Published:Updated:

ஃபண்ட் கார்னர் - ரூ.1 லட்சம் முதலீடு... 30 ஆண்டுகளில் ரூ.30 லட்சம் கிடைக்க என்ன வழி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஃபண்ட் கார்னர் - ரூ.1 லட்சம் முதலீடு... 30 ஆண்டுகளில் ரூ.30 லட்சம் கிடைக்க என்ன வழி?
ஃபண்ட் கார்னர் - ரூ.1 லட்சம் முதலீடு... 30 ஆண்டுகளில் ரூ.30 லட்சம் கிடைக்க என்ன வழி?

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் கார்னர் - ரூ.1 லட்சம் முதலீடு... 30 ஆண்டுகளில் ரூ.30 லட்சம் கிடைக்க என்ன வழி?

@பாலாஜி

என் வயது 28. இன்னும் எனக்குத் திருமணம் ஆகவில்லை. நான் 1 லட்சம் ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் மொத்தமாக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். அடுத்த 25 அல்லது 30 ஆண்டுகளில் நான் முதலீடு செய்யும் அந்தத் தொகை ரூ.30 லட்சமாகக் கிடைக்க தகுந்த ஃபண்டுகளைச் சொல்லவும்.

“உங்களது ரூ.1 லட்சம் முதலீடானது, ஆண்டுக்கு 12% வளரும் என்கிற அடிப்படையில் எடுத்துக் கொள்ளும்போது, 30 வருடங்களில் ரூ.30 லட்சமாக வளர வாய்ப்புண்டு.நீங்கள் மிரே இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் அல்லது பிர்லா சன்லைஃப் ஈக்விட்டி ஃபண்டில் நீங்கள் ரூ.1 லட்சத்தை எஸ்.டி.பி முறையில் முதலீடு செய்யலாம்.’’

@ வி.வீரபத்திரன்

என் வயது 36. அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.5 முதல் ரூ.10 ஆயிரம் வரை    எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய நினைக்கிறேன். நீண்ட காலத்துக்கான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை எப்படித் தேர்வு செய்வது, நீண்ட காலத்துக்கு ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது ரிஸ்க்கானதா, 20 ஆண்டு காலத்தில் ஸ்மால், மிட் மற்றும் லார்ஜ் கேப் ஃபண்டுகள் மூலம் எவ்வளவு சதவிகிதம் வருமானம் கிடைக்கும்?

‘‘மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்தும் அவரின் மனநிலையைப் பொறுத்தும் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் 20 – 25 வருட கால அளவில் முதலீடு செய்ய நினைக்கும்போது, ஸ்மால் அண்ட் மிட்கேப் கேட்டகிரியில் உள்ள ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்த வகை ஃபண்டுகள் அதிக ரிஸ்க் உடையவை என்றாலும், நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தை ஈட்டித் தந்திருப்பது கடந்த கால வரலாறு. ஸ்மால் அண்ட் மிட் கேப் திட்டங்களில் நீண்ட காலத்தில் முதலீடு செய்யும்போது ரிஸ்க் வெகுவாகக் குறைந்துவிடும்.

இன்றைய நிலைமையில், ஸ்மால் அண்ட் மிட் கேப் ஃபண்டுகள் மூலம் ஆண்டுக்கு 12–15% வருமானத்தை எதிர்பார்க்கலாம். நீண்ட காலத்தில், உங்களின் எதிர்பார்ப்பை ஆண்டுக்கு 12 சதவிகிதமாகக் குறைத்துக்கொள்வது உசிதம். லார்ஜ் கேப் ஃபண்டுகளில் ஆண்டுக்கு 10 – 12% வருமானத்தை எதிர்பார்க்கலாம். நீங்கள் கீழ்காணும் ஸ்மால் அண்ட் மிட் கேப் ஃபண்டுகளில் 10,000 ரூபாயை மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம்.

ஃபண்ட் கார்னர் - ரூ.1 லட்சம் முதலீடு... 30 ஆண்டுகளில் ரூ.30 லட்சம் கிடைக்க என்ன வழி?



எல் அண்ட் டி எமர்ஜிங் பிசினஸஸ் ஃபண்ட் – ரூ.5,000, மிரே அஸெட் எமர்ஜின் புளூசிப் ஃபண்ட் –  ரூ.5,000’’

@சத்யா

எனக்கு வயது 32. மாதமொன்றுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம். எனக்கு மியூச்சுவல் ஃபண்ட் பற்றி எதுவும் தெரியாது. எனினும், அதில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறேன். நல்ல வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஃபண்டுகளைச் சொன்னால் உதவியாக இருக்கும்.

“உங்களின் சம்பளத்தைச் சொன்ன நீங்கள், மாதமொன்றுக்கு எவ்வளவு முதலீடு செய்ய முடியும் என்பதைச் சொல்லவில்லை. உங்களால் மாதமொன்றுக்கு ரூ.3,000 நீண்ட காலத்துக்கு சேமிக்க முடியும் என்கிற எதிர்பார்ப்பில், கீழ்வரும் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளலாம். மிரே இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்- ரூ.1,500, எல் அண்ட் டி இந்தியா வேல்யூ ஃபண்ட் -ரூ.1,500.”

வி.நாகராஜன், சித்தூர்.


எனக்கு 49 வயது. என் ஓய்வுக் காலத் தேவைக்காக நான் மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய நினைக்கிறேன். ஓய்வு பெற்றபின் மாதமொன்றுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை தேவை. இதற்கு எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்வதற்கேற்ற நான்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைச் சொல்லுங்கள். எதிர்பார்க்கும் தொகை சேர்ந்தபின், அந்தப் பணத்தை எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் சொல்லவும்.

‘‘10,000 ரூபாயைக் கீழே சொல்லப்பட்டுள்ள ஃபண்டுகளில் மாதந்தோறும் அடுத்த 10 வருடங்களுக்கு முதலீடு செய்யலாம். 10 வருட முடிவில் உங்களுக்கு அந்தப் பணம் தேவையில்லை என்றால், அதே ஃபண்டிலேயே விட்டுவிடலாம். அது வளர்ந்துகொண்டே இருக்கும். தேவைப்படும்போது, தேவைப்படும் அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். அல்லது மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையையும் எஸ்.டபிள்யூ.பி மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம். இல்லா விட்டால், அதே ஃபண்டில் டிவிடெண்ட் ஆப்ஷனுக்கு மாறிக்கொள்ளலாம். அந்த வயதில் நீங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றால், கடன் சார்ந்த திட்டங்களுக்கு மாறிக் கொள்ளலாம். இதுபோல் பல வழிகள் உள்ளன. நீங்கள் ஓய்வு பெறுவதற்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, இதில் உங்கள் தேவைக்கு எது பொருத்தமாக இருக்கும் என்று பார்த்து முடிவு செய்துகொள்வது சிறந்தது. ரூ.10,000 முதலீட்டுக்கு இரு ஃபண்டுகள் போதும்.

பிரின்சிபல் குரோத் ஃபண்ட் – ரூ 5,000,    டி.எஸ்.பி – பி.ஆர் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் – ரூ.5,000.’’

ஃபண்ட் கார்னர் - ரூ.1 லட்சம் முதலீடு... 30 ஆண்டுகளில் ரூ.30 லட்சம் கிடைக்க என்ன வழி?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு