Published:Updated:

பெட்ரோல், டீசல்... ஏன் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவில்லை?

பெட்ரோல், டீசல்... ஏன் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவில்லை?
பிரீமியம் ஸ்டோரி
பெட்ரோல், டீசல்... ஏன் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவில்லை?

சோ.கார்த்திகேயன்

பெட்ரோல், டீசல்... ஏன் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவில்லை?

சோ.கார்த்திகேயன்

Published:Updated:
பெட்ரோல், டீசல்... ஏன் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவில்லை?
பிரீமியம் ஸ்டோரி
பெட்ரோல், டீசல்... ஏன் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவில்லை?

‘ஜி.எஸ்.டி-யில் 28%-க்கு மேல் வரி விதிக்க முடியாது. ஆனால், தற்போது மத்திய அரசின் சுங்கவரி 23%, மாநில அரசின் வாட் வரி 34%. ஜி.எஸ்.டி-க்குள் வந்தால் பெட்ரோல், டீசல் விலை பாதியாகி விடும். இந்தத் தந்திரம் எவ்வளவு பேருக்குத் தெரியும்’ என்ற வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இது உண்மையில் சாத்தியம்... சாத்தியமில்லை என்பதைப் பார்க்கும் முன் இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வரியைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

2017 ஜூன் 16-ம் தேதி கணக்கீட்டின்படி, கச்சா எண்ணெயின் சர்வதேச விலை 47 டாலர். இந்திய மதிப்பில் 3,050 ரூபாய். 1 பீப்பாய் கச்சா எண்ணெய் என்பது 159 லிட்டர். இதன்படி, ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்க்கு ஆகும் செலவு 19.18 ரூபாய். இதன் பிறகு நுழைவு வரி , சுத்திகரிப்புக் கட்டணம், இறக்குமதிச் செலவு மற்றும் இதர இயக்கச் செலவுகள் சேர்த்து லிட்டருக்கு ரூ.5.65 செலவாகிறது.

மார்ஜின், போக்குவரத்து, சரக்கு கட்டணம் சேர்த்து லிட்டருக்கு ரூ.2.68 வரை செலவாகிறது. சுத்திகரித்தப் பிறகு எரிபொருளின் அடிப்படை செலவு லிட்டருக்கு ரூ.27.51. இதனையடுத்து கூடுதலாக, மத்திய அரசால் விதிக்கப்படும் கலால் வரி லிட்டருக்கு ரூ.21.48. வாட் வரிக்கு முன் டீலர்களுக்கு விற்பனை செய்யப்படும் விலை லிட்டருக்கு ரூ.48.99.

பெட்ரோல், டீசல்... ஏன் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவில்லை?

பெட்ரோல் பம்ப் டீலர்களுக்கான கமிஷன் லிட்டருக்கு ரூ.2.57. வாட் வரிக்கு முன் பெட்ரோல் செலவு (தோராயமானது) லிட்டருக்கு ரூ.51.56. கூடுதலாக, வாட் வரி (டெல்லி) 27% (இது ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுபடும்) மற்றும் 25 பைசா (செஸ் மற்றும் சர்சார்ஜ் வரி) சேர்த்து லிட்டருக்கு ரூ.13.92. ஆக, 2017-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி இறுதியில், டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் சில்லறை விலையில் ரூ.65.48. இதுவே சென்னையில் எடுத்துக்கொண்டால் இங்கு வாட் வரி 34%-க்கு விதிக்கப்படுகிறது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.68.02.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெட்ரோல், டீசல்... ஏன் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவில்லை?



ஆக, ஒட்டுமொத்தத்தில் ரூ.27.51 என்று இருக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, இறுதியில் பல வரிகள் சேர்க்கப்பட்டு ரூ.68.02 என்று விற்பனை செய்யப்படுகிறது. இதில் வரிகள் மட்டும் ரூ.40.51-க்கு வசூலிக்கப்படுகிறது. பொதுவாக மத்திய அரசின் சுங்க வரி விதிப்பாலும், மாநில அரசுகளின் வாட் வரி விதிப்பாலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வடைந்து வருகிறது. சமீபத்தில், தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அதேபோல் டீசல் மீதான வாட் வரி 21.43 சதவிதத்தில் இருந்து 25 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்தைக் காரணமாகக் காட்டி, பெட்ரோலிய நிறுவனங்கள் இதன் விலையை மாற்றியமைக்கின்றன. இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 42.73 டாலராக இருக்கிறது. இது சில ஆண்டுகளுக்கு முன் 100 டாலருக்கும் மேல் அதிகரித்து இருந்தது. இப்போது இதன் விலை பாதிக்கும் மேல் குறைவடைந்துவிட்டது. இனி வரும் நாள்களில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது இந்தியாவில், நிச்சயம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100 என்ன, 200 ரூபாயைக் கூடத் தொட அதிக வாய்ப்பு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் காரணம் எரிபொருளின் மீது விதிக்கும் வரி.

பெட்ரோல், டீசல்... ஏன் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவில்லை?


இந்த நிலையில் ஜி.எஸ்.டி-க்குள் ஏன் பெட்ரோல், டீசல் கொண்டு வரவில்லை என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானத்தைக் கேட்டோம்.

“ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் வரி விதிப்பு தொடர்பாக என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து எந்த ஒரு விவரமும் இல்லை. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வருவது என்பது வசதியாக இருக்காது. ஏனெனில் இவ்விரண்டு அரசுகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதுதான் மிக முக்கிய காரணம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை எரிபொருள் மற்றும் மது விற்பனை மூலம் ஒட்டுமொத்த வருமானத்தில் பாதிக்கு மேல் கிடைக்கிறது. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை விட மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிக வரி விதிக்கிறது. இப்போது, ஜி.எஸ்.டி-க்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டு வந்தால் அரசுக்கு வரி வருவாய் மிக மிகக் குறையும். ஆகையால், மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவர கொஞ்சம் கூட ஒப்புக்கொள்ளமாட்டார்கள். இப்போது மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து பெட்ரோலுக்கு 138 சதவிகிதம் வரை வரி வசூலித்து வருகிறார்கள். ஒரு வேளை ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டுவந்து, அதிகபட்ச வரியாக 28% என விதித்தால்கூட பெட்ரோல் விலை பாதியாகக் குறைந்துவிடும்” என்றார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism