Published:Updated:

ரிஸ்க் எடுத்தால் ரிவார்டு!

ரிஸ்க் எடுத்தால் ரிவார்டு!

பிரீமியம் ஸ்டோரி

முதலீட்டில் ஒருவர் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கிறாரோ, அந்த அளவுக்கு  அவருக்கு ரிவார்டு (Reward) கிடைக்கும்.      

ரிஸ்க் எடுத்தால் ரிவார்டு!

• குறைவான ரிஸ்க் எடுத்தால், குறைவான வருமானம்தான் கிடைக்கும். உதாரணமாக, வங்கிச் சேமிப்பு கணக்கில் ரிஸ்க் இல்லை. ஆனால், இதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு 3.5 - 4% மட்டுமே  கிடைக்கும்.  

• அதிக ரிஸ்க் எடுத்தால், அதிக வருமானம் கிடைக்கும். உதாரணமாக, நிறுவனப் பங்குகள், பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள். இவை இரண்டும் கடந்த 10, 15 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானம் தந்திருக்கின்றன.

• ஒருவரின் வயது, வாழ்க்கை முறை, அறிவுத் திறன் ஆகியவற்றைப் பொறுத்து அவரின் ரிஸ்க் எடுக்கும் திறன் அமைந்திருக்கும்.

• இளம் வயதினர் அதிக ரிஸ்க் எடுக்கலாம். அதுவும் அவரைச் சார்ந்து யாரும் இல்லாத நிலையில் மிக அதிக ரிஸ்க் எடுக்கலாம்.

• பங்குச் சந்தை பற்றி பழுத்த அறிவு கொண்டவர் அதிக ரிஸ்க் எடுக்கலாம். இங்கே அவருக்குச் சந்தையின் நுணுக்கங்கள் தெரியும் என்பதால், அவர் ரிஸ்க்கை எளிதாகக் கையாள்வார்.

• இளவயதில் அதிக ரிஸ்க் உள்ள முதலீட்டிலும், வயதானபின் ரிஸ்க் குறைவான முதலீட்டிலும் முதலீடு செய்வது நல்லது. இளவயதினர் நீண்ட காலத்தில் நல்ல லாபம் தரும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்!

- சேனா சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு