Published:Updated:

கம்பெனி டிராக்கிங்

கம்பெனி டிராக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி டிராக்கிங்

டாபர் இந்தியா லிமிடெட்! (NSE SYMBOL:DABUR)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

கம்பெனி டிராக்கிங்

டாபர் இந்தியா லிமிடெட்! (NSE SYMBOL:DABUR)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:
கம்பெனி டிராக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி டிராக்கிங்

டாபர் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் 1936-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, 1994-ம் ஆண்டு பொதுப் பங்கு வெளியீட்டைச் செய்து பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்ட நிறுவனம் இது. ஆனாலும், இந்த நிறுவனத்துக்கான பூர்வீகத்தைத் தேடிச் சென்றால், 1884-ம் ஆண்டு வரை பின்னோக்கி நீளும்.    

கம்பெனி டிராக்கிங்

1936-ல் கொல்கத்தாவில் ஆரம்பிக்கப் பட்ட இந்த நிறுவனம், 1972-ம் ஆண்டு டெல்லிக்கு மாற்றப்பட்டு டெல்லியை அடுத்த ஃபரிதாபாத்தில் ஒரு தற்காலிக உற்பத்தி மையத்துடன் செயல்பட ஆரம்பித்தது. 1986-ம் ஆண்டு ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாற்றப்பட்ட இந்த நிறுவனம், 1993-ம் ஆண்டில் புற்று நோய்க்கான மருந்துகள் தயாரிப்பதில் ஈடுபட்டு இமாச்சலப் பிரதேசத்தில் வசதிகளை ஏற்படுத்தியது.

1979-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது முதல் உற்பத்தி வசதியைத் தொடங்கியது. இது, ஆயுர்வேத மருந்துகளை ஒரே இடத்தில் தயாரிக்கும் மிகப் பெரிய உற்பத்தி வசதியாகும். மேலும், டாபர் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் சென்டர் என்கிற ஒருங்கிணைந்த ஆராய்ச்சி வசதியாகவும் இது செயல்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கம்பெனி டிராக்கிங்



1996-ம் ஆண்டில் தனது செயல்பாடுகளை நிர்வாக வசதிக்காக ஹெல்த் கேர் பிரிவு, ஃபேமிலி புராடக்ட் பிரிவு மற்றும் டாபர் ஆயுர்வேதா ஸ்பெஷாலிட்டிஸ் என்னும் மூன்று தனிப்பெரும் பிரிவுகளாகப் பிரித்துச் செயல்படுத்த ஆரம்பித்தது. 

1997-ம் ஆண்டில் பழச்சாறு மற்றும் பதப்படுத்தப் பட்ட உணவுகள் உற்பத்தியில் கால்பதித்தது.  நாளடைவில்  புரொஃபஷனல்கள் நிர்வகிக்கும் ஒரு நிறுவனமாகத் தன்னை உருவாக்கிக்கொண்ட இந்த நிறுவனம், 2000-ம் ஆண்டில் ஆயிரம் கோடி என்ற வர்த்தக எல்லையைத் தாண்டியது. 2003-ம் ஆண்டில் மருந்துப் பிரிவு மற்றும் நுகர்வோர் பொருள்கள் (FMCG) பிரிவு என இரண்டு பெரும்பிரிவுகளாகத் தனது வர்த்தகத்தைப் பிரித்த இந்த நிறுவனம், சிறந்த கூர்நோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டியிருப்பதால், அவற்றை இரண்டு நிறுவனங்களாகத் தனித்தனியே செயல்பட வைத்தது. 2005-ம் ஆண்டில் ‘ஓடோநில்’ மற்றும் பல்வேறு பற்பசை/பல் சார்ந்த பல தயாரிப்புகளை உற்பத்தி செய்துவந்த பல்சாரா ஹைஜீன் மற்றும் ஹோம் புராடக்ட்ஸ் நிறுவனத்தினை வாங்கியது.

கம்பெனி டிராக்கிங்

2007-ம் ஆண்டில் ஆர்கனைஸ்டு ரீடெயில் தொழிலில் கால்பதித்த இந்த நிறுவனம், ஹெச் அண்ட் பி ஸ்டோர்ஸ் லிமிடெட் என்னும் துணை நிறுவனம் வாயிலாக ஹெல்த் அண்ட் பியூட்டி ஸ்டோர்களை நடத்தி வருகிறது. அதே வருடத்தில் டாபர் ஃபுட்ஸ் லிமிடெட் நிறுவனத்தைத் தன்னோடு இணைத்துக்கொண்டு, 2008-ம் ஆண்டில் ஃபெம் கேர் பார்மா எனும் பெண்களுக்கான தோல் பராமரிப்புக்கான பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் பெண்களுக்கான அழகுசாதனப் பொருள்கள் சந்தையிலும் கால்பதித்தது. ஃபெம் பிராண்டை வாங்கிய பின்னர், வேகமாக வளர்ச்சியடையும் அழகுப் பராமரிப்புச் சந்தையில் இந்த நிறுவனம் களமிறங்கியது. அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஐந்தாவது ஆண்டான 2009-ம் ஆண்டில் டாபர் ரெட் பற்பசை, பில்லியன் ரூபாய் அளவுக்கு வர்த்தகமான  ஒரு பற்பசையாக  உருவெடுத்தது.

2010-ம் ஆண்டில்,  அயல் நாடுகளில் உள்ள நிறுவனங்களை வாங்க ஆரம்பித்தது. துருக்கி நிறுவனமான ஹோபி காஸ்மெட்டிக் என்னும் பெர்சனல் கேர் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்யும் குழுமத்தையும் (69 மில்லியன் டாலர் என்ற மதிப்பில்), அமெரிக்காவில் நமஸ்தே லேபாரட்டரீஸ் எல்.எல்.சி என்னும் நிறுவனத்தையும் (100 மில்லியன் டாலர் மதிப்பில்) வாங்கியது. 

2011-ம் ஆண்டில் இந்த  நிறுவனம், ஆக்சிலைப் புரொஃபஷனல் ஃபேஷியல் கிட்-ஐ அறிமுகப் படுத்தியதன் மூலம் புரொஃபஷனல் தோல் பராமரிப்புத் துறையில் கால்பதித்தது. இந்த வகை பொருள்களை ஃபெம் பிராண்டில் தொடர்ந்து விரிவாக்கம் செய்துவருகிறது இந்த நிறுவனம். 

அதே ஆண்டில் 30-ப்ளஸ் என்னும் பிராண்டை, அஜந்தா பார்மா நிறுவனத்திடமிருந்து வாங்கியது. இப்படி பல்வேறு வளர்ச்சி நிலைகளைக் கண்ட இந்த நிறுவனம், 2012-ம் ஆண்டில் பில்லியன் டாலர் என்ற வர்த்தக அளவைத் தாண்டியது.   

கம்பெனி டிராக்கிங்

2015-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் பிராண்டு களான ரியல், வாட்டிகா, அம்லா ஆகியவை தலா ரூ.1,000 கோடி வர்த்தக எல்லையைத் தாண்டி வியாபாரம் நடக்க ஆரம்பித்தது.

பொதுவாக, இந்த நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பொருள்களை ஹெல்த் சப்ளிமென்ட்ஸ் (டாபர் ச்யவனபிரகாஷ்,  டாபர் ஹனி, டாபர் குளுகோஸ் பிராண்ட்களில்), டைஜஸ்டிவ்ஸ் (டாபர் ஹஜ்மோலா,  புதின் ஹரா, நேச்சர் கேர் பிராண்ட்களில்), ஷாம்பூ (அல்மான்ட் ஷாம்பூ,  வாட்டிகா பிரீமியம் நேச்சுரல், வாட்டிகா ப்ரேவ் அண்ட் பியூட்டிஃபுல் பிராண்ட்கள்), ஹேர் ஆயில் (டாபர் அம்லா, டாபர் வாட்டிகா,  டாபர் அல்மான்ட் பிராண்ட்கள்), ஸ்கின்கேர் பொருள்கள்(டாபர் குலாபரி, ஆக்சி ப்ளீச்,  ஃபெம் பிராண்ட்கள்), உணவுப்பொருள்கள் (பழச்சாறு போன்றவை, டாபர் ரியல், ஆக்டிவ், ஹோம்மேட், ஹஜ்மோலா யோட்லி பிராண்ட்கள்), பல் பராமரிப்புக்கான பொருள்கள் (டாபர் ரெட் பேஸ்ட், டாபர் மேஸ்வக், டாபர் பபூல்,  டாபர்ல் லால் தத் மஞ்சன் பிராண்டுகள்), மருத்துவர் எழுதாமலேயே கடையில் விற்கப்படும் சில  மருத்துவக் குணமுள்ள பொருள்கள் (எனர்ஜை சர்கள் - ஷிலாஜித் கோல்டு, சளி மற்றும் இருமலுக் கான மருந்துகள் - டாபர் ஹோனிடுஸ், பெண்கள் நலம் பேணும் மருந்துகள் - டாபர் அசோக ரிஷ்டா, குழந்தைகள் பராமாரிப்பு மருந்துகள்- டாபர் லால் டெயில் மசாஜ் எண்ணெய், எத்திகல்ஸ் – டாபர் லோஹாசவா இரும்புச் சத்து குறைபாட்டுக்கான டானிக்) வீட்டில் பயன் படுத்தப்படும் சுகாதாரம் சார்ந்த பொருள்கள் (ஓடோமாஸ், ஓடோனில், சானிப்ரெஷ், ஓடோபிக் போன்றவை), கொத்தவரங்காய் பிசின் (வருடத்துக்கு 10,000 மெட்ரிக் டன் அளவில் உற்பத்தித் திறன்) எனப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம்.   

கம்பெனி டிராக்கிங்

இந்தப் பல்வேறு வகையான பொருள்களை உற்பத்தி செய்வதற்கு ராஜஸ்தானில் ஆல்வார், இமாச்சலப் பிரதேசத்தில் ஃபாடி (ச்யவனபிரகாஷ், ஹஜ்மோலா, டாபர் ரெட் டூத் பேஸ்ட், அம்லா மற்றும் தேன், குளுகோஸ், ஷாம்பு, ஹோனிடுஸ், பல்சாரா, புட் சப்ளிமெண்ட்,  பல் பராமரிப்பு, காற்றுத்தூய்மை, மேனி பராமரிப்பு போன்ற வற்றுக்குத் தனித்தனியான உற்பத்தி வசதிகள்), ஜம்முவில் பாரி ப்ரஹ்மனா,  மத்தியப்பிரதேசத்தில் கட்னி, கொல்கத்தாவில் நரேந்திரபூர், ராஜஸ் தானில் நேவாய், மேற்குவங்கத்தில் ஜல்பைகுரி, மஹாராஷ்ட்ராவில் நாசிக், தாத்ரா நகர் ஹவேலியில் சில்வாசா போன்ற இடங்களில் தன்  உற்பத்தி வசதிகளைக் கொண்டிருக்கிறது.

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத தயாரிப்புகளைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். ஆராய்ச்சிகளின் வெற்றியும் அறிமுகப் படுத்தப்படும் பொருள்களின் மீது வாடிக்கையாளர் கொள்ளும் நம்பிக்கையுமே வியாபாரத்துக்கு  வழிவகுப்பதாக இருக்கும்.

போட்டி, ஆராய்ச்சிகளில் வெற்றி, மூலப்பொருள்களின் விலை மாறுதல், அந்நியச் செல்வாணியின் விலை மாறுதல் போன்றவை இது போன்ற நிறுவனங்களுக்கு ரிஸ்க்காக இருக்கும் எனலாம்.

ரிஸ்க்குகள் பல இருக்கிற போதிலும் தொழில் ரீதியாக மிக நீண்ட அனுபவத்தையும், வாடிக்கையாளர் மத்தியில் நல்லதொரு மதிப்பையும் பெற்றிருக்கும் இந்த நிறுவனத்தின்  பங்கை, சந்தை ஏதாவது ஒரு காரணத்தினால் கடுமையான விலை இறக்கத்தைச் சந்திக்கும்போது மட்டும் மிகவும் சிறியதொரு எண்ணிக்கையில் வாங்கி, மூன்று முதல் ஐந்தாண்டு கால போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக் கொள்வதற்காக வாசகர்கள்  தொடர்ந்து ட்ராக் செய்துவரலாம். 

சமீபத்தில் நல்லதொரு விலை ஏற்றத்தை இந்த நிறுவனத்தின் பங்குகள் சந்தித்திருப்பதால், நல்லதொரு இறக்கம் வரும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

வாங்கிய பின்னர் இந்தத் துறை குறித்த தகவல்களைத் தொடந்து ட்ராக் செய்ய இயலாத வாசகர்கள், இந்தப் பங்கை வாங்குவதை தவிர்ப்பதே நல்லது.

This section is not a buy/sell recommendation at the current price levels, but only a compilation of information about the company and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014
Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of  the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No;  4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past  12 months and nature of products / services for which such compensation is received? – No;  5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report
For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this report is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose symbol: DABUR/name of company/time duration) 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism