Published:Updated:

பிஸினஸ் சமூகம்

பிஸினஸ் சமூகம்

பிஸினஸ் சமூகம்
பிஸினஸ் சமூகம்

வாழையடி வாழைதான் நம் சமூகம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கல்வியாகட்டும், தொழிலாகட்டும் அல்லது சடங்கு சம்பிரதாயமாகட்டும், அனைத்துமே எள்ளுப் பாட்டனில் ஆரம்பித்து கொள்ளுப் பாட்டனுக்கு, முப்பாட்டனிடமிருந்து தாத்தாவுக்கு, அப்பாவிடமிருந்து மகனுக்கு, மகனிடமிருந்து  பேரனுக்கு, கொள்ளுப் பேரனுக்கு...

##~##
இப்படி தலைமுறை தலைமுறை தாண்டித் தான் ஒவ்வொரு விஷயமும் கடந்து வந்து கொண்டிருக்கிறது.

சித்த மருத்துவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பாட்டனார் சித்த மருத்துவர்; அவரைத் தொடர்ந்து தாத்தாவும் சித்த மருத்துவர்தான். அவருக்குப் பிறகு அப்பாவும் திறமை வாய்ந்த  சித்த மருத்துவர்தான். அந்த பரம்பரையில் வந்த மகன் மட்டும் கைதேர்ந்த, புகழ்பெற்ற சித்த மருத்துவராக இல்லாமல் இருப்பாரா என்ன?

ஒருவேளை அவர் சித்த மருத்துவராக இல்லாமல் வேறு ஏதாவது ஒரு தொழிலுக்கு மாறியிருந்தால், அது அந்த குடும்பத்தினர் செய்த கட்டாயத்தின் பேரில் நடந்த ஒரு விஷயமாகத்தான் இருக்கும்.

பரம்பரை பரம்பரையாக ஒரே விஷயத்தை பற்றி சிந்தித்ததன் விளைவாக, சித்த மருத்துவம் என்பது அந்த பரம் பரையின் ரத்த அணுக்களான ஜீனில் ஒரு பகுதியாகவே மாறியிருக்கும். தற்போது அவர் வேறு ஒரு தொழிலில் இருந்தாலும், அவர் ரத்தத்தில் ஓடுவது சித்த மருத்துவ அறிவு என்பதால் அவர் மீண்டும் அந்தத் துறைக்கே வந்தாலும் ஆச்சரியமில்லை.  

இதே போலத்தான் இசையும். இசைக் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளும் தங்கள் பெற்றோர்களை போலவே நன்றாக பாடவும் ஆடவும் கலைகளில் சிறந்து விளங்கவும் காரணம், பரம்பரை பரம்பரையாக நடந்து வரும் இந்த திறமைக் கடத்தல்தான்.

பிஸினஸைப் பொறுத்தவரையும் இதுதான் உண்மை.

பிஸினஸுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பரம்பரையிலிருந்து வந்த ஒருவர் திடீரென பிஸினஸ் உலகில் புகுந்து பெரும் வெற்றி கண்டு விட மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். மருத்துவம் போல, இசை போல, விவசாயம் போல, பிஸினஸ் சம்பந்தப்பட்ட அறிவும் சாமர்த்தியமும் ரிஸ்க் எடுக்கக்கூடிய ஆர்வமும் ஒவ்வொருவரின் ரத்தத்திலும் இருந்தால் மட்டுமே பிஸினஸில் ஜெயிக்க முடியும். ஒரு குழந்தை கருவாக உருவாவதற்கு முன்பிருந்தோ அல்லது சிறு வயதில் இருந்தோ ஒரு வெற்றிகரமான பிஸினஸ்மேன் ஆவதற்குரிய தயாரிப்பு வேலைகள் நடக்கத் தொடங்கி விடுகின்றன.

இசை, சிற்பம் போன்ற கலைகளாக இருந்தாலும் சரி; மருத்துவம், ஜோதிடம் போன்ற அறிவியல் துறையாக இருந்தாலும் சரி; அதை கற்றுத் தருவதற்கு பள்ளிகளோ, கல்லூரிகளோ இல்லாத பழைய காலத்தில், அது பற்றி தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்ள  மிகச் சிறந்த இடமாக இருந்தது வீடுகள்தான். பெற்றோர் களும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர் களும்தான் தாங்கள் செய்து வரும் தொழில் பற்றி அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தரும் பிரதான ஆசிரியர்களாக இருந்தார்கள்.

பிஸினஸ் சமூகம்

தாய் மொழியைக் கற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் வாழ்க்கைக்கான தொழில் கல்விப் பயிற்சியும் தர ஆரம்பித்தார்கள். இந்த பயிற்சி சிறுவயது முதலே குடும்ப அமைப்பில் வழங்கப்பட்டதால், ஒரு இளைஞன் தனது முதல் இருபது வயதிலேயே அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கான வாழ்க்கையை நிர்ணயம் செய்து கொண்டான். இருபது வயதிற்கு மேல் அவன் பெறும் அனுபவத்தின் அடிப்படையில் புதிய வாழ்க்கை நோக்கி செல்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தாலும், முதல் இருபது வருடங்களில் ஒருவன் பெற்ற பயிற்சியே மீதமிருக்கும் அவன் வாழ்க்கைப் போக்கை நிர்ணயிப்பதாக அமைந்துவிடுகிறது.  

உலக வரலாற்றில் குடும்பம் என்பது தனியரு அங்கமாக எங்கும் இருக்கவில்லை. பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு சமூகமாகவே இருந்திருக்கிறது. இந்த சமூகங்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக அழைக்கப்பட்டன. அமெரிக்காவில் நிறத்தின் அடிப் படையில் இந்த சமூகங்கள் பிரித்து இனம் காணப் பட்டன. நம் நாட்டில் 'ஜாதி’ என்கிற பெயரில் இந்த சமூகங்கள் பிரித்து அடையாளம் காணப்பட்டன.

ஜாதி என்கிற அடிப்படையில் ஒரு சமூகம் பிரிந்து கிடந்தது பலவிதமான அசௌகரியங்களை ஏற்படுத்தினாலும் சில நன்மைகளையும் தரவே செய்தது. அதில் ஒன்றுதான், நாம் ஏற்கெனவே பார்த்த தலைமுறை தலைமுறையாக நடந்து வந்த திறமைக் கடத்தல்.

இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் இன்றிருக்கும் பல்வேறு சமூகங்கள் பல பரம்பரைகளாக பிஸினஸ் துறையில் எப்படி சிறந்து விளங்குகின்றன? பிஸினஸுக்குத் தேவையான அறிவும் பயிற்சியும் எப்படி தலைமுறை தலைமுறையாக கைமாற்றி கொண்டு செல்கின்றன என்பதை விளக்கமாகச் சொல்லத்தான் இந்தத் தொடர். இந்தத் தொடரில் தமிழகத்தில் உள்ள பிஸினஸ் சமூகங்கள் அனைத்தும் எடுத்துச் சொல்லப்படும். அந்த வகையில், நாம் முதலில் பார்க்கப் போவது நகரத்தார் என்று அழைக் கப்படும் நாட்டுக்கோட்டை செட்டி யார்களின் பிஸினஸ் வரலாறு பற்றி.  

(அறிவோம்)