நம் எதிர்காலத்துக்கென சிறு தொகையாவது முதலீடு செய்வது அவசியம். இவ்வாறு நாம் செய்யும் முதலீடு பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அத்தகைய முதலீட்டைத்தான் நாம் ஸ்மார்ட் முதலீடு என்று அழைக்க முடியும். பங்குச் சந்தை முதலீடு அப்படியொரு ஸ்மார்ட் முதலீடாகும்.

நிறுவனப் பங்குகளில் முதலீடு

பொதுவாக, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சவால் நிறைந்தது. இருந்தாலும், கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த ஸ்மார்ட் முதலீட்டை வெற்றிகரமாக செய்யலாம்.

பங்கு நிறுவனங்களைப் பல வகையாகப் பிரிக்கலாம். உதாரணத்துக்கு, பெரும் நிறுவனப் பங்குகள், நடுத்தர நிறுவனப் பங்குகள், சிறு அல்லது குறு நிறுவனப் பங்குகள் எனப் பிரித்துப் பார்ப்பது ஒருவகை. நிறுவனங்கள் சார்ந்து இருக்கிற துறைகளின் அடிப்படையிலும் பிரித்துப் பார்க்கலாம். உதாரணமாக, உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனப் பங்குகள், வங்கிகள், ஆட்டோமொபைல், பார்மா பங்குகள், ஆடை தயாரிப்பு மற்றும் இதரப் பொருள்கள் தயாரிப்பு, பன்னாட்டு நிறுவனங்கள், வேளாண்மை துறை சார்ந்த நிறுவனங்கள் என ஒவ்வொரு துறையின் அடிப்படையிலும் நிறுவனங்களைப் பிரித்துப் பார்க்கலாம்.

பங்குச் சந்தைகளில் தொடர்ந்து சீரான முறையில் முதலீடு செய்யலாம். சந்தை சரிவைச் சந்திக்கும் நாள்களில் கூடுதல் தொகையை முதலீடு செய்வது புத்திசாலித்தனம்.

பங்குச் சந்தை ஃபண்டுகளில் முதலீடு

பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய விரும்பாதவர்கள், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் லிக்விட், கடன் சார்ந்தது, பேலன்ஸ்டு, ஈக்விட்டி எனப் பல வகை உண்டு. இதில் லிக்விட் ஃபண்ட் என்பது குறைந்த ரிஸ்க் கொண்டது. ஆண்டுக்கு சுமார் 7% வருமானம் இதில் கிடைக்க வாய்ப்புண்டு. நமது உடனடித் தேவைகளை இந்த முதலீட்டின் மூலம் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

கடன் சார்ந்த ஃபண்டுகள், பேலன்ஸ்டு ஃபண்டுகள் மிதமான ரிஸ்க் கொண்டவை. இவற்றில் 10-12% வருமானம் கிடைக்கக்கூடும். ஆனால், ஈக்விட்டி ஃபண்டுகள் அதிக ரிஸ்க் கொண்டவை. நீண்ட காலத்தில் இந்த ஃபண்டுகள் 12-15% வருமானம் தரக்கூடியவை.

பங்கு சார்ந்த ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யும்போது, மேனேஜர்கள் ஒரு குழுவாக ஒருங்கிணைந்து ஒவ்வொரு பங்கு நிறுவனம் பற்றியும் ஆராய்ச்சி மேற்கொள்வார்கள். அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பவர்கள், போட்டி நிறுவனங்கள் மற்றும் நிர்வாகத்தில் உள்ளவர்களுடன் கலந்தாலோசித்தபின்பே முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டிய பணத்தை அதில் முதலீடு செய்யும் முடிவை எடுப்பார்கள்.

பங்கு சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் நீண்ட கால அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தைப் பெறலாம். சந்தையின் ஏற்றத்தையும், இறக்கத்தையும் கண்டு பதற்றப்படத் தேவையில்லை.

கடந்த 15-20 வருடங்களில் ஃபண்ட் நிறுவனங்கள் தந்த லாபத்தைக் கவனித்துப் பார்த்தால், பங்குச் சந்தையும், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபன்ட்களும் நல்ல வருமானத்தைத் தந்துள்ளன என்கிற உண்மையை நமக்குத் துல்லியமாக எடுத்துச் சொல்லும்.

பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யும் போதும், பங்கு சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யும்போதும், சந்தை எப்போதெல்லாம் சரிவைச் சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் முதலீடு செய்வது புத்திசாலித்தனம்.

பங்குச் சந்தை முதலீடாக இருந்தாலும் சரி, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு முதலீடாக இருந்தாலும் சரி, குறுகிய காலத்துக்கு மட்டும் முதலீடு செய்வதை அறவே தவிர்ப்பது நல்லது. சிறு முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தொடர்ந்து முதலீடு செய்வது நல்லது. ஒவ்வொரு மாதமும் நாம் சேர்க்கும் தொகை குறைவாக இருந்தாலும், நீண்ட காலத்தில் நாம் சேர்த்த தொகை மிகப் பெரிய அளவில் பெருகியிருக்கும்.

தொகுப்பு: ஞா.சக்திவேல் முருகன்