Published:Updated:

வங்கி லாக்கர், வீட்டு லாக்கர்... எது பெஸ்ட்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வங்கி லாக்கர், வீட்டு லாக்கர்... எது பெஸ்ட்?
வங்கி லாக்கர், வீட்டு லாக்கர்... எது பெஸ்ட்?

வங்கி லாக்கர், வீட்டு லாக்கர்... எது பெஸ்ட்?

பிரீமியம் ஸ்டோரி

ணம் இல்லாதவர்களுக்கு இன்னும் அதிகமாக எப்படி பணம் சம்பாதிப்பது என்கிற பிரச்னை. ஆனால், அதிக பணம் சம்பாதிப்ப வர்களுக்கு அல்லது வைத்திருப்பவர்களுக்கு அந்தப் பணத்தை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது மிகப் பெரிய பிரச்னை.   

வங்கி லாக்கர், வீட்டு லாக்கர்... எது பெஸ்ட்?

பணம் மட்டுமின்றி, இன்றைய சூழ்நிலையில் நகைகள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் எல்லோருக்குமே உள்ளது. நகைகள், ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வீடு அல்லது வங்கி லாக்கரை பயன்படுத்தலாம். ஆனால், ‘வங்கி லாக்­கரில் வைக்­கப்­படும் பொருள்­ க­ளுக்கு ஏற்­படும் இழப்­பு­க­ளுக்கு வங்­கிகள் பொறுப்­பேற்­காது’ என ரிசர்வ் வங்கி சமீபத்தில் சொன்னது பொது­மக்கள் மத்­தியில் பெரும் குழப்பத்­தையும், அதிர்ச்­சி­யையும்  ஏற்­ப­டுத்­தி­யது.

இதனால் லாக்கர் வசதியை வீட்­டி­லேயே அமைத்­துக்­கொள்­ளலாம் என்கிற கருத்து மக்கள் மத்தியில் சமீப காலமாக பரவி வருகிறது. நவீன வச­திகள் கொண்ட லாக்கர்கள் பல­வித வடி­வங்­களில் கிடைப்­பதால், வீட்­டி­லேயே லாக்கர் அமைத்து நகைகளையும் ஆவணங்களையும் அதில் வைக்­கலாம். இதுமட்டுமின்றி, வீட்டு லாக்கர்களை உடைத்து, அதிலுள்ள பணத்தையோ அல்லது நகைகளையோ எடுக்க முயன்றால்  உடனடியாக உரிமையாளருக்குக் குறுஞ்செய்தி மூலமாக அவருடைய மொபைல் ­போ­னுக்குத் தகவல் தெரி­விக்கும் வசதியும் வந்துவிட்டது. ஆனால், வீட்டில் லாக்கர் வசதி அமைப்­பது எளிது  என்­றாலும், செலவு என்பது முக்கியமான அம்சம். இந்த நிலையில், இந்த இரண்டு லாக்கர்களில், எது சிறந்தது என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த தனியார் வங்கி அதிகாரி எஸ்.சுந்தரராஜனிடம் கேட்டோம்.

வங்கி லாக்கர்

“வங்கியில், லாக்கர் வசதி யாருக்கு வேண்டு மானாலும் வழங்கப்படும். ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு லாக்கர்தான் என எந்தக் கட்டுப்பாடும் இல்லை. வங்கி லாக்கர் வசதியைப் பொறுத்து ஒன்றோ, அதற்கு மேற்பட்ட லாக்கரோ தரப்படும்.     
 
வங்கி லாக்கரில் வாடிக்கையாளர்கள் என்ன வைக்கிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். வங்கி லாக்கர் வசதியை வாடிக்கை யாளருக்கு வழங்கும்போதே, அதற்கான ஆவணத்தில் `வங்கி லாக்கரில் வைத்திருக்கும் பொருள்கள் காணாமல்போனால் வங்கிகள் அதற்குப் பொறுப்பாகாது’ என்ற விஷயத்தைக் குறிப்பிட்டு, அதில் வாடிக்கையாளரிடமிருந்து கையொப்பமும் வாங்கிக்கொள்வோம். இந்த நடைமுறை ஏற்கெனவே இருப்பதுதான். ஆனால், இப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த விஷயம் வெளிவந்துள்ளதால், இது புதிய விஷயம்போல, பலரும்  பரபரப்பாகப் பேசுகிறார்கள்.

ஆனால், வங்கி லாக்கரில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் இருக்கின்றன. தவறு நடப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஒவ்வொரு லாக்கருக்கும் தனித்தனி சாவிகள் உள்ளன. அவை வாடிக்கையாளர்களிடம் மட்டும்தான் இருக்கும்.

வங்கி லாக்கர் பராமரிப்புக் கட்டணத்தைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதில் பொதுத்துறை வங்கிகள் குறிப்பிட்ட ஒரு கட்டணத்தையும், தனியார் வங்கிகள் கொஞ்சம் அதிக கட்டணத்தையும் வசூலிக்கின்றன.

ஒவ்வொரு வங்கியிலும் வங்கி லாக்கர் அளவைப் பொறுத்துக் கட்டணம் மாறுபடும். பொதுத்துறை வங்கிகளில் வங்கி லாக்கருக்கு ரூ.2,000 மற்றும் ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் வங்கிகளில் ரூ.4,000 தொடங்கி  கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணமும் லாக்கரின் அளவைப் பொறுத்து அதிகபட்சம் ரூ.10,000 வரைகூட ஆகலாம். சென்னை போன்ற பெரு நகரங்களில் லாக்கர் கட்டணம் சற்று அதிகமாக இருக்கும். இதுவே நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என ஒவ்வொரு ஏரியாவுக்குத் தகுந்தமாதிரி வங்கி லாக்கர் கட்டணம் வேறுபடும். கிராமங்களில் ரூ.1,000-யில்கூட லாக்கர் வசதி உள்ளது.

வீட்டு லாக்கர்

வீட்டு லாக்கரில் உள்ள ஒரு நல்ல விஷயம், எப்போது வேண்டுமானாலும் நகை, ஆவணங்களை நாம் வைத்துக்கொள்ளலாம் அல்லது எடுத்துக்கொள்ளலாம். ஆனால், வீட்டில் உள்ள லாக்கர் எப்போதும் பாதுகாப்பாக இருக்குமா என்பது முக்கியமான கேள்வி. ஏனெனில், வீட்டு லாக்கரைப் பொறுத்தவரை, அந்த லாக்கரையே தனியாகப் பெயர்ந்து எடுத்துக்கொண்டு ஓடுவதற்குக்கூட வாய்ப்புகள் நிறையவே உண்டு. ஒரு சில லாக்கர்கள் மட்டுமே சுவருடன் இணைக்கப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும்.    

வங்கி லாக்கர், வீட்டு லாக்கர்... எது பெஸ்ட்?

குறைந்தபட்சம் 4,000 ரூபாயில் இருந்து, ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் என பல விதமான அளவுகளில், சிறப்பான தொழில்நுட்ப வசதி களுடன் கூடிய லாக்கர்கள் சந்தையில் கிடைக்கின்றன. இந்த லாக்கர்களில் குறுஞ் செய்தி, அலராம் வசதி உள்பட பல வசதிகள் இருக்கின்றன. எனினும், வீட்டில் லாக்கர் அமைக்கும்போது சி.சி.டி.வி கேமரா, தேவைப்பட்டால் அலராம் வசதி, இன்ஷூரன்ஸ் செலவு, பராமரிப்பு செலவு உள்பட செலவுகள் லட்சத்தைத் தாண்டும்” என்றார் அவர்.

வீட்டையும், வங்கியையும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. வீட்டில் நாம் வசிக்கிறோம், வங்கியில் நம்முடைய பொருள்களை மட்டுமே வைக்கிறோம். வாடகைக்கு இருக்கும் வீட்டில் பொருள்கள் காணாமல் போனால், வீட்டின் சொந்தக்காரரைப் பொறுப்பாக்க முடியாது.  இதுவே வங்கி லாக்கரில் நம்முடைய உடைமைகளை வைத்திருந்தால் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க நிறையவே வாய்ப்புண்டு.

வங்கி லாக்­கர்கள் பாது­காப்­பான சூழலில் அமைக்­கப்­பட்டு, தொடர்ந்து கண்­கா­ணிக்­கப்­படுகின்றன. எனினும், வாடிக்­கை  ­யா­ளர்கள் லாக்­கரைத் தேர்வு செய்யும்முன்,   வங்­கி­க­ளிடம் பாது­காப்பு ஏற்­பா­டுகள் குறித்துக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். வங்கிகள் கடை­சி­யாக லாக்கருக்கான பாது­காப்பு ஏற்­பா­டு­களை எப்­போது புதுப்­பித்­தது என்பதை வாடிக்­கை­யாளர் தெரிந்துகொள்­வது அவசியம்.

வீட்டு லாக்கர், வங்கி லாக்கர் மட்டுமின்றி, பல தனியார் நிறு­வ­னங்களும் லாக்கர் வச­தியை அளிக்­கின்­றன.  இவற்­றுக்­கான கட்­டணம், வங்கி லாக்கர் கட்­ட­ணத்தைவிட அதிகம்.

நீங்கள் எந்த லாக்கர் வச­தியைத் தேர்வு செய்­தாலும், நகைகள் உள்­ளிட்ட விலை உயர்ந்த பொருள்க­ளுக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பதே சரி.


- சோ.கார்த்திகேயன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு