Published:Updated:

ஃபண்ட் கார்னர் - மாதந்தோறும் வருமானம் கிடைக்கும் ஃபண்ட் திட்டங்கள்!

ஃபண்ட்  கார்னர் - மாதந்தோறும் வருமானம் கிடைக்கும் ஃபண்ட் திட்டங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் கார்னர் - மாதந்தோறும் வருமானம் கிடைக்கும் ஃபண்ட் திட்டங்கள்!

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

ஃபண்ட் கார்னர் - மாதந்தோறும் வருமானம் கிடைக்கும் ஃபண்ட் திட்டங்கள்!

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

Published:Updated:
ஃபண்ட்  கார்னர் - மாதந்தோறும் வருமானம் கிடைக்கும் ஃபண்ட் திட்டங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் கார்னர் - மாதந்தோறும் வருமானம் கிடைக்கும் ஃபண்ட் திட்டங்கள்!
ஃபண்ட்  கார்னர் - மாதந்தோறும் வருமானம் கிடைக்கும் ஃபண்ட் திட்டங்கள்!

@  வரலட்சுமி. இ,  திருநெல்வேலி

“ என் கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரின் மாதச் சம்பளம் ரூ.35,000. அவரின் வயது 30. எங்களுக்கு ஒரு பெண் குழந்தை. ஓய்வுக் காலத்துக்காக ரூ. 1 லட்சம் ரூபாயை 35 ஆண்டுகளுக்கு அல்லது மாதம் ரூ.2,000-ஐ 35 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்புகிறோம். நீண்ட காலத்தில் நல்ல லாபம் தரக்கூடிய ஃபண்டுகளைப் பரிந்துரை செய்யவும்.”

“உங்களிடம் தற்போது ரூ.1 லட்சம் ரெடியாக இருந்தால், நீங்கள் மொத்தமாக முதலீடு செய்து கொள்ளலாம். இது தவிர உங்களால் மாதம் ரூ.2,000 முதலீடு செய்ய முடியும் என்றால் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துகொள்ளுங்கள். நீங்கள் பிரின்சிபல் குரோத் அல்லது பிர்லா சன்லைஃப் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளலாம். இவை இரண்டுமே மல்ட்டி கேப் ஃபண்ட் வகையைச் சார்ந்தவை. நீண்ட காலத்தில் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.”

@  தனசேகர். வி

“மாதந்தோறும் வருமானம் (சம்பளம் போல்) கிடைக்கக் கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஏதாவது இருக்கிறதா? உதாரணத்துக்கு, ரூ.10 லட்சம் முதலீடு செய்தால், மாதந்தோறும் வருமானம் கிடைக்குமா?”


“சமீப காலத்தில் மாதாந்திர வருமானம் தரும் பல திட்டங்களை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. ஆனால் இத்திட்டங்களுக்கு இவ்வளவு வருமானம் என்று கேரன்டி தர முடியாது. பேலன்ஸ்டு ஃபண்டுகளும் ஒரு சில மல்ட்டிகேப் ஃபண்டுகளும் மாதாந்திர டிவிடெண்டுகளைத் தற்போது வழங்கி வருகின்றன. மாதாந்திர டிவிடெண்டுகளை வழங்கும் சில ஃபண்டுகளின் பெயர்களைக் கீழே கொடுத்துள்ளோம். உங்கள் தேவைக்கேற்ற ஃபண்டைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். கிடைக்கும் டிவிடெண்டுக்கு வரி ஏதும் கிடையாது. சில பரிந்துரைகள்...

ஃபண்ட்  கார்னர் - மாதந்தோறும் வருமானம் கிடைக்கும் ஃபண்ட் திட்டங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐ.சி.ஐ.சி.ஐ பேலன்ஸ்டு ஃபண்ட், டி.எஸ்.பி – பி.ஆர் பேலன்ஸ்டு ஃபண்ட், பிரின்சிபல் பேலன்ஸ்டு ஃபண்ட், பி.என்.பி பரிபாஸ் டிவிடெண்ட் யீல்ட் ஃபண்ட், இன்வெஸ்கோ இந்தியா டைனமிக் ஈக்விட்டி ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி புரூடன்ஸ் ஃபண்ட்”

@  என்.சுரேஷ், திருச்சி

“நான் எஸ்.பி.ஐ மேக்னம் டாக்ஸ் கெயின் திட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக எஸ்.ஐ.பி முறையில் மாதம் ரூ.1,000 முதலீடு செய்துவருகிறேன். இதை இன்னும் சில ஆண்டுகளுக்குத் தொடரலாமா? அல்லது இந்த முதலீட்டை எடுத்து வேறு மொத்த முதலீட்டுக்கு மாற்றலாமா? அதற்கான ஃபண்டைச் சொல்லவும்?”

“நீங்கள் எஸ்.பி.ஐ மேக்னம் டாக்ஸ் கெயினை அடுத்த மாதம் எஸ்.ஐ.பி முடிவதோடு நிறுத்திக்கொள்ளலாம். அதற்குப் பதிலாக பிரின்சிபல் டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்ட் அல்லது டி.எஸ்.பி-பி.ஆர் டாக்ஸ் சேவர் ஃபண்டில் எஸ்.ஐ.பி-யை ஆரம்பித்துக்கொள்ளலாம். இன்னும் சற்று அதிக  ரிஸ்க்குடன் அதிக வருமானத்தை விரும்பினால், மோதிலால் ஓஸ்வால் மோஸ்ட் ஃபோக்கஸ்டு லாங்டேர்ம் ஃபண்டில் முதலீடு செய்து கொள்ளுங்கள். எஸ்.பி.ஐ மேக்னம் டாக்ஸ் கெயினில் முதலீடு செய்துள்ள முழுத்தொகையையும் உங்களால் தற்போது, 3 வருட லாக்-இன் இருப்பதால், வெளியில் எடுக்க முடியாது. முதல் 2 வருடங்களில் முதலீடு செய்த யூனிட்டுகளை விற்று, மோதிலால் ஓஸ்வால் மோஸ்ட் ஃபோக்கஸ்டு மல்ட்டிகேப் 35 அல்லது பிரின்சிபல் குரோத் ஃபண்டில் ஒரு முறை முதலீடாகச் செய்துகொள்ளுங்கள்.”

@  எஸ். கௌரிஷங்கர்

“நான் பணி ஓய்வு பெற்றவன். வயது 62. எனக்கு இரண்டு மகன்கள். இருவரும் ஆறு மாதத்துக்குள் வேலையில் சேர இருக்கிறார்கள். என் இரு மகன்கள் மற்றும் என் பெயரில் தலா ரூ.10 லட்சத்தை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். என் மகன்களுக்கு இந்தத் தொகை இன்னும் 15 ஆண்டுகளுக்குத் தேவையில்லை. சில நல்ல ஃபண்டுகளைப் பரிந்துரைக்கவும். எஸ்.ஐ.பி முதலீடு, மொத்த முதலீடு இவற்றில் எது சிறந்தது?”  

“நீங்கள் எஸ்.டி.பி முறையில் முதலீடு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு மற்றும் உங்களின் மகன்களுக்கு ஃபண்ட் பரிந்துரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மகன்களுக்கு : பிரின்சிபல் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட் – ரூ. 10 லட்சம், எல் அண்ட் டி எமர்ஜிங் பிசினஸஸ் ஃபண்ட் – ரூ.10 லட்சம்.

உங்களுக்கு : ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்ட் – ரூ.10 லட்சம்

ஃபண்ட்  கார்னர் - மாதந்தோறும் வருமானம் கிடைக்கும் ஃபண்ட் திட்டங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism