Published:Updated:

காம்பவுண்ட் எஃபெக்ட் என்னும் எட்டாவது அதிசயம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காம்பவுண்ட் எஃபெக்ட் என்னும் எட்டாவது அதிசயம்!
காம்பவுண்ட் எஃபெக்ட் என்னும் எட்டாவது அதிசயம்!

நாணயம் புக் செல்ஃப்சித்தார்த்தன் சுந்தரம்

பிரீமியம் ஸ்டோரி
காம்பவுண்ட் எஃபெக்ட் என்னும் எட்டாவது அதிசயம்!

புத்தகத்தின் பெயர்: த காம்பவுண்ட் எஃபெக்ட்

ஆசிரியர்: டாரென் ஹார்டி

பதிப்பகம்: Perseus

முயல், ஆமைக் கதையை நம்மில் பலரும் நிச்சயம் கேட்டிருப்போம். மெல்ல ஓடும் ஆமை, வேகமாக ஓடும் முயலை எப்படி வெற்றி கண்டது என்பதும் நமக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும், நாம் வெற்றி பெற்ற ஆமையாக மாறிவிடவில்லை. நாம் கொஞ்சம் வேகமாக ஓடினாலும், தோல்வி கண்ட முயலைப் போலவே இருக்கிறோம். இதற்கு என்ன காரணம்?

காம்பவுண்ட் எஃபெக்ட் என்னும் எட்டாவது அதிசயம்!‘‘கூட்டு விளைவு, அதாவது, காம்பவுண்ட் எஃபெக்ட் என்பதன் மகத்துவத்தைப் புரிந்துகொள்ளாததே’’ என்கிறார் அமெரிக்காவின் பிரபல பிசினஸ்மேனும், ஊக்கம் தரும் பேச்சாளர் மற்றும் எழுத்தாளருமான டாரன் ஹார்டி. இவர் ‘The Compound Effect’ என்கிற புத்தகத்தின் ஆசிரியர். இந்தப் புத்தகத்தில் அவர் சொல்லி இருக்கிற விஷயங்ளை நீங்கள் பின்பற்றத் தொடங்கினால், வெற்றி பெற வாய்ப்புள்ள ஆமையாக நீங்கள் மாறுவது நிச்சயம்.

‘கூட்டு விளைவு’ வெற்றியைத் தரும் என்பதற்கு இந்தப் புத்தகம் எழுதிய ஆசிரியரே நல்லதொரு உதாரணம். ‘‘நான் 18 வயதில் எனது தொழிலின் மூலம் ஆறு இலக்க வருமானத்தைச் சம்பாதித்தேன். எனக்கு 20 வயதானபோது மேல்தட்டு வர்க்கத்தினர் குடியிருக்கும் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கிக் குடியேறினேன். 24 வயதில் எனது ஆண்டு வருமானம் மில்லியனுக்கும் அதிகமாக இருந்தது. எனது 27-வது வயதில் நான் செய்துவந்த தொழில் 50 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியது. எனக்கு இன்னும் 40 வயதுகூட ஆகவில்லை. ஆனால், நான் வாழும் வரை என் குடும்பத்துக்குத் தேவையான பணமும் சொத்தும் போதும் என்று சொல்கிற அளவுக்கு இருக்கிறது. `கூட்டு விளைவு’தான் என் வெற்றியின் `ரகசியம்’’ என்றார் இந்தப் புத்தகத்தை எழுதிய டாரன் ஹார்டி.     

காம்பவுண்ட் எஃபெக்ட் என்னும் எட்டாவது அதிசயம்!

கூட்டு விளைவினால் ஏற்படக்கூடிய பலனை நாம் இதுவரை உணர்வுபூர்வமாக அனுபவிக்கவில்லை. அதனால்தான்  நாம் அது பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறோம். `சிறிய, புத்திசாலித்தனமான காரியங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் மிகப் பெரிய பலனை அடைவது’தான் கூட்டு விளைவின் மூலம் கிடைக்கும் நன்மை. ‘இந்த சின்ன விஷயம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிடப் போகிறது’ எனப் பல விஷயங்களை நாம் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிடுவோம். ஆனால், அந்த சின்ன விஷயங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் ஏற்படும் விளைவு, நாம் திகைத்து நிற்கிற அளவுக்கு மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும். 

உங்கள் ஆரோக்கியத்தை, உறவை, நிதி நிலையை அல்லது எந்த ஒன்றையும் மேம்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் மாற்றம் மிகச் சிறிதாக, கண்ணுக்குப் புலப்படாத வகையில் இருக்கும். இந்த சிறிய மாற்றங்கள் குறைவான அல்லது எந்தவொரு விளைவையும் உடனடியாக ஏற்படுத்தாது. அதனாலேயே நாம் அதைத் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிடுகிறோம்.

உதாரணமாக, உடம்பு இளைக்க வேண்டுமென ஓடுபவர்கள் எட்டு நாள் ஓடியபின், நாம் இன்னும் இளைக்கவில்லையே என்று நினைத்து ஓடுவதை நிறுத்திவிடுகிறார்கள். ஆறு மாதப் பயிற்சிக்குப் பின்பும் பியானோ வாசிப்பதில் நமக்கு ‘தேர்ச்சி’ வரவில்லையே என்று நினைத்து பயிற்சி செய்வதை விட்டுவிடுகிறார்கள். சில மாதங்களில் கொஞ்சம் பணத்தைச் சேமித்தபின், நிறைய பணம் சேரவில்லையே என்று நினைத்து, சேமித்த பணத்தையும் எடுத்து வேறு ஏதாவது ஒன்றுக்குச் செலவு செய்துவிடுகிறார்கள். ஆனால், சின்ன விஷயமாக இருந்தாலும், அதைத் தொடர்ந்து செய்தால் நாளடைவில் அது ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்தும்.

‘காம்பவுண்ட் எஃபெக்ட்’ மூலம் கிடைக்கும் நன்மையை ஒரு உதாரணம்  மூலம் அருமையாக எடுத்துச் சொல்கிறார் ஆசிரியர் டாரன். லாரி, ஸ்காட் மற்றும் ப்ராட் (Brad) என மூன்று நண்பர்கள். இந்த மூவரும் ஒன்றாகவே வளர்ந்தவர்கள். அருகருகிலேயே வசித்து வந்தார்கள். ஒவ்வொருவரும் வருடத்துக்கு 50,000 டாலர் சம்பாதிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆனது. அவர்கள் அனைவரும் சுமாரான ஆரோக்கியத்துடனும், உடல் எடையுடனும் இருந்தார்கள்.

காம்பவுண்ட் எஃபெக்ட் என்னும் எட்டாவது அதிசயம்!லாரி மகிழ்ச்சியாக இருப்பான் அல்லது மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்துக் கொள்வான். இருந்தாலும், எதுவும் மாறவில்லை என அவ்வப்போது சலித்துக் கொள்வான்.

ஸ்காட், நாளொன்று நல்லதொரு புத்தகத்தில் இருந்து 10 பக்கங்கள் படிப்பதையும், வேலைக்குச் செல்லும்போது தனக்கு வழிகாட்டியாக அல்லது உத்வேகம் தரக்கூடியதாக இருக்கும் விஷயங் களையும் 30 நிமிடங்கள் கேட்கவும் ஆரம்பித்தான். தனது ஒவ்வொரு நாள் உணவிலும் 125 கலோரி அளவுக்குக் குறைக்க முடிவெடுத்தான். அத்துடன் தினமும் 2,000  அடிகள் (ஒரு மைல் தூரத்துக்கும் குறைவானது) நடக்க ஆரம்பித்தான். இது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்றாலும், இதைத் தொடர்ந்து செய்தான் ஸ்டாக்.
 
 ப்ராட், தனக்குத் தெரிந்து சில காரியங்களைச் செய்ய ஆரம்பித்தான். தனக்கு விருப்பமான நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காக பெரிய திரை கொண்ட தொலைக்காட்சி ஒன்றை வாங்கினான். சமையல் தொடர்பான சானலில் பார்த்த உணவு வகைகளைச் செய்து பார்த்தான். அத்துடன்,  வீட்டிலேயே பார் ஒன்றையும் வைத்து, வாரம் ஒருமுறை மது அருந்தினான். ஆக, வாழ்க்கையில் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினான்.

சில மாதங்களுக்குப்பிறகு, இந்த மூன்று நண்பர்களுக்கு என்ன நடந்தது தெரியுமா?

ஐந்தாவது மாத முடிவில், இந்த மூவரிடம் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை. லாரி, வழக்கம்போல தனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். ஸ்காட் ஒவ்வொரு நாள் இரவும் தொடர்ந்து படித்துக் கொண்டும், வேலைக்குச் செல்லும்போது உத்வேகம் தரக்கூடிய ஆடியோவை 30 நிமிடங்கள் கேட்டுக் கொண்டும் இருந்தான். ப்ராட் குறைவாக வேலை செய்துகொண்டு வாழ்க்கையை `சந்தோஷமாக’ அனுபவித்து வந்தான். 

பத்தாவது மாத முடிவிலும், இந்த மூவரின் வாழ்க்கையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த மாற்றமும் நடந்துவிடவில்லை. ஆனால், 25-வது மாத வாக்கில் இந்த மூவரின் வாழ்க்கையில் குறிப்பிட்டுச் சொல்கிற அளவுக்கு வித்தியாசங்கள் தெரிய ஆரம்பித்தன. 31-வது மாதத்தில் வித்தியாசம் மிகவும் திடுக்கிட வைக்கும் அளவுக்குத் தெரிய ஆரம்பித்தது.

ப்ராட் இப்போது குண்டாக மாறியிருந்தான். ஒரு நாளைக்கு 125 கலோரிகள் அதிகமாக சாப்பிட்டு, சுமார் 33.5 பவுண்ட் எடை கூடி யிருந்தான். இருந்தாலும், அவனுடைய வேலையில் அவன் மகிழ்ச்சி அடையவில்லை. எனவே, அவனது திருமண வாழ்க்கை பெரும் போராட்டமாக மாறியது. 

லாரி, இரண்டரை வருடத்துக்கு முன்பு எப்படி இருந்தானோ, அதே மாதிரி இருந்தான். அவனது  மனச்சலிப்பு கொஞ்சம் அதிகரித்திருந்தது.

ஆனால், ஸ்காட் நன்கு உடல் மெலிந்து ட்ரிம்மாக மாறியிருந்தான். ஒவ்வொரு நாளும் 125 கலோரிகளைக் குறைத்துச் சாப்பிட்டதன் மூலம் 31 மாதத்தில் சுமார் 33 பவுண்ட் எடை குறைந்திருந்தான். அது மட்டு மல்ல, இந்த 31 மாதங்களில் ஸ்காட் படிக்கவும், சுய முன்னேற்றப் பேச்சுக்களைக் கேட்கவும் ஏறக்குறைய ஆயிரம் மணி நேரம் செலவிட்டிருந்தான். புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டு நடைமுறைப் படுத்தியதால், அவனுக்குப் பதவி உயர்வும், அதிக சம்பளமும் கிடைத்தது. இவற்றையெல்லாம்விட முக்கியம், அவனுடைய திருமண வாழ்க்கை அமோகமாக இருந்தது. 

சின்னச் சின்ன விஷயங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் மிகப் பெரிய நன்மைகளைப் பெற முடியும் என்பதுதான் இந்த மூன்று பேரின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

நம் வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்தையும் ‘ஒரே இரவில்’ அடைந்துவிட முடியாது. அதற்காக, அந்த விஷயத்தை நம்மால் அடையவே முடியாது என்று நினைக்கக்கூடாது. எறும்பும் ஊர, கல்லும் தேயும் என்பது பழமொழி மட்டுமல்ல, சிறு துளி பெரு வெள்ளம் என்பதை நமக்கு உணர்த்தும் பாடம். கூட்டு விளைவின் மகத்துவத்தைப்  புரிந்துகொண்டால் `உடனடி விளைவின்’ மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை நாம் மறுக்கத் தயாராகி விடுவோம். வெற்றி என்பது ‘ஆர்டர் தந்தவுடன்  வந்துசேரும் துரித உணவு அல்ல’ என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அது தெரிந்தபின், நீங்கள் வெற்றி என்பது வேகமாகக் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டீர்கள். எந்தக் கஷ்டமும் படாமல் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற முடியும் என்று நீங்கள் நம்புவதை நிறுத்துவீர்கள்.

ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் அரை டஜன் வேலைகள், உங்களுக்கு உடனடியாக எந்தப் பலனையும் தந்துவிடாது என்றாலும், அவற்றைத் தொடர்ந்து செய்வதன் மூலம் நீங்கள்  வாழ்க்கையின் புதிய உயரத்துக்கு செல்வீர்கள்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு