Published:Updated:

சம்பளத்தை அடிப்படையாக வைத்து வங்கிக் கடன் கிடைக்குமா?

சம்பளத்தை அடிப்படையாக வைத்து வங்கிக் கடன் கிடைக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
சம்பளத்தை அடிப்படையாக வைத்து வங்கிக் கடன் கிடைக்குமா?

கேள்வி - பதில்

சம்பளத்தை அடிப்படையாக வைத்து வங்கிக் கடன் கிடைக்குமா?

கேள்வி - பதில்

Published:Updated:
சம்பளத்தை அடிப்படையாக வைத்து வங்கிக் கடன் கிடைக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
சம்பளத்தை அடிப்படையாக வைத்து வங்கிக் கடன் கிடைக்குமா?
சம்பளத்தை அடிப்படையாக வைத்து வங்கிக் கடன் கிடைக்குமா?

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் என் மாதச் சம்பளம் ரூ.40,000. என் மகளின் திருமணத்துக்காக என் சம்பளத்தை அடிப்படையாக வைத்து வங்கியில் ரூ.10 லட்சம் கடன் வாங்க முடியுமா?

சம்பளத்தை அடிப்படையாக வைத்து வங்கிக் கடன் கிடைக்குமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



-ஜெயக்குமார், திருச்சி


பிரபாகரபாபு, துணை மண்டல முன்னாள் மேலாளர், பாங்க் ஆஃப் இந்தியா

``வங்கிகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்குத் தனிநபர் கடன் கொடுக்கின்றன. பொதுவான நடைமுறை, தனிநபர் பணிபுரியும்  நிறுவனத்தின் வங்கிக் கணக்கு அந்த வங்கியில் இருக்கவேண்டும். தனிநபர், தொடர்ந்து அந்தத் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவராக இருக்க வேண்டும். அவரின் சம்பளம் அதே வங்கிக் கணக்கில் தொடர்ந்து செலுத்தப்படுவதாக இருக்க வேண்டும். கடன் பெறும் தனிநபர், கடன் தொகையைத்  திரும்பிச் செலுத்துவதற்குத் தவறி, நிறுவனத்தைவிட்டே நீங்கிச் செல்லும் நிலையில், அவருக்கான பணிக்கால இருப்புத்தொகையை அந்தத் தனியார் நிறுவனம், வங்கிக்குச் செலுத்துவதாக உத்தரவாதக் கடிதம் வங்கிக்குக் கொடுக்க வேண்டும்.

வங்கி விதிமுறைக்குப் பொருத்தமான வேறு ஒருவரின் கடன் உத்தரவாதப்  பத்திரம் கூடுதலாகத் தேவைப்படலாம். பொதுவாக, இவற்றின் அடிப்படையில் உங்கள் மகள் திருமணத்துக்காக நான்கு லட்சம் ரூபாய் வரையில்  தனிநபர் கடன் பெற வாய்ப்பிருக்கிறது.

மொத்தச் சம்பளத்தில் மற்ற பிடிப்புத்தொகைகளோடு இந்தக் கடனுக்கான தவணைத்தொகையையும் சேர்த்துக் கணக்கிட்ட பிறகு, 40 சதவிகிதத்துக்குக் குறையாமல் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளத் தொகை இருக்க வேண்டும்.”

கமாடிட்டி வர்த்தகத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் வேறு ஒருவர் என்னுடைய கணக்கில் டிரேடிங் செய்ய முடியுமா?

சம்பளத்தை அடிப்படையாக வைத்து வங்கிக் கடன் கிடைக்குமா?


-ஆனந்தகுமார், மேட்டூர்

கி.சாம்பசிவ சர்மா, இயக்குநர், மைத்ரா கமாடிட்டீஸ் பிரைவேட் லிமிடெட்

``ஒருவருடைய அனுமதியில்லாமல் அவருடைய கணக்கில் டிரேடிங் மேற்கொள்வது முன்பு அதிகமாக இருந்தது. இப்போது இது குறைந்து விட்டது. சில டிரேடர்கள் லாபம் வரும்போது ஏற்றுக்கொள்வார்கள். நஷ்டம் வரும்போது ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். டிரேடர் ஒருவர் கமாடிட்டி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தால், அவருக்கு `கான்ட்ராக்ட் நோட்’ எனச் சொல்லப்படும், அவரின் அன்றைய தின வர்த்தகம் குறித்த தகவல் எஸ்.எம்.எஸ் மற்றும் இ-மெயில் முகவரி மூலம் தெரியப்படுத்தப்படும். டிரேடர் வேறு ஒருவரை வாங்கி விற்பதற்கு அங்கீகரித்திருந்தால், மற்றவர் அவருக்குப் பதிலாக டிரேடிங் மேற்கொள்ளலாம். ஒருவேளை டிரேடருக்குத் தெரியாமல், வேறு யாராவது அவருடைய கணக்கில் வர்த்தகம் மேற்கொண்டிருந்தால் உடனே அந்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டு முறையிடலாம். நிறுவனம் எந்த டெர்மினலிலிருந்து ஆர்டர் விழுந்தது என்பது குறித்து ஆராய்ந்து அதன் பிறகு நடவடிக்கை எடுக்கும். ஒருவேளை நிறுவனத்தின் மூலம் டிரேடிங் கன்ஃபார்ம் செய்த பிறகு டிரேடர் எதுவுமே சொல்லவில்லை என்றால், அவர் அந்த வர்த்தகத்தை ஏற்றுக்கொண்டார் என்றுதான் அர்த்தம். எனினும், டிரேடருக்குத் தெரியாமல் வர்த்தகம் நடைபெற்றிருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது கமாடிட்டி எக்ஸ்சேஞ்சிடம் முறையிடலாம்.”

சமீபத்தில் நான் ஓட்டி வந்த கார், பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாதசாரிக்குச் சிறிய காயம் ஏற்பட்டுவிட்டது. கார் இன்ஷூரன்ஸ் பாலிசி எனக்கு உதவி செய்யுமா?

-முருகன், பெரம்பலூர்

சம்பளத்தை அடிப்படையாக வைத்து வங்கிக் கடன் கிடைக்குமா?



திருமலை, வழக்குரைஞர் மற்றும் இன்ஷூரன்ஸ் நிபுணர்

``விபத்து நடந்தபோது, உங்களின் கார் இன்ஷூரன்ஸ் பாலிசி நடப்பில் இருந்து,  விபத்து குறித்து காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டிருந்தால், அந்த வழக்கை நீங்கள் எதிர்கொள்ளலாம். அதே நேரத்தில் காயம் அடைந்த நபர் இழப்பீடு கோரி தீர்ப்பாயத்தில் மனுசெய்தால், உங்கள் சார்பாக இன்ஷூரன்ஸ் கம்பெனி அந்த மனுவை எதிர்கொண்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை நிறைவேற்றும்.’’

தொகுப்பு: சோ.கார்த்திகேயன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.