Published:Updated:

“சிறு தொழில் நிறுவனங்களுக்கு நிறையவே கடன் தருகிறோம்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“சிறு தொழில் நிறுவனங்களுக்கு நிறையவே கடன் தருகிறோம்!”
“சிறு தொழில் நிறுவனங்களுக்கு நிறையவே கடன் தருகிறோம்!”

சொல்கிறார் ஐ.ஓ.பி செயல் இயக்குநர் சுவாமிநாதன்

பிரீமியம் ஸ்டோரி

ல்லாப் பொதுத் துறை வங்கிகளையும் போலவே, சிறு, குறு தொழில்களைச் செய்யும் (எம்.எஸ்.எம்.இ.) நிறுவனங்களுக்கு நிறைய கடன் உதவி செய்துவருகிறது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. இதன் மூலம் சிறு தொழில்முனைவோர்களிடம் நல்லதொரு பெயருடன் விளங்கி  வருகிறது. சிறு தொழிமுனைவோர் களுக்கு கடன் வழங்குவதில் அதிக முன்னுரிமை தருவது பற்றி ஐ.ஓ.பி-யின் செயல் இயக்குநர் கே.சுவாமிநாதன் நமக்கு சிறப்புப் பேட்டியளித்தார். அவரிடம் நாம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்...  

“சிறு தொழில் நிறுவனங்களுக்கு நிறையவே கடன் தருகிறோம்!”

‘‘வங்கிக் கடனை எம்.எஸ்.எம்.இ-க்கள் எப்படிப் பயன்படுத்தலாம்?’’

“வங்கிகள் எம்.எஸ்.எம்.இ-க்களுக்குத் தரும் கடன் மூலம் அவர்களின் தொழில் வளர்ச்சிக்கும், அது சார்ந்த நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு எம்.எஸ்.எம்.இ உரிமையாளர் உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபடுகிறார் எனில், அவரது தொழிலுக்கான இயந்திரங்களை வாங்குவது, தொழிலை நிறுவுவது போன்ற விஷயங்களுக்கு அதிக அளவில் நிதி தேவைப்படும். அதற்கேற்ப அந்த நிறுவனங்கள் மூன்று முதல் ஐந்து வருடங்களுக்குள் திரும்பச் செலுத்தும் வகையில் கடன் தருகிறோம். மேலும், வொர்க்கிங் கேபிட்டல் எனப்படும் அன்றாட நடைமுறைத் தேவைகளுக்கான நிதியையும் வங்கிகள் மூலம் எம்.எஸ்.எம்.இ-க்கள் கடனாகப் பெற முடியும். இந்தக் கடன் தொகை அவர்களின் வரவு - செலவுப் பரிவர்த்தனைகளைப் பொறுத்து வழங்கப்படும்.”

“வங்கிகள் மூலம் எம்.எஸ்.எம்.இ-க்கள் கடன் பெறுவதற்கு நிறைய ஆவணங்கள் கேட்பதாகச் சொல்லப்படுகிறதே!’’ 


‘‘முத்ரா’ வங்கித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை எந்தவிதப் பிணையும் இல்லாமல் கடன் வழங்குகிறோம். இதற்குக் கடுமையான விதிமுறைகள் ஏதும் கிடையாது. உங்கள் வாடிக்கை யாளர்களை அறிந்துகொள்ளுங்கள் (Know Your Customer) மேற்கொண்டாலே போதுமானது. கடன் தொகை கோடி களில் இருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தொழிலைப் பொறுத்து கடன் வழங்கப்படும். ஒரு கோடி ரூபாய் வரை எம்.எஸ்.எம்.இ-க்களுக்கு வழங்கப்படும் கடன்கள், சி.ஜி.டி.எம்.எஸ்.இ (CGTMSE) என்னும் கடன் உத்தரவாத நிறுவனம் மூலமாக காப்பீடு செய்யப்படுகிறது. இதனால், தொழில்முனைவோர் ஒருவேளை கடனைக் கட்டத் தவறினால், அவர்களது கடனில் ஒருபகுதியை    சி.ஜி.டி.எம்.எஸ்.இ வங்கிகளுக்கு இழப்பீடாகக் கொடுக்கும். இதனால், இந்தத் திட்டத்தின் மூலம் கடன் வழங்குவதில் வங்கிகளுக்கு எந்தத் தயக்கமும் இருக்காது. ஐ.ஓ.பி-யைப் பொறுத்தவரை, சிறு தொழில் நிறுவனங்களுக்கு நிறையவே கடன் தருகிறோம்.”   

“சிறு தொழில் நிறுவனங்களுக்கு நிறையவே கடன் தருகிறோம்!”

“கடன் பெறுவதில் எம்.எஸ்.எம்.இ-க்களின் தயக்கம் என்ன?”

“வங்கிகள் நிறைய ஆவணங்களைக் கேட்குமோ அல்லது கடன் அளிக்க நிறைய காலம் எடுத்துக்கொள்ளுமோ என்கிற தயக்கம் குறு, சிறு தொழில்நிறுவனங்களிடம் உள்ளது. மேலும், சரியான திட்டமிடல் இல்லாமல் தொழில் குறித்த ஆவணங்களைத் தயார் செய்வது, தங்களின் தொழில் திட்டம் என்ன என்பதை சரிவர விளக்காமல் இருப்பது போன்ற காரணங்களினால் வங்கிகளிடம் இருந்து அந்த நிறுவனங்கள் கடன் பெற முடியாத நிலை உருவாகும். வங்கிகளிடமிருந்து கடன் பெறுவது குறித்த விழிப்பு உணர்வு எம்.எஸ்.எம்.இ-க்களிடம் குறைவாகவே உள்ளது. கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்பு உணர்வை அதிகரிப்பதற்காக பல முகாம்களை நாங்கள் நடத்தி வருகிறோம். அதன் மூலம் பலன் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.’’

“எம்.எஸ்.எம்.இ கடன்களைப் பொறுத்தவரை, வாராக் கடன் என்பது பெரிய பிரச்னையாக இருக்கிறதா?”

‘‘Non Performing Asset என்கிற ஆங்கிலச் சொல்லை ‘வாராக் கடன்’ எனத் தமிழில் சொல்கிறார்கள். இது சரியான வார்த்தைப் பிரயோகம் அல்ல. Non Performing Asset என்பதை, செயல்பாடு இல்லாத அல்லது குறைவான செயல்பாடு உள்ள கடன் என்று வேண்டுமானாலும் சொல்லலாம். கொடுத்த கடனை வட்டியுடன் திரும்பப் பெற வேண்டும். தொழில்முனைவோர்கள் தங்களுக்குத் தேவையான கடன் பெற்று முன்னேற வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். பெரிய நிறுவனங்களுக்கு அதிகளவு கடன் வழங்கிவிட்டு, அவற்றைத் திரும்பப் பெற முடியாமல் சிக்கலில் மாட்டிக் கொள்வதைவிடவும், இதுபோன்ற சிறு நிறுவனங்களை நடத்திவரும் தொழில்முனைவோருக்குக் கடன் வழங்கி, எளிதில் திரும்பப் பெறுவதையே நாங்கள் விரும்புகிறோம்.

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களைப் பொறுத்தவரை, குறைவான தொகையைக் கடனாகப் பெற்றிருந்தாலும், அதனைத் திரும்ப அடைக்க முடியாதபோது மிகவும் அச்சப்படு கின்றனர். எப்படியாவது தொழிலை மேம்படுத்தி கடன் தொகையை அடைக்க வேண்டும் என்பதில் அவை முனைப்புடன் செயல்படுகின்றன.

சில சிறு, குறு நிறுவனங்கள் கடன் பாக்கி செலுத்த வேண்டியிருந்தால், வங்கியை அணுகுவதையே தவிர்த்துவிடுகின்றன. அதுபோல செய்யாமல், வங்கிகளைத் தைரியமாக அணுகினால், தகுந்த ஆலோசனையைத் தந்து, அவர்கள் கடனில் இருந்து மீண்டுவர வழிமுறைகளைச் சொல்லித் தருவோம். குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தால் கடனை அடைக்கவே முடியாது என்கிற சூழ்நிலை உருவானால் மட்டுமே, ரெக்கவரி நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்கின்றன. எனவே, கடனை திரும்பக் கட்ட முடியவில்லை என்றாலே, கடன் தந்த வங்கிகளைத் தவிர்க்க நினைக்கக் கூடாது.’’

‘‘எம்.எஸ்.எம்.இ கடன் தொடர்பாக ஐ.ஓ.பி என்னென்ன திட்டங்களை நடத்தி வருகிறது?’’

‘‘எம்.எஸ்.எம்.இ-களுக்கு நாங்கள் பல்வேறு திட்டங்களை நடத்தி வருகிறோம். புதிதாக தொழில் தொடங்கு பவர்களுக்கு ஐ.ஓ.பி மைக்ரோ ஒன் (10B MICRO ONE) என்கிற திட்டம் உள்ளது. இது தவிர, மகளிருக்கென ஐ.ஓ.பி மகிளா ப்ளஸ், ஐ.ஓ.பி. சாகர் லட்சுமி முதலிய சிறப்புத் திட்டங்களும் உள்ளன. தொழில் முறை சார்ந்த திட்டங்களாக ஐ.ஓ.பி கான்ட்ராக்டர், ஐ.ஓ.பி இன்ஜினீயர், ஐ.ஓ.பி சஞ்சீவி (டாக்டர்) திட்டங்களும் உள்ளன.

எஸ்.எம்.இ 300 என்ற புதிய திட்டம்              ஐ.ஓ.பி-யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு / குறுந்தொழில் நடத்துபவர்களின் தொழில் செய்யும் இடத்துக்கே வங்கியின் அதிகாரபூர்வ வியாபாரத் தொடர்பாளர்         (Business correspondent) சென்று, அவர்களுக்குத் தேவையான நிதி உதவியை அறிந்து கடன் வழங்குவார். இதன் மூலம் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். இதில் தவணைத் தொகைகளைத் திரும்பச் செலுத்த எங்கள் வங்கியின் வியாபாரத் தொடர்பாளர் அவர்களின் இடத்துகே சென்று தவணையைப் பெற்று, ரசீதும் வழக்குவர்.

தற்போது எங்கள் வங்கி கிளஸ்டர்ஸ் (clusters) என்கிற அடிப்படையில், கோவையில் டெக்ஸ்டைல் மற்றும் ஆட்டோ நிறுவனங்களுக்கும், சென்னை காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உள்ளடக்கிய புறநகர் பகுதிகளில் உள்ள ‘ஆட்டோ காம்போனென்ட்ஸ்’ உற்பத்தி செய்யும் துணை நிறுவனங்களுக்கும் கடன் உதவி அளித்து வருகிறது.’’

எம்.எஸ்.எம்.இ-களுக்கு அதிக அளவில் கடன் வழங்குவதன் மூலம் பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் ஐ.ஓ.பி-யின் பங்கு இன்னும் பெரிதாக இருக்கட்டும்!  

- நந்தினி சுப்பிரமணி

படங்கள்: ப.பிரியங்கா  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு