Published:Updated:

தங்கம் - இன்னும், இன்னும் வேண்டும்!

தங்கம் - இன்னும், இன்னும் வேண்டும்!

தங்கம் - இன்னும், இன்னும் வேண்டும்!
தங்கம் - இன்னும், இன்னும் வேண்டும்!

பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு அறிவிப்பு வந்ததும் கொதித்துப் போன மக்கள், தங்கம் விலை மட்டும் எவ்வளவு ஏறினாலும் கலவரப்படுவதே இல்லை. தங்கம் விலை உயர உயர அது இன்னும், இன்னும் வேண்டும் என்று வாங்கத் துடிக்கிறார்கள். தமிழகம் முழுக்க உள்ள பல்வேறு நகைக் கடைகளுக்கு ஒரு திடீர் விசிட் அடித்த போது நமக்கு புரிந்த உண்மை இதுதான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##
''ப
த்து வருஷத்துக்கு முன்னால 4,000 ரூபாய் இருந்தாலே  ஒரு பவுன் தங்கம் வாங்கிடலாம். ஆனா, இப்ப வருடம் முழுக்க பணம் சேர்த்துத்தான் தங்கம் வாங்க வேண்டிய நிலைமை. ஏழை மக்களையும், நடுத்தர  மக்களையும், ஏறிக் கிடக்கிற தங்கத்தோட விலை ரொம்பவே பாதிச்சிருக்கு. சமீப காலமா தங்கத்துல முதலீடு செய்றவங்க எண்ணிக்கை ரொம்பவே அதிகமாயிடுச்சு. இதை பயன்படுத்தி நிறைய நகைக் கடைகள், முதலீடு செய்றதுக்காக நிறைய திட்டங்களையும் கொண்டு வந்திருக்காங்க. இதனால எல்லா நகைக் கடைகளிலேயும் கூட்டம் நிரம்பி வழியுது. என்னை கேட்டா, தங்க முதலீடு இன்னைக்கு பெஸ்ட் முதலீடு'' என்றார் சென்னையைச் சேர்ந்த ரத்னா சுரேஷ்.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த லதாவின் கருத்தும் இதேதான். ''தற்போது பணத்தை நிலத்தில் முதலீடு செய்வதைக் காட்டிலும், தங்கத்தில் முதலீடு செய்யத்தான் மக்கள் அதிகம் விரும்புறாங்க. காரணம், அவசரத்திற்கு நிலத்தை அடகு வைத்து கடன் பெற முடியறதில்லை. ஆனா, தங்கத்தை வெளியிலோ அல்லது வங்கியிலோ ஈஸியாவச்சு கடன் வாங்கிட முடியுது. தங்கத்தை மக்கள் விரும்புறதுக்கு இதுதான் காரணம்.

தங்கம் - இன்னும், இன்னும் வேண்டும்!
தங்கம் - இன்னும், இன்னும் வேண்டும்!

2007-ல ஒருத்தர் 10 பவுன் தங்கம் வாங்கியிருந்தார்னா, இப்போ அவரால அந்த பணத்துல நாலு பவுன்தான் வாங்க முடியும். அதுவும் இப்போ, நகையா வாங்குறதைவிட காயினா வாங்குறதைதான் மக்கள் விரும்புறாங்க. நகையை கழுத்துல, காதுல போட்டுக்கணும்கிற ஆசையைவிட, அதை சேமிக்கணும் அல்லது முதலீடு பண்ணனும்னுதான் நினைக்கிறாங்க. எனக்கும் அதுதான் சரின்னுபடுது'' என்றார்.

''தங்கம் விலை குறையல்லன்னாலும் பரவாயில்லை, இப்ப இருக்கிற விலை இன்னும் அதிகரிக்காம இருந்தாலே போதும்'' என்று ஆரம்பித்தார் சென்னையைச் சேர்ந்த குடும்பத் தலைவியான ருக்மணி சிவசங்கர். ''எனக்கு கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கிறாள். என் கணவர் தனியார் நிறுவனத்தில வேலை பார்த்துட்டு இருக்காரு. தங்கம் இப்ப விக்கிற விலையில அவள் கல்யாணத்திற்கான நகைகளை எப்படி வாங்கப் போறேன்னு தெரியலை.  இருந்தாலும் எங்களுக்கு இருக்கிறதே ஒரே ஒரு பொண்ணுதான். அவள் கல்யாணத்தை நிறைவா செஞ்சு பார்க்கணும்ங்கிறது ஆசை. இந்த வருஷத்தோட ஆரம்பத்துல தங்கத்தோட விலை இறங்கும்னு நெனச்சு காத்துகிட்டிருந்தேன். இப்படி இருந்தா வருஷந்தான் போகுதுன்னு நெனச்சு தங்கம் வாங்க வந்துட்டேன்'' என்றார் குதூகலமாக.

தங்கம் - இன்னும், இன்னும் வேண்டும்!

பெண்களின் கருத்து இப்படி என்றால், தங்கம் வாங்குவது பற்றி ஆண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய நினைத்தோம். தனியார் நிறுவனம் ஒன்றின் எம்.டி.யாக இருக்கும் முனிரத்தினத்திடம் பேசினோம். ''இதுக்கு முன்னாடி ஒரு வருஷத்துல பத்து சவரன் நகை வாங்குறது வழக்கம். ஆனா இந்த வருஷம் மூணு சவரன்தான் வாங்க முடிஞ்சிருக்கு.  அடுத்த வருஷம் விலை குறையுமுன்னு சொல்றாங்க. அதனால அடுத்த வருஷத்தில தங்கத்தோட விலை எப்படி இருக்கும்னு பார்த்துட்டு வாங்கலான்னு இருக்கேன்'' என்றார் கொஞ்சம் சலிப்போடு.

மக்களின் கருத்துகள் இப்படியிருக்க, நகைக் கடை அதிபர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள, சென்னை நகைகள் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜெ.சலானியிடம் பேசினோம்.

தங்கம் - இன்னும், இன்னும் வேண்டும்!

''2010 ஜூன், ஜூலையில்தான் தங்கத்தின் விலை ஏறத் தொடங்கியது. 2011-ல் மட்டும் கிராமுக்கு 800 ரூபாய் கூடியது. மூன்று விஷயங்களுக்காக தங்கத்தை வாங்குவது அதிகமாக இருக்கிறது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்காக நகை வாங்குவது, முதலீட்டு அடிப்படையில் வருங்காலத்திற்காக தங்கத்தை வாங்கிச் சேமிக்கிறது, விலை அதிகரிப்பதன் எதிரொலியாக இன்னும் விலை அதிகரிக்குமோ என்ற பதற்றத்தில் வாங்குவது. முன்பு அதிகமாக ஆபரணங்கள் வாங்கின மக்கள், இப்போது தங்க காயின் மற்றும் கட்டிகளாக வாங்கி சேமிக்கிறார்கள்'' என்றவரிடம், '2012-ல் தங்கத்தின் விலை எப்படி இருக்கும்? என்று கேட்டோம்.

''கண்டிப்பாக ஏற்றமாகத்தான் இருக்கும். உலகளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதன் எதிரொலியாக விலை அதிகரிப்பதற்கான காரணிகள்தான் அதிகமாக உள்ளது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியும் சத்தமில்லாமல்  விலை ஏறுது. 2002-ல் 100 கிலோ வெள்ளி 7 லட்ச ரூபாய். இன்னைக்கி அதன் மதிப்பு 55 லட்சம் ரூபாய். அதனால முதலீடு நோக்கத்துல வாங்க நினைக்கிறவங்க தங்கம் மட்டும் வாங்காம வெள்ளியும் வாங்கலாம்' என்றார்.

தங்கம் - இன்னும், இன்னும் வேண்டும்!

தங்கம் விலை எகிறிக் கிடக்கும் நிலையிலும் மக்களின் வாங்கும் திறன் எப்படியிக்கிறது என  லலிதா ஜுவல்லரி நகைக் கடையின் நிர்வாக இயக்குநர் கிரண்குமாரிடம் கேட்டோம். ''கடந்த வருடத்துல அதிகப்படியான விலை ஏற்றயிறக்கம் இருந்தது. ஆனா விலை ஏற்றத்துனால மக்களிடம் வாங்கும் திறன் குறையலை. அவங்க எப்போதும் தங்கள் தேவைக்கு வாங்கிட்டுதான் இருக்காங்க. எப்போதும் போல ஆபரணங்களாக வாங்குறாங்க. ஆனா, தங்க காயின்கள் வாங்குவது இந்தாண்டில்தான் அதிகரிச்சிருக்கு. பழைய நகைகளை மாற்றி புதிதாக்கி கொள்றது, திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு வாங்குறது என எப்போதும் போல மக்கள் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். விலையேற்றம் தங்கத்தின் மீதான மோகத்தை மக்களிடையே அதிகரித் துள்ளதே தவிர குறையவில்லை'' என்றார்.  

2012-லாவது தங்கத்தின் விலை குறைந்தால் குந்துமணி அளவுக்காவது வாங்கிப் போடலாமே என்பதுதான் சாதாரண மக்களின் எதிர்பார்ப்பு!

-பானுமதி அருணாசலம்,
அ.முகமதுசுலைமான்,  கு.சக்திவேல் படங்கள் : என்.விவேக், அ.ரஞ்சித்குமார்

தங்கம் - இன்னும், இன்னும் வேண்டும்!

ஈஸி முதலீடு!

தங்கத்தை முதலீட்டு நோக்கில் மட்டுமே வாங்க நினைப்பவர்கள் அதை தங்கக் காசுகளாகத்தான் வாங்க வேண்டும் என்றில்லை. கோல்டு மியூச்சுவல் ஃபண்ட், கோல்டு இ.டி.எஃப்., இ-கோல்டு போன்ற திட்டங்களிலும் தாராளமாக முதலீடு செய்யலாம்.

கோல்டு மியூச்சுவல் ஃபண்ட்!

சாதாரண மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை போன்றதுதான் இது. பான் நம்பர் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் இதில் முதலீடு செய்யலாம். ஒரு மாதத்திற்கு நூறு ரூபாய் முதல் எத்தனை ஆயிரம் ரூபாயை வேண்டுமானாலும் இதில் போடலாம். உங்களுக்கு பணம் வேண்டும் என்கிறபோது ஏற்கெனவே வாங்கிய யூனிட்களை திரும்பத் தந்து, பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

கோல்டு இ.டி.எஃப்.!

பங்குகளை வாங்க பயன்படும் டீமேட் கணக்கு உங்களிடம் இருந்தால் மட்டுமே இந்த கோல்டு இ.டி.எஃப்.-ல் நீங்கள் முதலீடு செய்ய முடியும்.

இ-கோல்டு!

நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் இ-கோல்டு திட்டத்திலும் சேர்ந்து நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இதற்கு தனியாக டீமேட் கணக்கு தொடங்க வேண்டும். இதில் நீங்கள் முதலீடு செய்த பணத்தை தங்கமாகவே டெலிவரி எடுத்துக் கொள்ள முடியும். தங்க நகை, தங்கக் காசு தவிர வேறு வகையில் தங்க முதலீடு செய்ய நினைக்கிறவர்கள் இந்த முதலீட்டை மனதில் வைத்துக் கொள்வது அவசியம்!

''2012-ல் இன்னும் அதிகரிக்கும்!''

தங்கம் - இன்னும், இன்னும் வேண்டும்!

ஞானசேகர் தியாகராஜன், நிர்வாக இயக்குநர், காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட், மும்பை.

''2012-ல்  அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல்களால் தங்கத்தின் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் இருக்கிறது. இதுபோன்று நாடுகளில் ஏற்படும் சிக்கல்களால் அங்கிருக்கும் வங்கிகளின் நிலைமையும் மோசமாகி வருகிறது. இதனால் கையிலிருக்கும் முதலீடு, தங்கம் போன்றவற்றை விற்று அதற்கு பதில் டாலரை வாங்கி வைக்கின்றனர். அதனால் அடுத்த வருஷமும் தங்கத்தின் விலை அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருக்கும்.

ரூபாயின் மதிப்பு குறைந்தால் நம் நாட்டில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. ரூபாயின் மதிப்பு அதிகரித்தால் தங்க விலை அதிகரிக்கும். 2012 முதல் அரையாண்டில் பத்து கிராம் தங்கம் 26,000-27,000 ரூபாய் வரை போக வாய்ப்பிருக்கிறது. ஜூலைக்குப் பிறகு 30,000 ரூபாய் வரை போக வாய்ப்பிருக்கிறது. வெள்ளியைப் பொறுத்தவரை தங்கத்தைவிட விலை அடுத்த வருடம் ஏற்றயிறக்கம் அதிகமாக இருக்கும். ஆண்டின் முதற்பாதியில் ஒரு கிலோ 45,000 ரூபாயாக இருக்க வாய்ப்பிருக்கிறது''.

குறையும் மவுசு!

ன்னதான் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கம் வாங்குவது போல நமக்குத் தெரிந்தாலும் அதிக பணவீக்கம், தங்க விலை ஏற்றயிறக்கம் போன்ற காரணத்தால் இந்தியாவில் மூன்றாம் காலாண்டில் ஆபரணத் தங்கத்திற்கான டிமாண்ட் 26% குறைந்துள்ளதாகச் சொல்கின்றன புள்ளிவிவரங்கள்.

பண்டிகை மற்றும் திருமண சீசன் காலத்தில் மட்டும் சற்று டிமாண்ட் அதிகரித்ததாக வேர்ல்டு கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆனால், உலகளவிலான டிமாண்ட் மூன்றாம் காலாண்டில், கடந்த வருடத்தைவிட 33% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.