Published:Updated:

பான் எண்ணைப் புரிந்துகொள்ளுங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பான் எண்ணைப் புரிந்துகொள்ளுங்கள்!
பான் எண்ணைப் புரிந்துகொள்ளுங்கள்!

பான் எண்ணைப் புரிந்துகொள்ளுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

நிரந்தரக் கணக்கு எண் அட்டை அல்லது பான் கார்டு (Permanent Account Number-PAN) என்பது தனிநபர், தொழில் நிறுவனங்கள் என பல தரப்பினரும் வருமான வரி செலுத்துவதற்காக வருமான வரித் துறையால் வழங்கப்படுகிறது. வங்கிக் கணக்கு, பங்கு, ஃபண்ட் முதலீடு, வீட்டுக் கடன், சொத்துகள் வாங்க என அனைத்து வகையான பயன்பாட்டுக்கும் பான் கார்டு அவசியம் என மத்திய அரசால் அறிவித்துள்ளது.   

பான் எண்ணைப் புரிந்துகொள்ளுங்கள்!

இந்த பான் என்பது பத்து இலக்கங்கள் கொண்டது. அந்த இலக்கங்கள் ஆங்கில எழுத்துகள் மற்றும் எண்களால் ஆனதாக இருக்கிறது. உதாரணமாக, ACAPO1205E என்ற எண்ணை எடுத்துக்கொள்வோம். இதில், எது ஜீரோ, எது ஓ (O) என்பதில் பலருக்குக் குழப்பம் ஏற்படும். பல நிதி ஆவணங்களுக்கு பான் கார்டு எண் பாஸ்வேர்டாக இருக்கிறது. இந்தக் குழப்பத்தினால் ஆவணங்களை விரைந்து திறப்பதில் சிக்கல் இருக்கிறது. பல நேரங்களில் ஆவணங்கள் திறக்க முடியாமல் லாக் ஆகிவிடவும் வாய்ப்பிருக்கிறது.

பான் கார்டில் உள்ள 10 இலக்கங்கள் எதனைக் குறிக்கின்றன எனத் தெரிந்து கொண்டால், எது எழுத்து, எது எண் என்கிற தெளிவு கிடைக்கும். இதனால் குழப்பம் வருவது தடுக்கப்படும்.  

பான் கார்டில் உள்ள இந்த பத்து இலக்கங்களில்  முதல் 5 இலக்கங்கள் ஆங்கில எழுத்துகளாகவும், அடுத்து நான்கு எண்களும், கடைசி இலக்கம் ஆங்கில எழுத்தாகவும் இருக்கும். 

இதில் முதல் 3 இலக்கங்கள்  ஆங்கில எழுத்துகளாக இருக்கும். உதாரணமாக, AAA அல்லது ZZZ என்பதாக இருக்கும். நான்காவது இலக்கம், இந்த அட்டை யாருக்கு வழங்கப் பட்டுள்ளது என்பதைக் குறிக்கும். அதாவது, தனிப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்ட கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்துக்கு வழங்கப் பட்ட கார்டா என்பதைக் குறிக்கும். 5-வது எழுத்து பான் கார்டு வைத்திருப்பவரின் பெயரின் முதல் எழுத்தாகும்.

ACAPO1205E-ல் 5-வது எழுத்து  ஓவியா (Oviya) என்கிற பெயரின் முதல் எழுத்து O ஆகும்.    

அடுத்துவரும் 6 முதல் 9 வரையிலான நான்கு இலக்கங்கள் 0001-ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி இலக்கம் ஆங்கில எழுத்து ஆகும். இனி பான் கார்டு எண்ணைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு குழப்பம் வராது தானே?

- சேனா சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு