Published:Updated:

வெளிநாட்டுப் பயணம்... பணத்தைக் கையாளும் பாதுகாப்பு வழிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வெளிநாட்டுப் பயணம்... பணத்தைக் கையாளும் பாதுகாப்பு வழிகள்!
வெளிநாட்டுப் பயணம்... பணத்தைக் கையாளும் பாதுகாப்பு வழிகள்!

வெளிநாட்டுப் பயணம்... பணத்தைக் கையாளும் பாதுகாப்பு வழிகள்!

பிரீமியம் ஸ்டோரி

டிக்கவோ, பிசினஸ் செய்யவோ அல்லது சுற்றுலாவுக்கோ வெளிநாடுகளுக்குப் போய் வருகிறவர்களின் எண்ணிக்கை இப்போது ஏராளம். பக்கத்து ஊர்களுக்குச் செல்வது போல, வெளிநாடுகளுக்கு எப்போது வேண்டு மானாலும், யார் வேண்டுமானாலும் போகலாம் என்கிற அளவுக்குச் சூழ்நிலை முன்னேறி இருப்பது பாசிட்டிவான மாற்றமே!   

வெளிநாட்டுப் பயணம்... பணத்தைக் கையாளும் பாதுகாப்பு வழிகள்!

அப்படிச் சென்று வரும்போது, நம்முடைய உயிரையும், உடலையும், உடைமைகளையும் பாதுகாப்பாக வைத்திருப்பது நம் கைகளில்தான்  இருக்கிறது. குறிப்பாக, நம் கையில் ரொக்கமாக வைத்திருக்கும் பணம் குறித்து நாம் எப்போதுமே மிகக் கவனமாக இருக்கவேண்டி இருக்கிறது. பணத்தை ரொக்கமாகக் கைகளில்  வைத்திருப்பது எப்போதுமே ஆபத்தானதுதான்.  எனவே, வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறவர்கள் தங்கள் செலவுகளுக்காக எடுத்துச் செல்லும் பணத்தை, ஸ்மார்ட்டாகவும் பாதுகாப்பாகவும் எடுத்துச் செல்லப் பல்வேறு வழிகள் உள்ளன. இந்த வழிமுறைகளை வெளிநாடு களுக்குச் செல்லும்முன்பே தெரிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் அதற்கான ஏற்பாடு களுடன் செல்ல முடியும்.

வெளிநாடுகளில் அந்த நாட்டு கரன்சிகளில்தான் நாம் பரிவர்த்தனை செய்யவேண்டியிருக்கும். அதற்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சேவைகளை வழங்குகின்றன. அவை, பிரீபெய்டு ஃபாரெக்ஸ் கார்டு, அந்நியச் செலாவணி வரைவோலை (FCDD), வயர் ட்ரான்ஷாக்ன், டிராவலர்ஸ்  செக் ஆகியவைதான்.

பிரீபெய்டு ஃபாரெக்ஸ் கார்டுகள் (Forex Cards)

வெளிநாடுகளுக்குப் பணம் எடுத்துச் செல்ல மிக எளிமையான மற்றும் பாதுகாப்பான வழி இதுதான். பெரும்பாலும் அனைத்து முன்னணி வங்கிகளாலும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களாலும் இந்த பிரீ பெய்டு ஃபாரெக்ஸ் கார்டு சேவைகள் வழங்கப்படு கின்றன. சிலர், இந்த கார்டுகளை இலவசமாக வழங்குகிறார்கள். சிலர் ரூ.100 முதல் ரூ.250  வரையிலான அளவில் கட்டணம் வசூலிக்கவும் செய்கிறார்கள்.

இந்த கார்டுகளை அன்றாட செலவுகளுக்கும், ஷாப்பிங் மற்றும் டிக்கெட் புக்கிங் போன்ற செலவுகளுக்கும் எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். சில கல்லூரிகள், இந்த கார்டுகள் மூலமாகவே கல்லூரிக் கட்டணங்களையும் பெற்றுக்கொள்கின்றன. இந்த கார்டுகளை விற்பனை நிலையங்களில் உள்ள ஸ்வைப்பிங் மெஷினில் பயன்படுத்துவதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

மேலும், இந்த கார்டுகளில் செலாவணி எக்ஸ்சேஞ்ச் விகிதத்தை வெளிநாட்டுக்குப் போவதற்குமுன்பே நிரந்தரமாக்கிக்கொள்ள முடியும். அதாவது, இந்த கார்டை வாங்கும் நாளில் என்ன எக்ஸ்சேஞ்ச் விகிதமோ, அதுதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், கார்டில் பணத்தை டாப் அப் செய்ய வேண்டுமெனில், இங்கு இருப்பவர்கள் மூலம் தான் செய்ய முடியும். வெளிநாடு களிலுள்ள ஏ.டி.எம்-களில் இந்த கார்டைப் பயன்படுத்திப் பணமாக எடுக்கலாம். ஆனால்,  ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை மட்டுமே பணத்தை ரொக்கமாக  எடுக்க முடியும். சில வங்கிகள் ஏ.டி.எம்-களில் ரொக்கமாகப் பணத்தை எடுப்பதற்குக் கட்டணம் வசூலிக்கின்றன.

அந்நியச் செலாவணி வரைவோலை (FCDD)

இது வெளிநாட்டு கரன்சியினாலான வரைவோலை (Demand Draft). வங்கிகள் இதற்கான கட்டணமாக ரூ.300 முதல் ரூ.500 வரை வசூலிக்கின்றன. இந்த வகைப் பரிவர்த்தனை பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த வரைவோலைப் பரிவர்த்தனையில் வங்கிகளுக்கிடையிலான கட்டணங்களைத் தவிர்க்கலாம். மேலும், இந்த வரைவோலை மூலம் பணமானது, பெறுபவரின் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும்.   

வெளிநாட்டுப் பயணம்... பணத்தைக் கையாளும் பாதுகாப்பு வழிகள்!

அவர் தன்னுடைய கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த வரைவோலை ஆறு மாதங்கள் வரை செல்லும். பல்கலைக்கழகம் மற்றும் விடுதிக் கட்டணங்களைச் செலுத்த இதைப் பயன்படுத்தலாம். ஆனால், இந்த வரைவோலை மூலம் பரிவர்த்தனை செய்யப்படும் பணம், பெறுநரின் கணக்கில் கிரெடிட்-ஆக இரண்டு வாரங்கள் ஆகும். எனவே, உடனடிப் பரிவர்த்தனைகளுக்கு இதனைப்  பயன்படுத்த முடியாது. இந்த முறை பரிவர்த்தனைக்குக் கால அவகாசம் அதிகம் தேவைப்படுவதால், பல பல்கலைக்கழகங்கள் மாற்றுப் பரிவர்த்தனை வழிகளையே  கையாள்கின்றன. மேலும், இந்த வரைவோலை சேதமடைந்தால்,
பணம் பரிவர்த்தனையாவது மேலும் தாமதம் ஆகும்.

வொயர் பரிமாற்றம் (Wire Transfer)

இந்த வகைப் பரிமாற்றம் மிக வேகமாக செயல்படும் முறையாக பலராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த முறையைப் பல்வேறு விதமான பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்த லாம். கல்லூரி விண்ணப்பக் கட்டணம், சிறப்பு வகுப்புக் கட்டணம், விடுதிக் கட்டணம் போன்றவற்றுக்கு இந்தப் பரிவர்த்தனைமுறையைப் பயன்படுத்தலாம்.

இந்தப் பரிவர்த்தனைக்கு 24 முதல் 48 மணி நேரம் வரை ஆகலாம். இதில் தரப்படும் ஒரு ரெஃபரன்ஸ் எண்ணை வைத்து, பரிவர்த்தனையின் நிலையைத் தெரிந்துகொள்ளலாம். இதற்கு அனுப்புபவர், பெறுபவர் ஆகிய இருவரிடமிருந்தும் வங்கிகள் கமிஷன் பெறும்.
 
பயணிகள் காசோலை (Travellers Cheque)

எவ்வளவு புதிய வசதிகள் வந்தாலும், பழைமையானதும் சிறந்த வசதியானதுமான பயணிகள் காசோலை வசதி பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இந்தப் பயணிகள் காசோலைகள், பெரும்பாலும் அனைத்து நாட்டு கரன்சிகளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றன. இதை யாராவது திருடிச் சென்றாலும் அவர்களால் அதைப் பயன்படுத்த முடியாது. மேலும், இவற்றில் குறைவான செலாவணி எக்ஸ்சேஞ்ச் விகிதமும் தரப்படுகின்றன. இதற்குக் காலாவதிக் காலம் இல்லை என்பது கூடுதல் சிறப்பு. ஆனால், இந்தக் காசோலைகள் மூலம் சில வரம்புக்குட்பட்ட எண்ணிக்கையிலான அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடமிருந்து மட்டுமே பணத்தைத் திரும்ப  எடுக்க முடியும். இதில் உள்ள கையெழுத்து, சில சமயங்களில் ஒத்துப்போகாவிட்டால் பணம் தரப்பட மாட்டாது.

வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் ரொக்கமாக எடுத்துச் சென்று சிரமங்களுக்கு ஆளாவதைவிட, மேற்கண்ட வழிமுறைகளில் தங்களுக்கேற்ற சரியானதொன்றைத் தேர்வு செய்து, பாதுகாப்பான முறையில் பணப் பரிவர்த்தனை செய்யலாமே!


- ஜெ.சரவணன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு