Published:Updated:

கவலையில்லாத எதிர்காலத்துக்கு கைகொடுக்கும் முதலீடு! - திருச்சியில் வாசகர்கள் உற்சாகம்.

கவலையில்லாத எதிர்காலத்துக்கு கைகொடுக்கும் முதலீடு! - திருச்சியில் வாசகர்கள் உற்சாகம்.
பிரீமியம் ஸ்டோரி
கவலையில்லாத எதிர்காலத்துக்கு கைகொடுக்கும் முதலீடு! - திருச்சியில் வாசகர்கள் உற்சாகம்.

சி.ஆனந்தகுமார்

நாணயம் விகடன், ‘மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்’ என்ற தலைப்பில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த கட்டணப் பயிற்சி வகுப்பை, சமீபத்தில் திருச்சியில் நடத்தியது. மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன் பயிற்சியளித்தார்.

வயதுக்கு ஏற்ற ஃபண்டுகளை எப்படித் தேர்வுசெய்வது,  யாரெல்லாம் ரிஸ்க் எடுக்கலாம், ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட் எவை, குறைவான ரிஸ்க் எடுப்பவர்கள் எந்த வகையான ஃபண்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும், வருமான வரி சேமிக்கக்கூடியவர்களுக்கான ஃபண்ட் வகை எது,  எஸ்.ஐ.பி முதலீட்டின் சிறப்பு, கூட்டுவட்டியின் மகிமை என ஃபண்ட் முதலீட்டின் பல விஷயங்களை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள், நீண்டகாலத்தில் கொடுத்துள்ள வருமான உச்சங்களை எடுத்துச் சொல்லி, ரிஸ்க் எடுக்க துணிந்தவர்களும், இளம் முதலீட்டாளர்களும் இந்த வகை ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தகுதியானவர்கள் எனச் சுட்டிக்காட்டினார் பயிற்சியாளர்.

கவலையில்லாத எதிர்காலத்துக்கு கைகொடுக்கும் முதலீடு! - திருச்சியில் வாசகர்கள் உற்சாகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என முடிவுசெய்த பிறகு, பலருக்கும் எழும் முக்கியமான கேள்வி நல்ல வருமானம் தரும் ஃபண்டுகளை எப்படித் தேர்வுசெய்வது என்பதுதான். அதற்கான முழுமையான தெளிவை ஏற்படுத்துவதாக இந்தப் பயிற்சி வகுப்பு இருந்ததாக  வகுப்பில் கலந்துகொண்ட பல முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.

 முதலீடு செய்துவரும் ஃபண்டுகளைக் கண்காணிப்பது எப்படி, ஃபண்டை எப்போது மாற்ற வேண்டும், எப்போது வெளியேறுவது உள்ளிட்ட  பல கேள்விகளுக்குப் பதில் கிடைத்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.

“மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் கவலையில்லாத எதிர்காலம் நிச்சயம் என்பதைப் புரிந்துகொண்டேன்” என மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் களத்தில் புதிதாக இறங்கும் ஒரு வாசகர் உற்சாகமாகச் சொன்னது, பயிற்சி வகுப்புக்குக் கிடைத்த வெற்றி எனலாம். 

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்
 
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism