குமரன், கோவை

பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கும்போது ஜி.எஸ்.டி கட்ட வேண்டுமா?

‘‘பங்குச் சந்தையிலிருந்து கம்பெனியின் பங்குகளை வாங்கும்போது ஜி.எஸ்.டி பொருந்தாது (Not applicable). இந்தப் பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி-யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு வரி ஏதும் கிடையாது.அதேநேரத்தில், தரகுக் கட்டணத்துக்கு 18% ஜி.எஸ்.டி கட்ட வேண்டி வரும்.’’

ரமேஷ், திண்டிவனம்

சிறு மற்றும் குறுந்தொழில் செய்து வருபவர்களுக்குத் தொகுப்பு வரி (Composition Scheme) என்கிற முறையில் விற்றுமுதல் ரூ.75 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. சேவைத் துறையில் இருக்கும் எனக்கு இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்குமா?

‘‘தொகுப்பு வரி (Composition Scheme), சிறு மற்றும் குறுந்தொழில் செய்து வருபவர்களுக்கு ஜி.எஸ்.டி- யால் எந்தவிதமான அசெளகரியமும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஏற்படுத்தப் பட்டதாகும். இது, சிறு வணிகர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களுக்கு மட்டும்தான் பொருந்தும். சிறு வணிகர்கள் எனில் 1%, சிறு உற்பத்தியாளர்கள் எனில் 2% என அவர்களுக்குரிய வரியைத் செலுத்தினால் போதுமானது. இதுதவிர, உணவகங்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி, தொகுப்பு வரியாக 5% செலுத்தலாம். இதற்கு உள்ளீட்டு வரி வரவு எடுக்க முடியாது. மேலும், சேவை புரிபவர்கள் இந்தத் தொகுப்பு வரி திட்டத்துக்குள் செல்ல முடியாது. ரூ.20 லட்சத்தைத் தாண்டும்பட்சத்தில் சேவைக்கான 18% வரியைச் செலுத்த வேண்டும்.’’

பாபுராஜ், கும்பகோணம்

ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்துவிட்டு, வியாபாரம் செய்யும் எனக்கு ஒரு வணிகக் கட்டடம் உள்ளது. அதை வாடகைக்கு விட்டிருந்தேன். இந்த வணிகக் கட்டடத்தில் ஐந்து வணிகர்கள் பல்வேறு தொழில் செய்துகொண்டு எனக்கு வாடகை தந்து வந்தனர். இந்த ஐந்து வணிகர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் 20 லட்சத்துக்கும் குறைவாக உள்ளதால், ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்யவில்லை. ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்யாத அவர்களிடமிருந்து ஜி.எஸ்.டி வரியை நான் வசூலிக்க இயலுமா?

‘‘நீங்கள் ஏற்கெனவே ஜி.எஸ்.டி பதிவு செய்துவிட்டதாக கூறியிருக்கிற நிலையில், அவர்கள் பதிவு செய்தாலும், பதிவு செய்யா விட்டாலும், நீங்கள் உங்களிடம் வாடகைக்கு இருக்கும் வணிகர்களிடம் ஜி.எஸ்.டியை ‘ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம்’ முறையில் வசூல் செய்து கட்ட வேண்டியது அவசியம்.’’

சண்முகம், கரூர்.

நாங்கள் பகிர்ந்தளிக்கக்கூடிய வேலைகளுக்கு மூலதன சரக்கான இயந்திரங்களையும், அதற்கான உதிரிப்பாகங்களையும் அளிக்கிறோம். இதனால் எங்களது உற்பத்தி அதிகரிக்கிறது. அவ்வாறு எங்களது மூலதன இயந்திரங்களை அளித்தால், எங்களுக்கு உள்ளீட்டு வரிப் பயன் உண்டா?

‘‘நீங்கள் கொடுத்துள்ள மூலதன இயந்திரங் களை, பகிர்ந்தளிக்கக்கூடிய வேலைகளுக்கான பணியாளர்களுக்கு (Job Workers) கொடுத்த போதிலும், அதற்கான உள்ளீட்டு வரிப் பயனை முழுமையாக எடுத்துக்கொள்ளலாம். எனினும், உங்களுக்கொரு நிபந்தனை உள்ளது. அது என்னவெனில், நீங்கள் கொடுத்த மூலதன இயந்திரங்களை, பகிர்ந்தளிக்கக்கூடிய வேலை களுக்கான பணியாளர்களுக்குக் (Job Workers) கொடுத்ததிலிருந்து மூன்றாண்டுகளுக்குள் திரும்பப் பெற வேண்டும் என்கிற ஒரு கட்டாயம் உள்ளது. மேலும், மூலதனப் பொருள்களின்மீது தேய்மானம் எடுத்திருந்தால், அதற்கு உள்ளீட்டு வரிப் பயன் எடுக்க முடியாது.’’

காசிராஜன், சென்னை

நான் ஏற்றுமதி வியாபாரத்தில் உள்ளேன். ஜி.எஸ்.டி-யின்படி ஏற்றுமதி சட்டத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?

‘‘ஏற்றுமதிக்கு முந்தைய விற்பனைக்கு தற்போதைய ஜி.எஸ்.டி சட்டத்தில் வரி விலக்கு கிடையாது. இன்வாய்ஸில் வரியைக் குறிப்பிட்டே விற்பனை செய்ய வேண்டும். ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் மற்றும் சேவைகள் பூஜ்ய விகித விநியோகமாக கருதப்படும். அதற்கு ஜி.எஸ்.டி வரி கிடையாது. ஏற்றுமதி செய்வதற்காக, கொள்முதல் செய்வதற்காக செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி-யை ஏற்றுமதியாளர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், ஏற்றுமதி இன்வாய்ஸ் மூலமாக ஏற்றுமதி செய்யப்படுகிறதா அல்லது ஒப்பந்தத்தின் கீழ் வரி செலுத்தாமல் ஏற்றுமதி செய்யப்படுகிறதா என்பதைத் தெரிவிப்பது அவசியம்.’’