Published:Updated:

கம்பெனி டிராக்கிங்

கம்பெனி டிராக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி டிராக்கிங்

கார்வேர்-வால் ரோப்ஸ் லிமிட்டெட் (NSE SYMBOL: GARWALLROP)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

கம்பெனி டிராக்கிங்

கார்வேர்-வால் ரோப்ஸ் லிமிட்டெட் (NSE SYMBOL: GARWALLROP)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:
கம்பெனி டிராக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி டிராக்கிங்

ந்த வாரம் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள நிறுவனம் 1976-ம் ஆண்டு நிறுவப்பட்டு, இன்றைக்குப் பல பிரிவுகளைக் கொண்டு பல நாடுகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கார்வேர்-வால் ரோப்ஸ் லிமிடெட்.

கம்பெனி டிராக்கிங்

  நிறுவனத்தின் சிறப்பு

தொழில் துறைகளில் பயன்படுத்தப்படும் துணி வகைகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் இது. அதிக செயல்திறன் கொண்ட பாலிமர் வடங்கள் (Ropes), மீன்பிடி வலைகள், விளையாட்டுகளில் பயன்படும் வலைகள், பாதுகாப்பு வலைகள், மீன் வளர்ப்புக்கான கூடுகள் கட்டுவதற்கு உதவும் துணி வகைகள் பாலியஸ்டர் மற்றும் கெமிக்கல்கள் பூசப்பட்ட துணிவகைகள், விவசாயத்துக்குத் தேவைப்படும் வலைகள் மற்றும் ஜியோ சிந்தெடிக் துணி வகைகள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது.

75 நாடுகளில் வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த நிறுவனம், பல ஆண்டுகளாக ஒரு நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஏற்றுமதி வர்த்தக நிறுவனம் என்ற பெருமையைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. 

1976-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், 1978-ல் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டு, (பின்னர் தேசியப் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது) வர்த்தகமாகி வருகிறது. ஆரம்பத்திலிருந்தே லாபகரமாகச் செயல்பட்டு, தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்டை தந்துவரும் சிறப்பைக் கொண்டுள்ளது இந்நிறுவனம்.

கம்பெனி டிராக்கிங்

  தயாரிப்புகள்

தொழில் பிரிவுகள் என்று பார்த்தால் மீன் பிடி தொழில் துறைக்கான மீன்பிடி வலைகள், ட்வைன்கள் (இறுக்கமாகப் பின்னப்பட்ட நூல் இழை), வடங்கள் (ரோப்கள்) போன்றவற்றையும், மீன் வளர்ப்பு தொழில் துறைக்கான கூடுகள், மீன் பாதுகாப்புக்கான வலைகள்,  பறவைகள் வந்து கொத்திச் செல்லாமல் இருக்க உபயோகிக்கப்படும் வலைகள், முடிச்சுகள் இல்லாத  வலைகள், மிதவைகள் போன்றவற்றையும் தொழிற்சாலைகளில் மற்றும் தொழில் துறையில் டவர்களை நிலைநிறுத்தும்போது கட்டுவதற்குப் பயன்படுத்தும் மூன்று இழை வடங்கள், கப்பல்களில் உபயோகிக்கப்படும் எட்டு இழை வடங்கள், கப்பல் துறையில் மூரிங் என்னும் பணிக்குப் பயன்படுத்தும் 12 இழை வடங்கள், பளுத் தூக்குதல், பொருள்களைக் கொண்டு செல்லுதல் மற்றும் பாதுகாப்புக்கான வலைகள் போன்றவற்றையும் உற்பத்தி செய்கிறது.

நூல் இழை மற்றும் நூல்கள் என்ற பிரிவில் சாக்குகள் தைக்கும் பாலியஸ்டர் நூல்கள், ஷூக்களைத் தைக்கும் நூல்கள், பொம்மைகளின் தலைமுடிக்குப் பயன்படும் நூல் இழைகள், பாலியஸ்டர் கொண்டுப் பின்னப்படும் சாக்குகள், சணல் சாக்குகளைத் தைக்கும் நூல் இழைகள், பைப்புகள் மற்றும் கான்கிரீட்களின் திறனை அதிகப்படுத்த பயன்படும் ட்விஸ்டட் நூல் இழைகள், மிதியடிகள், பில்டர்கள் மற்றும் இண்டஸ்ட்ரியல் பேப்ரிக்குகளை உருவாக்க உதவும் நூல்கள் போன்றவற்றையும் உற்பத்தி செய்கிறது.

கம்பெனி டிராக்கிங்

விளையாட்டுத் துறையில் பயன்படுத்தப்படும் டென்னிஸ் நெட், கிரிக்கெட் நெட், கோல்ப் பழகுவதற்கான நெட், கோல்ப் டிரைவிங் ரேஞ்ச் நெட், கூடைப்பந்து நெட், பீச் வாலிபால் நெட்,  சாக்கர் விளையாட்டுக்கான நெட்,  பூப்பந்துக்கான நெட், ஹாக்கி நெட், கைப்பந்துக்கான நெட்,  நீச்சல் குளங்களுக்கான நெட் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது இந்த நிறுவனம். பாலியஸ்டர் மற்றும் கெமிக்கல்கள் பூசப்பட்ட  துணி வகைகள் பிரிவில் தார்பாலின், ஹாங்கர் கவர்கள், பந்தல்கள் போடுவதற்கான துணி வகைகள், காற்றுஅடைக்கும் வகையிலான பொருள்களை உருவாக்குவதற்கான துணி வகைகள், கிரிக்கெட் பிட்ச் கவர்கள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது.

கம்பெனி டிராக்கிங்


விவசாயத் துறையில் உபயோகப்படுத்தப்படும் பயிர்களைப் பறவைகளிடமிருந்து காப்பாற்றுவதற்கான நெட்கள், வெயிலில் இருந்து காப்பாற்றுவதற்கான நெட்கள், திராட்சை தோட்டத்துக்கான நெட், பூச்சிகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்றுவதற்கான நெட், ஃப்ளோரி கல்ச்சருக்கான நெட், வேலிகள் போடுவதற்கு உபயோகப்படும் நெட் போன்றவற்றையும் தயாரிக்கிறது இந்த நிறுவனம்.

ஜியோசிந்தடிக்ஸ் பிரிவில் நிலத்தைக் கடினப் படுத்துதல், பள்ளங்களை நிரப்புதல், பாறைகள் விழுவதில் இருந்து காத்தல், மண் மற்றும் கரை அரிப்பைத் தடுத்தல் போன்றவற்றுக்கு உதவும் பொருள்களையும் தயாரித்து விற்பனை செய்கிறது. இந்தப் பொருள்களை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி வசதிகளையும் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், பூனா மற்றும் வேய் ஆகிய இரண்டு இடங்களிலும் இருக்கும் தனது ஆராய்ச்சி வசதிகளுக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

கம்பெனி டிராக்கிங்

மகாராஷ்ட்ரா மாநிலம் பூனாவில் 14 ஏக்கர் பரப்பளவில் வடங்கள், பாலிப்ரொப்லீன் மல்டி ஃபிலமென்ட் யார்ன் (பி.பி.எம்.எஃப்) நூல் இழைகள் மற்றும் இறுக்கமான நூல்கள், எஸ்.பி.எம் என்னும் கப்பல்கள் கரைகளின் அருகே இருக்கும்போது உபயோகிக்கும் நங்கூர மிதவைகள், ஜியோ டெக்ஸ்டைல்ஸ் மற்றும் கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படும் உலோகத்திலான காபியன்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் வசதியைக் கொண்டிருக்கிறது.

  ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

கம்பெனி டிராக்கிங்



இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பெரும்பாலான பொருள்கள், அரசாங்கம் சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்கள் பலவற்றுக்கும் உட்பட்ட துறைகளுக்கானதாக இருக்கின்றன. எனவே, சட்டதிட்டங்களின் மாறுதல்களுக்கேற்ப செயல்பட வேண்டியது குறிப்பிடத்தக்க அளவிலான ரிஸ்க் எனலாம்.
மேலும், இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பல பொருள்களும் தொழில் துறை, விவசாயம் மற்றும் கடல் சார்ந்த துறைகளில் பயன்படும் பொருள்களாக இருப்பதால், பொருளாதாரச் சூழல், மாறுபடும் தட்பவெப்பம் போன்றவற்றையும் ரிஸ்க் காரணிகளாகவே  கொள்ள வேண்டும். ஏற்றுமதி வர்த்தகம் இருப்பதாலும், பல மூலப்பொருள்கள் அந்நியச் செலாவணியில் விலை நிர்ணயம் செய்யப்படும் பொருள்களாக இருப்பதாலும், அந்நியச் செலாவணி மதிப்பு மாற்றமும் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

கம்பெனி டிராக்கிங்

இப்படி ரிஸ்க்குகள் பல இருப்பினும், செய்யும் தொழிலில் நீண்ட அனுபவம் மற்றும் முன்னணி நிலையைக் கொண்ட இந்த நிறுவனத்தின் பங்கு களை, சந்தை சரியானதோர் இறக்கத்தைச் சந்திக்கும்போது மிகவும் சிறிய எண்ணிக்கையில் வாங்கலாம். மூன்று முதல் ஐந்து வருடங்களுக்கான தங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்ள வாசகர்கள் தொடர்ந்து ட்ராக் செய்துவரலாம்.

இந்தப் பங்கினை வாங்கியபின் இந்தத் தொழில் குறித்துத் தொடர்ந்து ட்ராக் செய்து செய்திகளைக் கவனிக்க இயலாத வாசர்கள், இந்தப் பங்கைத் தவிர்ப்பது நல்லது. சமீபத்தில் இந்தப் பங்கின் விலை கணிசமாக உயர்ந்திருப்பதால், சந்தையில் ஏதாவது ஒரு காரணத்தினால் கடுமையானதோர் இறக்கம் வரும்போது வாங்குவதற்காக மட்டுமே இந்தப் பங்கை ட்ராக் செய்யலாம் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

This section is not a buy/sell recommendation at the current price levels, but only a compilation of information about the company and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of  the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No;  4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past  12 months and nature of products / services for which such compensation is received? – No;  5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this report is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose symbol: GARWALLROP )/name of company/time duration)