Published:Updated:

முதலீடு: பணக்காரர் ஆகும் சைக்காலஜி!

கே.நீரஜா, டைரக்டர், பி.எஸ்.ஜி. இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் (பி) லிட்.

முதலீடு: பணக்காரர் ஆகும் சைக்காலஜி!
முதலீடு: பணக்காரர் ஆகும் சைக்காலஜி!

ணக்காரர்கள் மட்டும் வெற்றிகரமாக முதலீடு செய்கிறார்களே? அவர்களுக்கு மட்டும் தனி குணாதிசயங்கள் ஏதும் உண்டா என்கிற கேள்வி அனைவரின் மனதிலும் இருக்கும். பணக்காரர்களுக்கு என்று தனி குணாதிசயம் இருக்கிறதோ இல்லையோ, இங்கே சொல்லப்பட்டிருக்கும் குணாதிசயங்களை நிச்சயமாக அவர்கள் கொண்டிருக்கிறார்கள். அதே குணாதிசயங்கள் சாமானியர்களிடமும் இருந்தால் அவர்களும் பணக்காரர்தானே? அதற்கென்ன கியாரண்டி என்கிறீர்களா? படித்துப் பாருங்கள், நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சக்ஸஸ் சைக்காலஜி!

முதலீடு: பணக்காரர் ஆகும் சைக்காலஜி!

முதலீடு குறித்த விஷயங்களில் சைக்காலஜியும் மிகப் பெரிய பங்களிப்பைக் கொண்டுள்ளது என்பதை பல ஆய்வுகள் சொல்கின்றன. முதலீட்டாளர்கள் எந்தெந்த விஷயங்களை வைத்து எவ்வாறு தங்களுடைய முடிவுகளை எடுக்கிறார்கள் என்பது பற்றி பல ஆய்வுகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. டிரேடிங்கோ, முதலீடோ ரிஸ்க் இருப்பதால் அது ஒருவருடைய பணத்தை மட்டுமே சம்பந்தப்படுத்தப்பட்ட விஷயமாக இல்லாமல் மனதையும் சம்பந்தப்படுத்தும் விஷயமாகவே இருக்கிறது.

சூப்பர் பணக்காரர்களும், ஆவரேஜ்களும், சாமானியர்களும் போட்டி போடும் சந்தையில், வெற்றி பெறத் தேவையான குணாதிசயங்கள் என்னென்ன? பணக்காரர்கள் வெற்றி பெறுவதுபோல் சாமானியர்கள் ஜெயிப்பதற்கு என்று குணாதிசயங்கள் ஏதும் இருக்கின்றதா? அவற்றை அனைவரும் பெற முடியுமா? எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன்.

அவசரப்படேல்!

##~##
சந்தையின் மூவ்களை லாங் டேர்மாகிய 10 அல்லது 15 வருட சைக்கிளாக கணக்கிட்டுக் கொண்டு நன்கு ஆராய்ந்து பார்த்தால் ஒரு விஷயம் உங்களுக்குத் தெளிவாகப் புரியும். சந்தை ஏற ஆரம்பித்தால் துரத்தி துரத்தி ஷேர்களை வாங்குவதும், அதே ஷேரை விலை இறங்க ஆரம்பித்தால் துரத்தி துரத்தி விற்பதும்தான் பொதுவாக நடக்கிறது. இந்த 10-15 வருட காலகட்டத்தை விட்டுவிட்டு ஒரு வருடம், ஆறு மாதம், மூன்று மாதம், மூன்று நாள் என்று பார்க்கப் போனால் மட்டுமே விலைகளின் போக்கை நாம் புரிந்து கொள்வதும், வியாபாரம் செய்வது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது. ஷார்ட் டேர்மில்தான் ஏற்ற இறக்கங்கள் (வாலட்டைலிட்டி) அதிகமாக இருக்கிறதே தவிர, லாங் டேர்மில் ஒரு தெளிவான டைரக்ஷனில் செல்வதையே சந்தை பாரம்பரியமாக கொண்டுள்ளது.

தவறுகளிலிருந்து கற்க வேண்டும்!

பொதுவாக மனிதர்கள் எப்போதும் விவேகத்துடனேயே (ரேஷனல்) செயல்படுவார்கள். சந்தைக்கு வரும்போது நஷ்டம் பண்ண வேண்டும் என்று யாரும் வருவதில்லை என்பது ஒருவிதமான விவேகம். இரண்டாவதாக, மனிதர்கள் தங்கள் தவறுகளில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். மூன்றாவதாக, மற்றொருவர் ஒரு விஷயத்தைச் செய்கிறார் என்பதற்காக மனிதர்கள் ஒரு விஷயத்தில் இறங்குவதில்லை.

என்ன குழப்புகிறதா? ரொம்பவும் சிம்பிளான விஷயம்தான். ஒரு உதாரணத்தை இதே ஆர்டரில் பார்ப்போம். 1) நீங்கள் நெருப்பில் வேண்டுமென்றே கையை வைக்க மாட்டீர்கள். 2) ஒருமுறை நெருப்பில் கையை தவறி வைத்துவிட்டீர்கள் என்றால், அது சுடும் என்று கற்றுக்கொண்டு அதன் அருகே செல்லும்போது முன்ஜாக்கிரதையுடன் இருப்பீர்கள். 3) உங்கள் நண்பரொருவர் நெருப்பில் கையை வைக்கிறார் என்பதற்காக, நாமும் வைத்தால் என்ன என்று நினைத்து நெருப்பில் கையை வைக்க மாட்டீர்கள்.

மேற்சொன்ன தியரியை விரிவாகப் பார்க்கும்போது நீங்கள் மூன்று ரூல்களையும் ஸ்ட்ரிக்டாக ஃபாலோ செய்கிறீர்கள் என்றால், உங்களைச் சுற்றியிருக்கும் சராசரி மனிதர்களுக்கும் (அக்கம் பக்கம், அலுவலகம் என) இந்த ரூல் பொருந்தும்தானே!? அதனால், உங்களைத் தனியாகவோ, உங்களைச் சுற்றியுள்ள நபர்கள் அனைவரையும் சேர்த்து கூட்டாகவோ எடுத்துக் கொண்டால் அனைவரும் இந்த ரூலை ஃபாலோ செய்வார்கள்தானே?

ஆனால், நிஜத்தில் என்ன நடக்கிறது. சிங்கம் சிங்கிளாய் வந்தால் ஒரு குணாதிசயத்துடன் இருக்கின்றது. சிங்கங்கள் கூட்டமாய் வந்தால் அது சந்தையில் ஆட்டுமந்தையாய் மாறிவிடுகிறது இல்லையா? கூட்டமாக வந்தால் குணம் மாறிப் போகிறது. அதனால் சந்தை முதலீட்டில் மனிதனுடைய குணாதிசயங்கள் நாம் பொதுவாக எதிர்பார்க்கும் (முன்னே சொன்ன மூன்றேதான்) அளவில் இருப்பதில்லை. இருப்பதற்கு உண்டான சாத்தியம் எப்போதும் வரப்போவதும் இல்லை. ஆனால், நீங்கள் ரேஷனல் ஆக செயல்பட வேண்டும்; தவறுகளில் இருந்து கற்க வேண்டும்; மற்றொருவர் செய்கிறார் என்பதற்காக ஒரு விஷயத்தை நாம் செய்யக்கூடாது என்பதை தெளிவாக உணர்ந்திருக்க வேண்டும்.

சூழ்நிலைக்கேற்ப மாறுங்கள்!

அடுத்தபடியாக, சந்தை என்பது ஒரு கூட்டம் என்பதை அனைவரும் அறிவீர்கள். இந்த கூட்டத்தின் மொத்த அங்கத்தினருமே முன்னே சொன்ன மூன்று ரூல்களை ஸ்ட்ரிக்ட்டாக பொருந்தி வருபவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது மார்க்கெட் ஏறும் என்றோ அல்லது இறங்கும் என்றோ சொன்னால் உங்களைச் சுற்றி இருப்பவர்களும் ஆமாம், ஆமாம் என்று தலையாட்டுவார்கள். ஏன் தெரியுமா? நீங்களும் உங்களைச் சுற்றி இருப்பவர்களும்தான் ரேஷனலாக (விவேகத்துடன்) செயல்படுபவர்கள் ஆயிற்றே!

உங்களுக்குச் சந்தை இறங்கும் என்று தோன்றினால் ரூல்படி அனைவருக்கும் அப்படித்தானே தோன்ற வேண்டும். 'இல்லையே, நான் ஒரு ஷேர் வாங்கினா, என் பக்கத்து சீட்டுக்காரர் அதே ஷேரை விற்கிறாரே!’ என்கிறீர்களா? இதிலிருந்து என்ன தெரிகிறது? நீங்கள் அடுப்பு நெருப்பில் கையை வைத்தால், உங்க பக்கத்து சீட்டுக்காரர் அடுப்பை பெரிதாக எரிய வைக்கிறார். நீங்கள் காளை (புல்). உங்கள் பக்கத்துச்  சீட்டில் அமர்ந்திருப்பவர் கரடி (பியர்).

முதலீடு: பணக்காரர் ஆகும் சைக்காலஜி!

சந்தை இருப்பதற்கு ஆதாரமே காளை, கரடிகளுக்கு இடையே இருக்கும் இந்த எண்ண மாறுதல்கள்தான். ஏறும் என்று நீங்கள்  நினைக்க, இறங்கும் என்று உங்கள் பக்கத்து சீட்டில் இருப்பவர் நினைக்கிறார். அப்படி இல்லாமல் அனைவருமே ரேஷனலாக நினைத்து ஒரு சமயத்தில் புல் ஆக மட்டுமே மாறினால் சந்தையில் ஷேரை விற்கவும், பியர் ஆக மட்டுமே மாறினால் ஷேரை வாங்கவும் ஒருவரும் இருக்க மாட்டார்கள். மொத்தத்தில் சந்தையே இருக்காது. நேரெதிராக மாறுபடும் எண்ணங்களால்தான் சந்தை என்பதே சாத்தியமாகிறது. என்னதான் பார்த்து பார்த்து அனலைஸ் செய்து முதலீடு செய்தாலும், ஏதோ ஒரு விஷயத்தை நீங்கள் விட்டுவிடுகிறீர்கள். நீங்கள் விட்ட அந்த விஷயம்தான் மற்றவருக்குத் தெரிந்துள்ளது. எல்லா காலகட்டத்திலுமே உங்களுக்குத் தெரியாத ஒன்று சந்தையில் இருக்கிறது. அந்தத் தெரியாத ஒன்றுதான் உங்கள் லாப நஷ்டத்தை முடிவு செய்கிறது.

இப்படி தெரியாத ஒன்று உங்களுடைய லாப-நஷ்டத்தை முடிவு செய்வதால் முதலீட்டினை செய்யும்போது,  பரிட்சைக்கு படிக்காமல் போவதைப் போலவே பதற்றத்துடன் சந்தையில் முதலீடு செய்கிறீர்கள். இந்த பதற்றத்தினால் வரும் பயம் வெற்றிக்கு ஒரு தடையாகும். இந்த பயத்தைத் தவிர்க்க முதலில் நமக்கு சந்தை குறித்த அத்தனை விஷயங்களும் அத்துப்படியாகவும் அப்டேட்டாகவும் இருக்க வேண்டும். இதையும் தாண்டி வரும் சில நிச்சயமில்லாத நிலை வரும். அதன் பாதிப்புகளைத் தாங்கும் சக்தி உங்களிடம் இருக்க வேண்டும்.

பெருமிதம் கூடாது!

உங்கள் முதலீட்டில் லாபம் வரும்போது உங்கள் நடைஉடை பாவனையே  மாறிவிடும்! சம்பாதித்தப் பணத்தைவிட பல மடங்கு பெருமிதம் உங்களுக்குள் வந்து குடி புகுந்துவிடும். நாளடைவில் இந்த பெருமிதம் என்பது ஒரு பெரிய ரிஸ்க்காய் மாறி உங்களை கட்டிப் போட்டுவிடும். சரி, நஷ்டம் வந்தால்..? லாபம் வந்தபோது எந்த அளவிற்கு அதிகமாகப் பெருமிதம் வந்ததோ, அதே அளவிற்கு ஏக்கமும் கவலையும் உங்கள் மனதில் வந்து உட்கார்ந்துவிடும். இந்த ஏக்கம் மற்றும் கவலையின் மிக்ஸ்தான் பயம். இந்த பயம் உங்கள் மனதில் வந்து குடிகொண்டுவிட்டால் உங்கள் வீட்டின் வாசல்படியைக்கூட உங்களால் தாண்டிக் குதிக்க முடியாது. விழுந்து கைகால் உடைஞ்சிடுமோ என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

உங்கள் முதலீட்டின் சிறப்பான செயல்பாடு என்பது உங்களால் வந்ததில்லை. அந்த கம்பெனியின் செயல்பாட்டால் வந்தது என்பதைப் புரிந்து கொண்டாலே பெருமிதம் வரவே வராது. நூறு விப்ரோ ஷேரை அலாட்மென்டில் வாங்கி இன்றுவரை கையில் (போனஸ், பங்குப் பிரிப்பு போன்ற எல்லாவற்றுடன்) வைத்துக் கொண்டு நான்தான் புத்திசாலி என நினைக்கக் கூடாது. லாபம் தந்தது விப்ரோவின் மேனேஜ்மென்ட்தான். வாங்கிப் போட்டது மட்டுமே நீங்கள் செய்தது என்பதில் தெளிவாய் இருங்கள்.

முதலீடு: பணக்காரர் ஆகும் சைக்காலஜி!

டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, திட்ட இயக்குநர், சந்திராயன்

சேமிப்பது எவ்வளவு தூரம் முக்கியமோ, அதைவிட முக்கியம் அதை சரியான இடத்தில் முதலீடு செய்வது என்பதை நாணயம் விகடன் அருமையாகச் சொல்லித் தருகிறது. இதை தவிரவும் பலதரப்பட்ட மக்களுக்கும் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் சொல்லித் தருகிறது நாணயம் விகடன்.

குழந்தைபோல பழகுங்கள்!

பங்குச் சந்தையில் நிறைய பணம் பண்ண ஆசைப்படுகிறோம். ஆனால், அதன் சூட்சுமத்தை என்றைக்காவது படித்திருக்கிறோமா? பிறந்து ஒரு வயதான குழந்தையை கொஞ்சம் உற்றுப் பாருங்கள்! ஒரு டேபிளையோ, சுவரையோ கவனத்துடன் பிடித்து, ஒவ்வொரு ஸ்டெப்பையும் அதிக கவனத்துடன் எடுத்து வைக்கும்.  

அதே குழந்தை நன்றாக நடை பழகிய பின்னர் திரும்பவும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்குமா? வைக்காது. ஏனென்றால் நடப்பது பற்றிய அத்தனை தகவல்களையும் தன் மூளை மூலம் ஆழ்மனதில் செலுத்தி பதிவு செய்துவிட்டது. அதனாலேயே வளர்ந்த குழந்தைக்கு நடப்பது என்பது பார்த்து பார்த்து செய்ய வேண்டிய ஒரு விஷயமாக இல்லாமல், தற்செயலாக நடக்கும் ஒரு விஷயமாக மாறிப் போய்விடுகிறது. அதுபோல் நீங்களும் சந்தையில் சம்பாதிக்க என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை உங்கள் ஆழ்மனதில் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள்!

இங்கே கூறப்பட்டுள்ளவை சில அடிப்படை விஷயங்கள்தான். இவற்றைச் சரியாக கடைப் பிடித்தாலே நீங்களும் பணக்கார முதலீட்டாளராக மாற நிச்சயம் வாய்ப்பிருக்கிறது.

முயற்சி செய்துதான் பாருங்களேன்.