Published:Updated:

கம்பெனி டிராக்கிங்

கம்பெனி டிராக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி டிராக்கிங்

ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

கம்பெனி டிராக்கிங்

ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:
கம்பெனி டிராக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி டிராக்கிங்

ல்கெமி லேப், 1975-ம் வருடம் டைமீத்தைல் சல்பேட் என்னும் ஒரு கெமிக்கலை உற்பத்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது. பிறகு 1984-ல், இந்த நிறுவனம் ஆர்த்தி ஆர்கானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பின்னர் 1994-ம் ஆண்டு, ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (NSE SYMBOL: AARTIIND) என மாற்றம் செய்யப்பட்டது.

கம்பெனி டிராக்கிங்

தொழில் எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கம்பெனி டிராக்கிங்



இன்றைக்கு உலக அளவில் சாயங்கள், அக்ரோ கெமிக்கல்கள், மருந்துகள், ரப்பர் கெமிக்கல் போன்றவற்றை உற்பத்தி செய்யும் பெரிய நிறுவனங்களுக்கு கெமிக்கல்களை உற்பத்தி செய்துதரும் முன்னணி நிறுவனம் இது. மும்பையைத் தலைமையகமாகவும், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அலுவலகங்களையும் கொண்டு இயங்கிவருகிறது ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ்.

இந்திய அளவில் இந்த நிறுவனம் பென்சீனை அடிப்படையாகக்கொண்ட மற்றும் மத்திய ரக வேதிப்பொருள்களை உற்பத்தி செய்வதில் மிகப் பெரிய நிறுவனம் இது. குஜராத், மஹாராஷ்ட்ரா மற்றும் மத்தியப்பிரதேசத்தில் 16 உற்பத்தி வசதிகளைக் கொண்ட இந்த நிறுவனம், சிறந்த ஆராய்ச்சி வசதிகளையும் கொண்டுள்ளது.  உலக அளவில் 60 நாடுகளில் தனது வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது.

கம்பெனி டிராக்கிங்

தொழில் அனுபவம்

இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் கெமிக்கல்களில் 75% உலகளாவிய வரிசைக்கிரம அளவீடுகளில் ஒன்று முதல் நான்கு என்ற அளவீட்டில் இருப்பதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் ‘பார்ட்னர் ஆஃப் சாய்ஸ்’ என்ற நிலையை வகித்து வருகிறது.

சிறப்பு கெமிக்கல்கள் பிரிவில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், தனது வாடிக்கையாளர்கள் பலருக்கும் பல தயாரிப்புகளை பல வருடங்களாகத் தொடர்ந்து சப்ளை செய்யும் நிலையான உறவைக்

கம்பெனி டிராக்கிங்

கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்த நிறுவனம் விற்பனை செய்யும் கெமிக்கல்களில் 80%,  தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவே இருக்கிறது. இதன் 16 உற்பத்தி வசதிகளில் இரண்டு, அமெரிக்க அங்கீகார நிறுவனமான எஃப்டிஏ-வின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. 125-க்கும் மேற்பட்ட கெமிக்கல்களை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம், 150-க்கும் மேற்பட்ட உலகளாவிய வாடிக்கையாளர்களைக் கொண்டும், 500-க்கும் மேற்பட்ட உள்நாட்டு வாடிக்கையாளர்களைக் கொண்டும் சுமார் 3,250 பணியாளர்களுடன் இயங்கி வருகிறது.

கம்பெனி டிராக்கிங்

ஒரு பிசினஸ்-டு-பிசினஸ் நிறுவனமாக (தொழிற்சாலைகளுக்கு மட்டுமே கெமிக்கல்களை சப்ளை செய்யும் நிறுவனமாக) இருக்கிறபோதிலும், இந்த நிறுவனத்தின் பல தயாரிப்புகள், அவை சப்ளை செய்யப்படும் தொழில் நிறுவனங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களைச் சென்றடையவே செய்கின்றன. கடந்த காலத்தில் 50% வரையிலான விற்றுவரவு வெளிநாடுகளில் செய்த விற்பனையில் இருந்து (அமெரிக்கா-28%, ஐரோப்பா-25%, சீனா-16%, ஜப்பான்–10% மற்றும் ஏனைய நாடுகள்–21%)  வந்துள்ளது.

கம்பெனி டிராக்கிங்

மிக அதிக அளவு என்று சொல்லுமளவுக்கு 125 கெமிக்கல்களை (ஆராய்ச்சிகள் மூலம் கண்டறிந்து) ஒருங்கிணைந்த  ஒரே மூலத்திலிருந்து உற்பத்திசெய்து பெறுகிற வசதிகளை நிறுவிச் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம். மேலும், தற்போதுள்ள உற்பத்தி வசதிகளிலேயே எதிர்காலத் தேவைக்கான உற்பத்தி அதிகரிப்பைச் செய்துகொள்ளும் கட்டமைப்பையும் கொண்டுள்ளது. மேலும், போட்டியாளர்கள் முயற்சி செய்யாத கெமிக்கல் களில் தனது பங்களிப்பை அதிகப்படுத்துவதன் மூலம், ஒரு தனித்துவமிக்க நிறுவனமாகச் செயல்பட்டுவருகிறது.
 
உற்பத்திக்குப் பிறகு விற்பனை என்ற நிலையை மாற்றிக்கொண்டு, நிறுவனங்களில் இருந்து ஆர்டர்களைப் பெற்றபின்னரே உற்பத்தி செய்துதருகிற நிலைக்குத் தன்னை மாற்றியமைத்துக் கொண்டுள்ளது.  

கம்பெனி டிராக்கிங்

 வாடிக்கையாளர்கள்

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் முக்கியமாக, உலக அளவில் செயல்படும் பெரிய நிறுவனங்களான பிஏஎஸ்எஃப், சின்ஜென்ட்டா போன்ற அக்ரோ இன்டர்மீடியரீஸ் மற்றும் கெமிக்கல் உற்பத்தியாளர்கள், சோல்வே, எவர்லைட், கெமிப்ரோ, சோஜிட்ஸ், டெய்ஜின் போன்ற பாலிமர் மற்றும் அடிட்டிவ்ஸ் உற்பத்தியாளர்கள், கிளேரியன்ட், சன் கெமிக்கல் போன்ற பிக்மென்ட், பெயின்ட் மற்றும் பிரின்ட்டிங் இங்க் உற்பத்தியாளர்கள், சிப்லா, சன்பார்மா பார்மா உற்பத்தியாளர்களும்  அடங்குவர்.

 ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?


கெமிக்கல்கள் உற்பத்தித் துறை, தரம் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக அரசாங்க மற்றும் ஒழுங்குமுறை ஆணையங்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படவேண்டிய துறை என்பது ஒரு ரிஸ்க். உலக அளவில் வர்த்தகம் செய்வதால், அந்நிய செலவாணி மதிப்பு மாறுதலும் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற இரண்டும் இந்த நிறுவனத்தின் வியாபாரத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது. மூலப்பொருள்களின் விலையும், போட்டியும் மற்றுமொரு ரிஸ்க்காகவே இந்த நிறுவனத்துக்குக் கருதப்படவேண்டும்.

கம்பெனி டிராக்கிங்

பொதுவாக, கெமிக்கல் நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி வசதிகளும் அதில் பெறும் வெற்றியுமே லாபத்தின் போக்கை நிர்ணயிப்பதாக அமையும். எனவே, எதிர்காலத்தில் தொடர்ந்து ஆராய்ச்சியில் வெற்றி பெற இயலாது போகும் சூழலும், இதுபோன்ற நிறுவனங்களுக்கு லாபத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு ரிஸ்க்காவே இருக்கும் எனலாம்.

ரிஸ்க்குகள் பல இருக்கிறபோதிலும் நீண்ட தொழில் அனுபவத்தையும், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ள இந்த நிறுவனத்தின் பங்குகளை ஏதாவது ஒரு காரணத்தினால் சந்தை சரியும்போது வரும் நல்லதொரு விலைச்சரிவில் சிறிய எண்ணிக்கையில் வாங்கி, மூன்று முதல் ஐந்து வருட காலத்துக்கான போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக் கொள்வதற்காக வாசகர்கள் தொடர்ந்து ட்ராக் செய்துவரலாம். இந்தத் துறையின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து ட்ராக் செய்ய இயலாத வாசகர்கள் இந்தப் பங்குகளைத் தவிர்ப்பதே நல்லது.

This section is not a buy/sell recommendation at the current price levels, but only a compilation of information about the company and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of  the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No;  4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past  12 months and nature of products / services for which such compensation is received? – No;  5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this report is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose symbol: AARTIIND )/name of company/time duration)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism