பிரீமியம் ஸ்டோரி
BIZ பாக்ஸ்

முதலிடத்தைத் தவறவிட்ட ஜாக் மா!

சீனாவின் பெரும் பணக்காரர் என்கிற இடத்தை தொடர்ந்து பல ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டிருந்தார் அலிபாபாவின் ஜாக் மா. ஆனால், கடந்த ஆண்டில் அலிபாபாவின் பிசினஸ் கொஞ்சம் டல்லடிக்க, சீனாவின் மிகப் பெரும் ஆன்லைன் நிறுவனமான டென் சென்ட் நிறுவனம் அலிபாபாவை முந்திச்  சென்றிருக்கிறது. இதனால் முதலிடத்தில் இருக்கும் பெரும் பணக்காரர் என்கிற பெருமையை ஜாக் மாவிடமிருந்து பறித்திருக்கிறார் டென் சென்டின் மா ஹூவாடெங்க். இவரது சொத்து மதிப்பு 37.4 பில்லியன் டாலர். இது ஜாக் மா வைத்திருக்கும் சொத்து மதிப்பைவிட 1 பில்லியன் அதிகம். விட்ட இடத்தைப் பிடிச்சிடுங்க ஜாக் மா!

ஏலத்துக்கு வரும் ஆம்பி பள்ளத்தாக்கு!

BIZ பாக்ஸ்



ரூ.45 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் கைதான சஹாரா நிறுவனத்தின் அதிபர் சுப்ரதோ ராய், இந்த வழக்கிலிருந்து வெளியேவர வேறு வழியில்லாமல், தனக்குச் சொந்தமான ஆம்பி பள்ளத்தாக்கில் இருக்கும் ஆயிரக்கணக்கான வீடுகளை ஏலம் விட ஓப்புக்கொண்டிருக்கிறார். ஆம்பி பள்ளத்தாக்கில் பல ஆயிரம் சொகுசு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்தப் பள்ளத்தாக்கில் உள்ள எல்லா வீடுகளையும் ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, அப்பாவி மக்களுக்குச் சேர வேண்டிய பணத்தை திரும்பத் தர மும்பை உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வருகிறது! சீக்கிரம் செய்யுங்கய்யா!

BIZ பாக்ஸ்

வசூல் மன்னன்   அக்‌ஷய் குமார்!

ந்தி நடிகர்களில் வசூல் மன்னனாக இருக்கிறார் அக்‌ஷய் குமார். இவர் நடித்து, வெறும் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான ‘டாய்லெட்’ என்ற படம், ரூ.62 கோடிகளை சம்பாதித்துத் தந்தது. ‘ஜோலி எல்.எல்.பி’ என்கிற படம் ரூ.35 கோடியில்  தயாரானது. ஆனால், ரூ.117 கோடி ரூபாயை சம்பாதித்துத் தந்திருக்கிறது. கடந்த ஆண்டு அவர் நடித்து வெளியான படமும் செம வசூல் தான். ரூ.60 கோடியில் உருவான ‘ரஸ்தம்’ ரூ.127 கோடியும், ரூ.35 கோடியில் உருவான ‘ஏர்லிப்ட்’  ரூ.129 கோடியும் வசூலித்துத் தந்தது.

கலக்குங்க அக்‌ஷய்!

ஏற்றத்தில் இருக்கும் ஏற்றுமதி!

ம் நாட்டின் ஏற்றுமதியானது கடந்த 11 மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டின் ஜூலை மாதம் ஏறக்குறைய 21.68 பில்லியன் டாலர் மதிப்பு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.1,38,752 கோடி) கொண்ட பொருள்களை நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்தோம். இந்த ஆண்டின் ஜூலையில் 22.54 பில்லியன் டாலர் மதிப்பு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.1,44,252) கொண்ட பொருள்களை ஏற்றுமதி செய்திருக்கிறோம். மொத்தமுள்ள 30 துறை சார்ந்த பொருள்களில் 11 துறை சார்ந்த பொருள்களின் ஏற்றுமதி சரிவின் போக்கிலும், மீதமுள்ள 19 துறை சார்ந்த பொருள்களின் ஏற்றுமதி ஏற்றத்தின் போக்கிலும் இருக்கிறது. ஏற்றுமதியாளர்களே, இன்னும் நல்லாப் பண்ணுங்க!

BIZ பாக்ஸ்

போன் வசதி பெற்ற 121 கோடி பேர்!

ந்தியாவில் தொலைத் தொடர்பு வசதி பெற்றவர்களின் எண்ணிக்கை 121 கோடியை எட்டியிருக்கிறது. கடந்த மே மாதத்தில் 120.49 கோடி பேர் டெலிபோன் வசதி பெற்றிருந்தனர். இது கடந்த ஜூன் மாத முடிவில் 121.08 கோடியாக உயர்ந்துள்ளது. பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களில் ஏறக்குறைய 30 கோடி பேர் செல்போன் சேவையைப் பயன்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். தொலைபேசி சேவை தரும் மொத்தமுள்ள 11 நிறுவனங்களில் முதலிடத்தில் ரிலையன்ஸ் ஜியோவும், ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., வோடபோன், ஐடியா செல்லூலர் நிறுவனங்கள் அடுத்த இடங்களிலும் உள்ளன. அடேங்கப்பா...!

BIZ பாக்ஸ்

வாரன் வாங்கிய இந்திய நிறுவனம்!

ல்&டி-யின் துணை நிறுவனம்,  எல்&டி கட்டிங் டூல்ஸ். கட்டிங் டூல்களை உற்பத்தி செய்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான் இந்த நிறுவனத்தின் முக்கிய வேலை. இந்த நிறுவனத்தினை ரூ.169.46 கோடிக்கு வாங்கியிருக்கிறார் அமெரிக்காவின் பிரபல பங்குச் சந்தை நிபுணர், முதலீட்டாளர் வாரன் பஃபெட். 

வெல்கம் வாரன்ஜி!

நேற்று பான் கார்டு, இன்று ஆதார் கார்டு!

டந்த சில நாள்களுக்கு முன்பு 11 லட்சம் போலி பான் கார்டுகளை செல்லாமல் ஆக்கிய மத்திய அரசாங்கம், இப்போது 81 லட்சம் போலி ஆதார் கார்டுகளை ஒழித்துக் கட்டியிருக்கிறது. ஒருவரின் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் கார்டுகள் இருக்கும்பட்சத்தில், அந்த கார்டுகளை செல்லாமல் ஆக்குவதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பதினால், இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. உங்கள் ஆதார் கார்டு செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா, இல்லை என்பதை அறிய https://resident.uidai.gov.in/aadhaarverification இந்த லிங்கைத் தேடிச் செல்லுங்கள். உஷாரய்யா, உஷாரு!

10,000 கோடி - அரசு நிறுவனங்களில் உள்ள முதலீடுகளில் திரும்பப் பெறுவதில் மத்திய அரசாங்கம் இதுவரை பெற்ற தொகை!

.15,000 கோடி - உதய் திட்டத்தின் மூலம், நஷ்டத்திலிருந்த  மின் பகிர்மான நிறுவனங்கள் மிச்சப்படுத்திய தொகை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு