Published:Updated:

தோல்வியை வரவேற்போம்!

தோல்வியை வரவேற்போம்!
பிரீமியம் ஸ்டோரி
தோல்வியை வரவேற்போம்!

நாணயம் புக் செல்ஃப்

தோல்வியை வரவேற்போம்!

நாணயம் புக் செல்ஃப்

Published:Updated:
தோல்வியை வரவேற்போம்!
பிரீமியம் ஸ்டோரி
தோல்வியை வரவேற்போம்!
தோல்வியை வரவேற்போம்!
தோல்வியை வரவேற்போம்!

புத்தகத்தின் பெயர்: ஹவ் டு ஃபெயில் (How to Fail at Almost Everything and Still Win Big: Kind of the Story of My Life)

ஆசிரியர்: ஸ்காட் ஆடம்ஸ் (Scott Adams)

பதிப்பாளர்:  பெங்குவின் யூகே

‘‘நீங்கள் ஏற்கெனவே வெற்றிபெற்ற மனிதராக இருந்தால், இந்தப் புத்தகம் உங்களுக்கு ஒரு மனிதன் வெற்றி பெறும்முன் எத்தனைத் தோல்விகளைச் சந்தித்தான் என்கிற பொழுதுபோக்கு கதையைச் சொல்வதாக இருக்கும். இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்தித்த சில விஷயங்களோடு பொருந்துவதாக இருக்கும். மேலும், இந்தப் புத்தகத்தைப் படித்தால், நீங்கள் ஒன்றும் அதிர்ஷ்டத்தின் காரணமாக மட்டுமே வெற்றி பெற்றுவிடவில்லை என்பதும் உங்களுக்குப் புரியும்’’ என்று ஆரம்பிக்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஸ்காட் ஆடம்ஸ்.

ஒரு நூதனமான பிரச்னையைப் பற்றி இந்தப் புத்தகத்தில் சுவாரஸ்யமாகச் சொல்கிறார் ஆசிரியர். பெரும் பேச்சாளரான இவருக்கு திடீரெனப் பேச்சு வராமல் போனதாம். இதில் நூதனம் என்னவென்றால், மற்றவர்களிடம் பேச முடியாது. ஆனால், தனியே அறையில் கதவைச் சாத்திக்கொண்டு பேச முடியுமாம். அடுத்தவர் களிடம் பேச பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்குமாம். ஆனால், இதில் பிரச்னை என்னவென்றால், அப்போதுதான் ஒரு கூட்டத்தில் பேச பெருந்தொகை ஒன்றை அட்வான்ஸாக வாங்கியிருந்தாராம். இந்த நேரத்தில்தானா இப்படியொரு பிரச்னை வந்து தொலைக்க வேண்டும் என்ற கடுப்பு அவருக்கு. ‘‘பேசாமல் கூட்டத்தை ரத்து செய்துவிடலாம். மேடையில் ஏறிய பின்னர் பேச்சு வரவில்லை என்றால் அவமானமாகப் போய்விடும்’’ என்று அந்த நிறுவனத்திடம் சொன்னதற்கு, ‘‘பார்த்துக்கலாம், வாங்க’’ என்றார்களாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆயிரம்பேர் கூடிய ஹாலில் ஆசிரியர் மேடையில் ஏறியவுடன் கைதட்டல் வானைப் பிளக்கிறது. கைதட்டல் அடங்கியவுடன் பேச வேண்டுமே என அடிவயிற்றில் பயம். எழுதிவைத்த பேச்சைத் தனியாக அறையினுள் நன்றாகப் பேசிப் பார்த்துவிட்டே மேடைக்கு வந்த பின்பும், பேச்சு வருமா... வரவில்லை என்றால் வெச்சு செஞ்சிருவாங்களே... என்றெல்லாம் ஆயிரம் சிந்தனைகள் அவருடைய மனதில்.

மேடையில் என்ன நடந்தது என்பதைச் சொல்கிறார் ஆசிரியர். ‘‘கைதட்டல் ஓய்ந்தது. ஒரு புன்னகையை உதிர்த்தேன். மெள்ளப் பேச ஆரம்பித்தேன். அது என் குரலாய் இல்லா விட்டாலும் பேச்சு வந்தது. 45 நிமிட நேரம் பேசினேன். பேசி முடித்து மேடையில் இருந்து இறங்கியவுடனேயே எனக்குப் பேச்சு நின்று போனது. பிரச்னை தொண்டையில் இல்லை. மூளையில் என்பது அப்போதே எனக்குப் புரிந்தது. அதன்பின்னர் மூன்றாண்டு காலம் என் பிரச்னைக்கு என்ன தீர்வு என்பதை நானே தேட ஆரம்பித்தேன். என்ன தேடினேன், எப்படித் தேடினேன் என்பதை இந்தப் புத்தகத்தில்  சொல்கிறேன்’’ என்று தொடர்கிறார் ஆசிரியர்.

‘‘உனக்குப் பிடித்ததைச் செய். நீ பெரிய ஆளாவாய் என்று அனைவரும் சொல்லக் கேட்டிருப்பீர்கள். முதலில் கொஞ்ச காலம் கேட்க நன்றாக இருக்கும். ஏன் பிடித்ததைச் செய்ய வேண்டும். பிடித்தக் காரியம் கொஞ்சம் கஷ்டமாய் இருந்தாலும் பிடித்திருப்பதால் ஈடுபாட்டுடன் செயல்படுவோம் என்பதுதான் லாஜிக்.

ஆனால், நான் ஆரம்பக்காலத்தில் வேலை பார்த்த ஒரு வங்கியில், என்னுடைய லோன் மேலாளர் சொல்லித் தந்தது... ‘ஒருபோதும் பிடித்தது என்பதற்காகத் தொழில் செய்பவனுக்குக் கடன் கொடுக்காதே’ என்பது. ஏன் தெரியுமா? பிடித்திருக்கிறது என்பதற்காகத் தொழில் செய்பவன் தொழிலில் என்ன சிரமம் வந்தாலும் அதை எதிர்கொண்டு செய்வான். தொழிலில் ஜெயிக்கவே வாய்ப்பில்லை என்றாலும் அவனுக்கு அது தெரியவே தெரியாது. அதனாலே அவனுக்குக் கடன் கொடுத்துச் சிக்கிக்கொள்ளாதே. உங்களுக்குப் பிடித்தது என்பது ஜெயிப்பதற்கு வாய்ப்பில்லாததாகக்கூட இருக்கலாம். வெற்றிக்கு வாய்ப்பிருக்கும் விஷயங்களில் தொடர்ந்து முயற்சி செய்வதே புத்திசாலித்தனம் இல்லையா’’ என்கிறார் ஆசிரியர்.

“உங்களுக்கு வெற்றி வேண்டுமா? அதற்கு என்ன விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைக் கணக்குப் போடுங்கள். அந்த விலையைக் கொடுங்கள். வெற்றி உங்களுக்குக் கிடைத்துவிடும் என்பதே நான் கேட்டதிலேயே சிறந்த அறிவுரை” என்கிறார் ஆசிரியர்.

“பெரிய வெற்றியைப் பெற்றே ஆக வேண்டும் என்ற தாகத்துடன் இருக்கிறீர்களா? பெரிய ஃபைனான்ஷியல் ரிஸ்க் எடுத்துத் தெருவுக்கு வந்துவிடலாம், பிள்ளைகள் பெறுவதைத் தள்ளிப் போடலாம், பிள்ளைகளுடன் நேரம் செலவிட முடியாமல் போய்விடலாம், திவாலாகலாம், ஏன் டைவர்ஸ்கூட ஆகிவிடலாம். வெற்றிபெற்றவர்கள் வெற்றியை மட்டும் பெற விரும்புவதில்லை. அதற்குக் கொடுக்கவேண்டிய விலை என்ன என்பதைத் தீர்மானித்துவிட்டுக் கிளம்புகிறார்கள்” என்கிறார் ஆசிரியர்.

“பெரிய வெற்றியைப் பெற, முதலில் ஏதாவது ஓரிரு சிறிய விஷயங்களில் வெற்றி பெற வேண்டும். ஏனென்றால் வெற்றி என்பது ஒரு தொற்று நோய். நாம் ஒரு சில சிறு விஷயங்களில் வெற்றி பெற்றால், அந்த நினைப்பே நம்மை ஊக்குவிக்கும். அதனாலேயே பல சின்னச் சின்ன விஷயங்களில் ஈடுபடுங்கள்” என்று சொல்லும் ஆசிரியர், தான் இதனாலேயே டென்னிஸ், பிங்-பாங் போன்ற விளையாட்டுகளை எல்லாம் விளையாடுவேன் என்கிறார். வாழ்க்கையில் வெற்றி பெற சின்னச் சின்ன விஷயங்களில் வெற்றிகளை அடைந்து அது நம்முடைய நிகழ்வுகளில் பரவி பெரிய வெற்றியை அடைவதற் கான வாய்ப்பை உருவாக்குவதே சரியான ஸ்ட்ராட்டஜி என்கிறார் ஆசிரியர்.

“நீங்கள் வெற்றி பெற விரும்பினால் முதலில் மனிதர்களின் மூளை எப்படி உலகத்தை உணர்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், நாம் எல்லோருமே ஏதாவது ஒருவிதத்தில் நம்மை மற்றவர்களிடம் விற்கும் சேல்ஸ்மேனாகவே இருக்கிறோம். உதாரணத்துக்கு, ஒரு பில்டிங் கான்ட்ராக்டருக்குக் கட்டுமானத்தின்போது எந்த நிலையில் ஓர் அறையின் அளவு சிறிதாகத் தெரியும் (வெறும் செங்கல் கட்டடத்தின் மீது கூரை – காங்கிரீட் அமைத்தவுடன்), எப்போது பெரிதாகத் தெரியும் (டைல்ஸ் போட்டு பெயின்ட் அடித்த பின்னர்) என்பது தெளிவாகத் தெரியும். அதனால் அவர் வீட்டின் உரிமையாளரிடம் இப்ப சின்னதாத்தாங்க தெரியும் என்று அவர் கேட்காமலேயே விளக்கம் கொடுத்துவிடுவார்.

கடைசியாக சந்தோஷம். வாழ்க்கையில் வெற்றி என்பது நாம் பெரும்பாலான நேரம் சந்தோஷமாய் இருப்பதே என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். என்ன ஒரு சுயநலம் என்பீர்கள். சுயநலத்தில் ஒரு பொதுநலமும் உண்டு.

நீங்கள் சந்தோஷமாய் இருக்க உங்களைச் சுற்றியிருக்கும் நபர்களைச் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். அதையும் உங்கள் லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்கிறார் ஆசிரியர்.

சே... அடுத்தடுத்து தோல்விகள் வருகிறதே என்று வருத்தத்தில் இருப்பவர்கள் இந்தப் புத்தகத்தைப் படிப்பதன்மூலம் வெற்றியை நோக்கிச் செல்வதற்குத் தேவையான உற்சாகத்தைத் தினமும்  பெறலாம்.

- நாணயம் டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism