Published:Updated:

BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்

Published:Updated:
BIZ பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
BIZ பாக்ஸ்
BIZ பாக்ஸ்

கதிகலக்கிய உக்ரைன் வைரஸ்!

சைபர் அட்டாக், ரான்சம்வேர் அட்டாக் போன்ற அட்டாக்குகளால் கதிகலங்கிப் போயிருக்கின்றன உலக நிறுவனங்கள். அமெரிக்க அரசின் செனட்டின் இணையதளம்கூட இந்த அட்டாக்கிலிருந்து தப்பவில்லை.

இந்த ஹேக்கிங்க்குக் காரணமான வைரஸ் ஆரம்பித்த இடத்தை மைக்ரோசாஃப்ட் மற்றும் பிற சைபர் செக்யூரிட்டி அனலிஸ்ட்டுகள் கண்டுபிடித்துள்ளனர். உக்ரைன் நாட்டின் எம்.இ.டாக் (M.E.Doc) என்கிற சாஃப்ட்வேர் நிறுவனம்தான் அந்த வைரஸின் பிறப்பிடம் என்று சொல்லியிருக்கிறது மைக்ரோசாஃப்ட்.

இத்தனை பெரிய குற்றச்சாட்டைச் சுமத்தியபின்பும் அந்த நிறுவனம் எந்தப் பதிலையும் இதுவரை அளிக்கவில்லை. மெளனம் சம்மதமா?

BIZ பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜாக் மாவின் ஒரே இலக்கு!

இ-காமர்ஸில் கொடிகட்டிப் பறக்கும் அலிபாபா நிறுவனம் மேலும் ஓர் அதிரடியை ஆரம்பித்துள்ளது. தெற்கு ஆசிய நாடுகளில் தனது பிசினஸை விரிவுபடுத்துவதில் தீவிரமாக உள்ள அலிபாபா நிறுவனம், ஒரு பில்லியன் டாலரை முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. தனது ஆன்லைன் விற்பனையை அதிகரிக்க லசாடா என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் கடந்த வருடம் அலிபாபா முதலீடு செய்தது. இந்த நிலையில், தனது பிசினஸை மேலும் அதிகரிக்க லசாடா நிறுவனத்தில் கூடுதலாக ஒரு பில்லியன் டாலரை முதலீடு செய்கிறது அலிபாபா. எல்லோரும் அலிபாபாவின் ஆன்லைன் வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் ஜாக் மாவின் இலக்கு போல! 

மதிப்பு உயரும் மலேசிய கரன்சி!


உலக அளவில் முன்னணி கரன்சியைக் கொண்ட நாடு அமெரிக்காவாக இருந்தாலும,் ஆசிய நாடுகளிலேயே வலிமை வாய்ந்த கரன்சியைக் கொண்ட நாடாக மலேசியா மாறியுள்ளது. சீனாவின் கரன்சியான யுவானைக் காட்டிலும் இரு மடங்கு மதிப்பு உயர்ந்ததன் மூலம் மலேசியாவின் கரன்சியான ரிங்கிட், ஆசிய நாடுகளின் கரன்சிகளிலேயே வலிமையானதாக மாறியிருக்கிறது. இதற்குக் காரணம், மலேசியாவில் அதிகரித்துவரும் வெளிநாட்டு முதலீடும், ஏற்றுமதித் தொழிலும்தான்.

BIZ பாக்ஸ்

சம்பள உயர்வை விரும்பாத முகேஷ்!

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக முகேஷ் அம்பானி இருந்தாலும், அவருடைய ஆண்டு சம்பளம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாறாமல் ரூ.15 கோடியாகவே இருக்கிறது. பல அதிரடி பிசினஸ் முயற்சிகளால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மேன்மேலும் மக்களிடையே பிரபலமாகிவருகிறது. டெலிகாம் துறையில் மிகப் பெரிய போட்டியை உருவாக்கிய ரிலையன்ஸ் ஜியோ, தற்போது லாபத்தைச் சம்பாதித்து வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் இத்தகைய வளர்ச்சியில் அதன் அதிகாரிகளும் ஊழியர்களும் ஊதிய உயர்வையும், பல்வேறு சலுகைகளையும் பெற்றுவரும் நிலையில், தனது சம்பளத்தை மட்டும் உயர்த்திக் கொள்ளாமலேயே இருக்கிறார் முகேஷ். இவ்வளவு போதும் என்று நினைத்துவிட்டாரா?

BIZ பாக்ஸ்

200 கோடியை எட்டிய ஃபேஸ்புக்!

மாதத்துக்கு 200 கோடி  ஆக்டிவ் பயனாளர்களைக் கொண்ட முதல் சமூக வலைதளமாக மாறியிருக்கிறது ஃபேஸ்புக். 2004-ல் தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் அதற்குமுன் இருந்த யாஹூ, ஆர்குட் போன்ற சமூக வலைதளங்களைப் பின்னுக்குத் தள்ளி இந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. தினமும்  புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துவதும் பயனாளர்களை எப்போதும் இணைப்பிலேயே வைத்திருப்பதும்தான் இந்த வளர்ச்சிக்குக் காரணம்.

கிரேட் கோயிங் மிஸ்டர் மார்க்!

BIZ பாக்ஸ்

பைபேக் ஹோதாவில் இறங்கும் மைண்ட் ட்ரீ!

ஐ.டி நிறுவனங்கள் ஒருபக்கம் நெகட்டிவ் செய்திகளால் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தாலும்,  சமீப காலமாக பங்குகளைத் திரும்ப வாங்குவதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வருகின்றன. டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல், விப்ரோ, ஹெக்சாவேர் மற்றும் எம்பசிஸ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது மைண்ட் ட்ரீயும் பைபேக் அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை தற்போது சந்தையில் ரூ.520-530 வரம்பில் இருக்கிறது. ஆனால், இந்த பைபேக் ஆஃபரில் ரூ.625-க்கு வாங்கவிருக்கிறது. நல்ல விலைதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism