Published:Updated:

நாகப்பன் பக்கங்கள்: வங்கி லாக்கர் பாதுகாப்பானதா?

நாகப்பன் பக்கங்கள்: வங்கி லாக்கர் பாதுகாப்பானதா?
பிரீமியம் ஸ்டோரி
நாகப்பன் பக்கங்கள்: வங்கி லாக்கர் பாதுகாப்பானதா?

நாகப்பன் பக்கங்கள்: வங்கி லாக்கர் பாதுகாப்பானதா?

நாகப்பன் பக்கங்கள்: வங்கி லாக்கர் பாதுகாப்பானதா?

நாகப்பன் பக்கங்கள்: வங்கி லாக்கர் பாதுகாப்பானதா?

Published:Updated:
நாகப்பன் பக்கங்கள்: வங்கி லாக்கர் பாதுகாப்பானதா?
பிரீமியம் ஸ்டோரி
நாகப்பன் பக்கங்கள்: வங்கி லாக்கர் பாதுகாப்பானதா?

“கடந்த சில நாள்களாகப் பாதுகாப்புப் பெட்டகம் பற்றிய ரிசர்வ் வங்கியின் அறிக்கை குறித்துப் பல ஸ்டேட்டஸ்களையும், பல காமெடி கமென்ட்களையும் காண்கிறேன். முத்தாய்ப்பாக ஒருவர் சொன்னார்... ‘அம்பானியின் கசின்தான் ஆர்.பி.ஐ கவர்னர்; அவர் மோடியின் சொல்பேச்சு கேட்டு இப்படி மாத்திட்டார்’னு. சிரிக்கறதா அழறதான்னு தெரியல. ஒரு விசயத்தைப் பத்திப் பேசும்முன், அது குறித்து அடிப்படை அறிவாவது இருத்தல் நலம்” என கூகுள் ப்ளஸ்ஸில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார், பாஸ்டனில் இருக்கும் நண்பர் ஸ்ரீராம் நாராயணன்.

உண்மைதான்... அதாவது, வங்கிகளின் லாக்கரில் நாம் பாதுகாப்புக்காக வைத்திருக்கும் விலை மதிப்பில்லாத பொருள்கள் ஒருவேளை திருடப்பட்டாலோ, கொள்ளைபோனாலோ, புயல், பூகம்பம், வெள்ளம் போன்றவற்றால் இழப்பு ஏற்பட்டாலோ, அதற்கு வங்கிகள் எந்த விதத்திலும் பொறுப்பேற்காதாம்.

அதற்குண்டான இழப்பீடு ஏதும் வங்கியிடம் கேட்க முடியாது என அந்த லாக்கரை வாடகைக்கு எடுக்கும்போதே, விண்ணப்பப் படிவத்துடன் வரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுத் தந்்திருக்கிறோம் அல்லது ஒப்புக் கொண்டிருக்கிறோம் நாம் என்பதால்! 

நாகப்பன் பக்கங்கள்: வங்கி லாக்கர் பாதுகாப்பானதா?

எனினும், இந்தச் செய்தியைப் படித்தவுடன் பலருக்கும் ஒரு குழப்பம் ஏற்பட்டதும் உண்மையே. “வீட்ல பாதுகாப்பா வெச்சுக்க முடியல, திருடு போயிடலாம்னுதானே பேங்குல போயி வெக்கிறோம். அங்கேயும் பாதுகாப்பு கேரன்டி இல்லைனா எப்படி?” என்கிற எண்ணம் ஏற்படுவது சகஜம்தான்.

உடனே, செய்திக்கான ஆதாரத்தைத் திரட்டத் தொடங்கினேன். செய்தித்தாள்களில் வருவது சில சமயம் கொஞ்சம் முன்பின்கூட இருக்கலாம். வழக்கம்போல, மத்திய ரிசர்வ் வங்கியின் இணையதளம் சுத்த வேஸ்ட். வாடிக்கையாளருக்கு, குடிமகன்களுக்கு எது அவசியத் தேவையோ அது அங்கே இருக்காது. அப்படியே இருந்தாலும் அதைத் தேடிக் கண்டுபிடிப்பது ரொம்பக் கஷ்டம். சுற்றிவளைத்துதான் மூக்கைத் தொட வேண்டும். 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஒருவர் கேட்ட தகவலுக்கு மத்திய ரிசர்வ் வங்கியும் 19 பொதுத்துறை வங்கிகளும் அளித்த பதிலில் இந்தத் தகவல் சொல்லப்பட்டிருப்பதாகச் செய்தி. இப்போது, இதை ‘Deficiency in service’ என்று சொல்ல முடியுமா என்பது கேள்வி. ஆனால், திருட்டு, கொள்ளை மட்டுமல்ல, தீ மற்றும் வெள்ளம் காரணமாக ஏதாவது இழப்பு ஏற்பட்டால்கூட வங்கிகளிடம் இழப்பீடு கோர முடியாது என்பதுதான் வங்கிகளின் கருத்து.

இதற்கெல்லாம் ஒப்புக்கொண்டு விண்ணப்பப் படிவத்தில் நாம் கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கிறோம் என்பது மட்டுமல்ல காரணம், பொதுவாகவே வங்கியில் நாம் என்ன வைக்கிறோம் என்பதையே வங்கிகளிடம் நாம் சொல்லத் தேவையில்லை என்பதால், நாம் அவர்களிடம் சொல்வதும் இல்லை; நாம் என்ன வைக்கிறோம் என்பது  அவர்களுக்குத் தெரியவும் தெரியாது. உள்ளே என்ன வைக்கிறோம் என்பதே தெரியாதபோது, இழப்பீட்டை எப்படிக் கணக்கிடுவது,  எவ்வளவு என்று தருவது? இந்தக் காரணத்தினால்தான், இதற்குக் காப்பீடு எடுப்பதும் சாத்தியமில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாகப்பன் பக்கங்கள்: வங்கி லாக்கர் பாதுகாப்பானதா?

சாதாரணமாக நாம் வீட்டில் இருக்கும் டி.வி, ஃப்ரிட்ஜ், லேப்டாப் போன்ற பொருள்களுக்குக்கூட ‘ஹவுஸ் ஹோல்டர்ஸ் பாலிசி’யின் கீழ் காப்பீடு எடுக்க முடியும். வீட்டைப் பூட்டிவிட்டு விடுமுறைக்குச் சென்றுவந்தபின்னர் திருடு போயிருந்தால்கூட இழப்பீட்டைக் கோரிப் பெற முடியும். ஏனெனில், வீட்டில் இருக்கும் எந்தெந்தப் பொருள்களையெல்லாம் காப்பீடு செய்கிறோம் என விவரமாகப் பட்டியலிட்டுத் தந்திருப்போம்.  ஆனால், வங்கி லாக்கரில் அது சாத்தியமா?
அப்படியானால், வங்கி லாக்கரைப் பயன்படுத்த ஏன் ஆயிரக்கணக்கில் வருடா வருடம் வாடகை கட்டுகிறோம் என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். நீங்கள் லாக்கரில் வைக்கும் பொருள்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தானே வாடகைக் கட்டணம்..?

சரி, இதையே வேறுவிதமாகப் பார்க்கலாம். ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடியிருக்கிறோம். வெளியூர் சென்றபோது திருட்டு நடந்தால் வீட்டு உரிமையாளர் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? நம் வீட்டில் என்னவெல்லாம் வைத்திருந்தோம் என்பதும் அவருக்குத் தெரியாதல்லவா?

ஒருவேளை என்னவெல்லாம் லாக்கரில் வைக்கிறோம் எனப் பட்டியலிட்டு வங்கியிடம் வெளிப்படையாகவே சொல்லிவிட்டு வைப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போது, தங்க ஆபரணம் வைத்தால் அதைப் பரிசோதித்து உறுதிசெய்து கொண்ட பின்னர் வைப்பார்களா என்ன? (சில தனியார் வங்கிகளில் இந்த வசதி உண்டு என்கிறார்கள்).

அதே சமயம், நெருப்பு, வெள்ளம், பூகம்பம், திருட்டு, கொள்ளை போன்றவற்றை எதிர்பார்த்து அதற்குத் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது வங்கிகளின் கடமை, பொறுப்பு. அதில் தவறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

லாக்கர் பற்றி இன்னும் சில விஷயங்கள்...

லாக்கருக்கு நாமினேஷன் வசதி உண்டு. மறக்காமல் செய்யுங்கள். ஆனால், ஒரே ஒருவரைத்தான் நாமினேட் செய்ய இயலும். முடிந்தால் இரண்டு பேர் பெயரில் ஜாயின்ட்டாக எடுப்பது நல்லது. ஒருவர் மறைவுக்குப்பின் மற்றொருவர் கையாள்வது எளிதாக இருக்கும்.

லாக்கர் வேண்டுமானால், அங்கு ஃபிக்ஸட் டெபாசிட் போட வேண்டும் என வங்கிகள்  கட்டாயப்படுத்த முடியாது. வேண்டுமானால்,  அதிகபட்சமாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான கட்டணத்துக்கு ஈடாக மட்டும் ஒரு ஃபிக்ஸட் டெபாசிட் கேட்கலாம்.

பங்குப் பத்திரங்களாக இருப்பின் அவற்றை டீமேட் செய்து எலெக்ட்ரானிக் கணக்கில் வரவு வைத்திடுங்கள். அவசியத்துக்கு மட்டும் தங்க ஆபரணங்களை வைத்துக் கொள்ளுங்கள். நடமாடும் தங்க நகைக் கடைகளாகக் காட்சி தரவேண்டும் என்கிற ஆசையை இனியாவது முழுக்குப் போட்டுவிடுங்கள்.

நம்முடைய பணம் வங்கியில் இருக்கப் போகிறது. எனவே, அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் நமக்கில்லை. கூடியவிரைவில் சொத்துப் பத்திரங்களும் எலெக்ட்ரானிக் முறையில் டீமேட் செய்யப்படலாம் எனத் தோன்றுகிறது. பினாமி சட்டம் வெகுவேகமாக நடைமுறைக்கு வரும் பட்சத்தில், இதுவே மத்திய அரசின் நோக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

எனவே, லாக்கருக்கான தேவை குறிப்பாக, பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் மெள்ள மெள்ளக் குறையலாம். குறையத் தொடங்கியிருப்பதாகவே இந்தத் துறை வல்லுனர்கள் சொல்கிறார்கள். வீட்டில் கொஞ்சம், வங்கி லாக்கரில் கொஞ்சம் எனப் பிரித்து வைக்கலாம். வீட்டில் இருக்கும் பொருள்களுக்குக் காப்பீடு எடுத்துக்கொள்ளலாம். 

“வெளியே செல்லும்போதெல்லாம், ஏன் வீட்டுக் கதவைத் திறந்து போட்டுவிட்டுப் போகிறீர்கள்?’’ என ஒரு அறிஞரைக் கேட்டார்கள்.  “என் வீட்டில் என்னைவிட மதிப்பானது என்ன இருக்க முடியும்; நானே வெளியே போகும்போது  எதற்கு வீட்டைப் பூட்ட வேண்டும்’’ என்றாராம்!

அறிஞர் சொன்ன பதில், கொஞ்சம் தத்துவார்த்தமாகத் தோன்றினாலும், உண்மையில் லாக்கரே தேவையில்லாத ஒரு வாழ்வை நாம் வடிவமைத்துக்கொள்வதே நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism