Published:Updated:

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 29 - பொருள் கொள்முதல்... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 29 - பொருள் கொள்முதல்... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 29 - பொருள் கொள்முதல்... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 29 - பொருள் கொள்முதல்... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

Published:Updated:
நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 29 - பொருள் கொள்முதல்... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 29 - பொருள் கொள்முதல்... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

ற்றுமதித் தொழிலை வெற்றிகரமாகச் செய்வதற்கான பல்வேறு விஷயங்களை ஒவ்வொரு வாரமும் பார்த்து வருகிறோம். ஏற்றுமதி செய்வதற்கான நடைமுறைகள், எப்படி பொருளை வாங்குவது, எங்கெல்லாம் நம் பொருளை விற்க வாய்ப்பிருக்கிறது என்பதையெல்லாம் விரிவாகப் பார்த்திருக்கிறோம். எந்தப் பொருளுக்கெல்லாம் தடை இருக்கிறது என்பதையும் பார்த்தோம்.

ஏற்றுமதி செய்யக்கூடிய எந்த ஒரு பொருளையும் நீங்கள் தேர்ந்தெடுத்து ஏற்றுமதி செய்யலாம். ஆனால், இறக்குமதியாளரிடமிருந்து ஆர்டர் கிடைத்து, பின்னர் பொருளைக் கொள்முதல் செய்யப் போகும்போது நாம் கவனத்தில்கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் இருக்கின்றன. அவை 1. சரியான நேரத்தில் டெலிவரி 2. உள்ளூர் சந்தையைக் கவனித்தல் 3. இலவச சாம்பிள் 4. பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ளுதல் 5. ரிட்டர்ன் அல்லது எக்ஸ்சேஞ்ச்

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 29 - பொருள் கொள்முதல்... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

1. சரியான நேரத்தில் ஏற்றுமதி

ஏற்றுமதிக்காகக் கொள்முதல் செய்யப்பட்ட பொருளை அந்தப் பொருளின் தன்மை மற்றும் தரத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட காலத்துக்குள் ஏற்றுமதி செய்து இறக்குமதியாளருக்கு அனுப்பிவிட வேண்டும். தாமதப்படுத்தினால் அந்தப் பொருள் கெட்டுப்போகவோ, தரம் குறையவோ வாய்ப்பிருக்கிறது. அப்படியே அனுப்பினால் இறக்குமதியாளரிடையே நம்முடைய பெயரும் கெட்டுப்போகும். எப்போதுமே இறக்குமதியாளர் விரும்பும் தரத்தில், கேட்கப்பட்ட அளவில் நாம் அனுப்பும் பொருள்கள் சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு அவரிடமிருந்து ஆர்டர் தொடர்ந்து கிடைப்பதோடு மட்டுமில்லாமல், அவருக்குத் தெரிந்தவர்களிடத்திலிருந்தும்கூட ஆர்டர்கள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.

2. உள்ளூர் சந்தையைக் கவனிக்கவும்


ஏற்றுமதிக்காக வாங்கப்படும் பொருள் முழுமையாக ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்டால் நல்ல விஷயம். ஒருவேளை கொள்முதல் செய்த பொருள் மீதமடைந்துவிட்டால் அதனை என்ன செய்வது? முதல் போட்டு வாங்கிய பொருள் வீணாகிவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 29 - பொருள் கொள்முதல்... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

டக்கூடாது அல்லவா! எனவே, அந்தப் பொருளை உள்நாட்டுச் சந்தையில் விற்பதற்கான வழி இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அதற்கான வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் விற்பனை செய்துவிட வேண்டும். உள்நாட்டுச் சந்தையில் ரீடெய்ல் மூலம் விற்கலாம். இல்லையென்றால் வியாபாரிகளிடம் மொத்தமாகவும் விற்பனை செய்யலாம்.

3. இலவசம் மூலம் விளம்பரம்


உள்நாட்டில் விற்பதற்கான முயற்சி முழுமையாக வெற்றியடையவில்லை எனும் பட்சத்தில் மீதமிருக்கும் பொருளை சிறிய அளவில் சாம்பிள் பேக்குகளாக மாற்றி இலவசமாகக் கொடுக்கலாம். அப்படி இலவச சாம்பிள் கொடுப்பதன் மூலம் நம்மிடம் இந்தப் பொருள் இத்தகைய தரத்தில் உள்ளது என்று விளம்பரப்படுத்த முடியும். சாம்பிள் பாக்கெட்டுகளில் நிறுவனத்தின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண் ஆகியவை அவசியம்  இருக்க வேண்டும்.

4. பற்றாக்குறை ஏற்படக்கூடாது

ஏற்றுமதிக்காக நாம் வாங்கிய பொருள் இறக்குமதியாளர் கேட்ட அளவைவிட குறைவாக, அதாவது பற்றாக்குறையாக இருக்கவே கூடாது. எனவே, எப்போதும் இறக்குமதியாளர் கேட்கும் அளவைவிட சற்றுக் கூடுதலாகவே பொருள்களை வாங்க வேண்டும்.

உதாரணத்துக்கு, இறக்குமதியாளர் அரை டன் வெல்லம், 500 கிராம் பேக்கில் 1000 பாக்கெட்டுகளாகக் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நாம் மிகச் சரியாக 500 கிலோ வாங்கினோம் என்றால் நம்மால் சரியாக ஆயிரம் பேக்குகளைச் செய்ய முடியாது. ஏனெனில், எப்படியும் பேக்கிங் செய்யும்போது குறிப்பிட்ட அளவில் பொருள் வீணாக வாய்ப்புள்ளது. மேலும், பேக்கிங் எடையும் துல்லியமாக 500 கிராம் இருக்காது; அளவு சற்றுக் கூட குறைய இருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, எந்தவொரு பொருளாக இருந்தாலும் வாங்கும்போது சற்றுக் கூடுதலாகவே வாங்க வேண்டும்.

சரியான அளவில் வாங்கினால் பின்னர் முழுமையாக ஆர்டரை அனுப்ப முடியாமல் போகலாம். இறக்குமதியாளர் கேட்டபடி பொருளை அனுப்பாவிட்டால் கெட்டபெயரே கிடைக்கும். பிறகு, கஷ்டப்பட்டு ஆர்டர் பிடித்தது எல்லாம் வீணாகப் போய்விடும். நேரடியாக 500 கிராம் பாக்கெட்டுகளாகவே வாங்கிவிட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அப்படி வாங்கிக் கொடுப்பதைக் காட்டிலும் ரீபேக்கிங்கில் கணிசமான லாபத்தைப் பார்க்கலாம் என்பதால் 500 கிலோவுக்குச் சற்றுக் கூடுதலாக வாங்கிக் கொள்ளலாம். குறைந்தபட்சம் குறிப்பிட்ட அளவைவிட 5 சதவிகிதம் கூடுதலாகக் கொள்முதல் செய்துகொண்டால் நல்லது.

5. ரிட்டர்ன் மற்றும் எக்ஸ்சேஞ்ச்

ஏற்றுமதிக்காகக் கொள்முதல் செய்யப்பட்ட பொருள்களை உள்ளூர் சந்தையில், ரீடெய்லிலோ மொத்தமாகவோ, அல்லது சாம்பிள் மூலமோ விற்க உங்களால் முடியாதபட்சத்தில் நீங்கள் கொள்முதல் செய்தவரிடமே இந்தப் பொருளைத் திரும்பக் கொடுத்துவிட முயற்சி செய்யலாம். பொருளை ரிட்டர்ன் செய்துவிட்டு அதற்கான தொகையைப் பணமாகவும் பெறலாம் அல்லது வேறு பொருள்கள் ஏதேனும் நமக்கு தேவைப்படுகிறது எனில் அந்தப் பொருளையும் வாங்கிக்கொள்ளலாம். அதனால் கொள்முதல் செய்யும்போதே அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை உற்பத்தியாளரிடம் அல்லது டீலரிடம் கேட்டுக்கொள்ளவும்.

ஏற்றுமதிக்காகப் பொருள் கொள்முதல் செய்யப்படுவதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களுக்கும் வாய்ப்பிருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொள்வது நல்லது. அதன்மூலம் நஷ்டமடையாமல், எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். அடுத்த இதழில் ஏற்றுமதியாளர்களுக்குக் கைகொடுக்கும் புரோமோஷனல் கவுன்சில்கள் பற்றிப் பார்க்கலாம். அதில் யார் எந்த கவுன்சிலில் மெம்பராக வேண்டும், இந்த புரோமோஷன் கவுன்சில்களால் என்ன பயன் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

(ஜெயிப்போம்)