Published:Updated:

ரூ.2,000-க்கு பொருள் வாங்கினாலும் வரி கட்ட வேண்டுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரூ.2,000-க்கு பொருள் வாங்கினாலும் வரி கட்ட வேண்டுமா?
ரூ.2,000-க்கு பொருள் வாங்கினாலும் வரி கட்ட வேண்டுமா?

ஜி.எஸ்.டி கேள்வி - பதில்

பிரீமியம் ஸ்டோரி
ரூ.2,000-க்கு பொருள் வாங்கினாலும் வரி கட்ட வேண்டுமா?

ராஜா, சென்னை

நான் ஒரு ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறேன். ஜி.எஸ்.டி சட்டப்படி பதிவு செய்யாதவர்களிடம் பொருள்கள் வாங்கினால், பதிவு பெற்றவர் வரி செலுத்த வேண்டும். என்னுடைய நிறுவனத்துக்காக காகிதம் முதலிய எழுதுபொருள்கள் தினசரி வாங்க வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் தினமும் இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்க வேண்டும். இந்த சிறிய தொகைக்கும் வரி செலுத்த வேண்டுமா?

‘‘ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் வரை பொருள்களை நீங்கள் வாங்கினால் வரி செலுத்த வேண்டியதில்லை. ஒரு நாளைக்கு நீங்கள் வாங்கும் பொருள் 5,000 ரூபாயைத் தாண்டும் போது, அதைக் கணக்கில் வைத்துக்கொண்டு ஒரு மாதத்துக்கு மொத்தமாக வரி செலுத்தலாம்.’’

கண்ணன், மதுரை

எனது மொத்த விற்பனை ரூ.20 லட்சத்துக்கும்  கீழ் வருகிறது. அதனால் பதிவு செய்யவில்லை. வியாபாரத்துக்கான பொருள்களை ஜி.எஸ்.டி வரி செலுத்தித்தான் வாங்குகிறேன். மேலும், பொருள்களை விற்கும்போது, ஜி.எஸ்.டி வரி வசூல் செய்து ஏற்கெனவே செலுத்திய தொகைக்கு ஈடு செய்யலாமா?

ரூ.2,000-க்கு பொருள் வாங்கினாலும் வரி கட்ட வேண்டுமா?



‘‘நீங்கள் ஜி.எஸ்.டி செலுத்திப் பொருள்களை வாங்கியிருந்தாலும், ஜி,எஸ்.டி-யில் பதிவு செய்யாமல் எந்த ஒரு நபரும் அவருடைய வாடிக்கையாளரிடமிருந்து ஜி.எஸ்.டி வசூலிக்க முடியாது.’’

வரலட்சுமி,
தேனி.

என்னுடைய பழைய நகையைக் கொடுத்து புதிய நகை வாங்கும்போது நான் ஜி.எஸ்.டி கட்ட வேண்டுமா?


‘‘உங்கள் பழைய நகையை வியாபார அபிவிருத்தி செய்யும் நோக்கில் விற்காததால், நீங்கள் ஜி.எஸ்.டி கட்டத் தேவையில்லை. நகைக்கடைக்காரர் அந்த நகையை வாங்கும்போது அதற்கான வரியை ரிவர்ஸ் சார்ஜ் முறையில் செலுத்த வேண்டும். மேலும், புதிய நகை விற்கும்போது புதிய நகைக்கான வரியைக் கணக்கிட்டு ஏற்கெனவே ரிவர்ஸ் சார்ஜ் முறையில் செலுத்திய வரியை உள்ளீட்டு வரி வரவாக எடுத்துக்கொண்டு மீதி வரியைச் செலுத்த வேண்டும்.’’

சர்வேஷ், காரைக்குடி.

எனது மொத்த வர்த்தகம் என்பது ரூ.20 லட்சத்துக்கும் குறைவே. தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, கர்நாடகம், ஆந்திரா, மும்பை போன்ற இதர மாநிலங்களிலும் வியாபாரம் செய்து வருகிறேன். நான் ஜி.எஸ்.டி பதிவு செய்ய வேண்டுமா, ஏன்?


‘‘வெளி மாநிலங்களில் வியாபாரம் செய்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய்க்கும் கீழாக மொத்த வர்த்தகம் இருந்தாலும், பதிவு செய்வது கட்டாயமாகிறது. அரசு இந்த நடைமுறையைக் கொண்டுவந்ததன் காரணம், யாருக்குச் சரக்குகள் செல்கிறது என்பதையும், வர்த்தக மதிப்பு போன்றவற்றைக் கண்காணிக்கவும், வரி எந்த மாநிலத்துக்குச் செல்ல வேண்டும் என்பதை முறைப்படுத்தவுமே இந்த நடைமுறை.’’
 
சுந்தர வடிவேல், தஞ்சாவூர்.

நான் ஒரு கட்டடப் பொறியாளர். தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியாவின் பல மாநிலங்களில் கட்டுமானத் திட்டங்கள் செய்து வருகிறேன். நான் ஒரு பதிவு செய்தால் போதுமானதா அல்லது  கட்டுமானத் திட்டங்கள் செய்துவரும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனிப் பதிவு அவசியமா?

‘‘தமிழ்நாட்டில் தலைமை அலுவலகமாகக் கொண்டுக் கட்டுமானத் திட்டங்கள் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் கிளைகளை வைத்து நிறுவனத்தை நடத்தினால் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியாக ஜி.எஸ்.டி பதிவு செய்ய வேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் அலுவலகம் வைத்துக் கட்டுமானச் சேவையாகச்  செயல்படுத்தினால் தமிழ்நாட்டில் மட்டும் ஜி.எஸ்.டி பதிவு செய்தால் போதுமானது.’’

ரூ.2,000-க்கு பொருள் வாங்கினாலும் வரி கட்ட வேண்டுமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு