்மாக்கள் அனைவரும் தங்கள் சேமிப்பு வழிகளைச் சொல்லிவிட்டார்கள். இந்த சேமிப்பு வழிகள் எந்த அளவுக்குச் சரி எனப் புதுச்சேரியைச்  சேர்ந்த நிதி ஆலோசகர் ராஜசேகரனைக் கேட்டோம். அவர் சொன்ன யோசனைகள் இனி...

மகள்களின் உயர்கல்வி...  அம்மாக்கள் எப்படிச்  சேமிக்க வேண்டும்?


*
சேமிக்க வேண்டும், அதுவும் ரிஸ்க் இல்லாத முதலீட்டில் சேமிக்க வேண்டும் என பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால், கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் இன்னும் அதிகமான லாபத்தையும் வரிச் சலுகையையும் பெறலாம் என்பதே என் கருத்து. உதாரணமாக, பள்ளிக் கட்டணத்தைக் கட்டுவதற்கு அஞ்சலகத்தில் சேமிப்பது நல்ல விஷயம்தான். இதற்கு இப்போது 7.2% வட்டி கிடைக்கிறது. இதே ஆர்.டி-யை நீங்கள் வங்கியில் கட்டினால், ஏறக்குறைய இதே அளவு வட்டி கிடைக்கலாம். என்றாலும், வங்கி வட்டி வேகமாகக் குறைந்து வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ஆனால், கடன் சார்ந்த ஃபண்டுகள் எனில், 8 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.  இந்த வகை ஃபண்டில் இந்தியா முழுக்க ரூ.2,95,294 கோடி அளவுக்குத் தனிநபர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள் என்கிறபோது, நாமும் அதைப் பரிசீலிக்கலாமே.

* இன்ஷூரன்ஸ் திட்டமான எண்டோவ்மென்ட் பாலிசி மூலம் கிடைக்கிற தொகையை வைத்து உயர்கல்வியில் நான்கு ஆண்டுகளுக்குத் தேவையான கல்விக் கட்டணத்தைச் செலுத்த இயலாது. மிக, மிக அதிக பிரீமியம் தொகையைக் கட்டினாலே அந்த அளவுக்கான தொகையை இன்ஷூரன்ஸ் திட்டம் மூலம் பெற முடியும். தவிர, இன்ஷூரன்ஸ் திட்டங்கள் மூலம் கிடைக்கும் லாபம் 5 - 6% மட்டுமே. ஆனால், பேலன்ஸ்டு ஃபண்டுகள் கடந்த பத்து ஆண்டுகளில் சராசரியாக 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் தந்துள்ளன. ஆயுள் காப்பீட்டு முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் கூட்டு வட்டியில் வளர்ச்சி அடையாது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் கூட்டு வட்டியில் வளர்ச்சி அடையும்.  

மகள்களின் உயர்கல்வி...  அம்மாக்கள் எப்படிச்  சேமிக்க வேண்டும்?



*
செல்வ மகள் சேமிப்புத் திட்டம் நல்ல சேமிப்புதான். அதேசமயம், வருடா வருடம் பணவீக்கத்துக்கு ஏற்றாற்போல் வட்டி விகிதம் குறைந்து வருவதையும் கவனிக்க வேண்டும்.

* தங்கத்தை நாணயமாகச் சேமிப்பதற்குப்  பதில், கோல்டு இடிஎஃப் ஃபண்டில் முதலீடு செய்யலாம். தங்க நாணயத்தை வங்கியில் வாங்கினால், திரும்பவும் அங்கே விற்க முடியாது. நகைக் கடைகளில்தான் விற்க முடியும். அப்போது விலையைக் குறைத்தும் தரவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவோம்.

குழந்தைக்கு ஐந்து வயது இருக்கும்போதே மேற்படிப்புக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் எனக் கணக்கிட்டு, பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டு களில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்தால், மேற்சொன்ன எல்லா சேமிப்பு முறைகளிலிருந்தும் கிடைக்கும் வருமானத்தைவிட அதிக வருமானம் கிடைக்கும்’’ என்றார் ராஜசேகரன்.

அட்டேன்ஷன் அம்மாக்களே..!

மகள்களின் உயர்கல்வி...  அம்மாக்கள் எப்படிச்  சேமிக்க வேண்டும்?



மணிமாலை, இன்ஷூரன்ஸ் முகவர், சேலம்

‘‘என் மகள் பிறந்தபோதே அவள் பெயரில் ஒரு மணிபேக் பாலிசி போட்டுவிட்டேன். ஆறு ஆண்டுகள் முடிந்தபின்னர் ஆண்டுதோறும் ரூ.15 ஆயிரம் கிடைத்தது. அந்தத் தொகையை வைத்துப் பள்ளிக் கட்டணத்தைச் சிரமம் இல்லாமல் செலுத்தி வந்தேன். தற்போது அவள் கல்லூரியில் படிக்கிறாள். அந்த பாலிசியில் இருந்து கடன் பெற்றுக் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்தினேன். அந்தக் கடனைத் தற்போது திரும்பக் கட்டி வருகிறேன். அவளது 25 வயதில் கிடைக்கும் இந்த முதிர்வுத் தொகையானது திருமணச் செலவுக்கு உதவும்.’’

ஜெயபாரதி, மத்திய அரசு ஊழியர், மதுரை

மகள்களின் உயர்கல்வி...  அம்மாக்கள் எப்படிச்  சேமிக்க வேண்டும்?



‘‘மாதந்தோறும் 1,000 ரூபாயை ஆர்டி-யில் போட்டு வைப்பேன். இது ஒவ்வோர் ஆண்டும் கல்விக் கட்டணத்தைச் செலுத்த உதவியாக இருக்கும். தற்போது என் மகள் 12-ம் வகுப்பு படித்து வருகிறாள். ஆறு ஆண்டுகளுக்குமுன், ரூ.40 ஆயிரத்துக்கான தேசியச் சேமிப்புப் பத்திரம் வாங்கி வைத்துள்ளேன். அடுத்த மாதம் அது முதிர்வடைய உள்ளது. அந்தத் தொகையைக்கொண்டு கல்லூரிக் கட்டணம் செலுத்திவிடுவேன்.’’

ஹர்ஷிணி, வங்கி அதிகாரி, சென்னை 

மகள்களின் உயர்கல்வி...  அம்மாக்கள் எப்படிச்  சேமிக்க வேண்டும்?


‘‘மகளின் பள்ளிக் கட்டணத்துக்காக, கடந்த ஆண்டிலிருந்தே மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் அஞ்சலக ஆர்.டி சேமிப்பு முறையில் செலுத்தி வருகிறேன். அதன் மூலம், பள்ளிக் கட்டணத்தைச் சிரமமில்லாமல் செலுத்துவேன். மகளின் உயர்கல்விக்காக ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் பிரீமியம் கட்டுகிற மாதிரி எண்டோவ்மென்ட் பாலிசி எடுத்துள்ளேன். அவள் கல்லூரிக்குச் செல்லும் வயதில் இந்த பாலிசி கைகொடுக்கும். செல்வ மகள் சேமிப்புத் திட்டத்திலும் மாதந்தோறும் ரூ.2,500 செலுத்தி வருகிறேன். இது தவிர, நகைக்கடைச் சீட்டிலும் மாதந்தோறும் ரூ.1,000 செலுத்தி வருகிறேன். ஆண்டுதோறும் அவளின் பிறந்தநாளன்று கொஞ்சம் தங்க நாணயத்தையும்  வாங்கி வருகிறேன். அவளின் திருமணத்துக்கோ, உயர்கல்விக்கோ இது பயனளிக்கும்.’’

ஏஞ்சல், உதவிப் பேராசிரியர், தாம்பரம்

மகள்களின் உயர்கல்வி...  அம்மாக்கள் எப்படிச்  சேமிக்க வேண்டும்?



‘‘தற்போது என் மகள் ஏழாம் வகுப்பு படிக்கிறாள். அவள் பிறந்ததிலிருந்து மாதம் ரூ.1,000 ஆர்.டி-யில் செலுத்தி வருகிறேன். இது தவிர, ரூ.1 லட்சம் ஃபிக்ஸட் டெபாசிட் செய்துள்ளேன். இந்தத் தொகை அனைத்தும் அவள் உயர்கல்வி கற்கும் வயதில் முதிர்வடையும் அளவில் டெபாசிட் செய்துள்ளேன். இந்தத் தொகையைப் பயன்படுத்தி என் பெண்ணின் கல்விக் கட்டணங்களைச் சமாளிக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.’’