Published:Updated:

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

முதல் தலைமுறை தொழில் முனைபவர்கள் சந்திக்கும் சவால்களை தீர்க்க வழி சொல்லும் தொடர்

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!
ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!
ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1991-ல் ஆரம்பித்த பொருளாதாரச் சீர்திருத்தம் இந்தியாவை பல மடங்கு வளர்ச்சி காண வைத்திருக்கிறது. அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 2-3% தான். ஆனால், நம் இந்தியாவின் வளர்ச்சியோ கடந்த பத்து ஆண்டுகளில் சராசரியாக எட்டு சதவிகிதம். இது பாராட்டுக்குரிய விஷயம்தானே?

இந்த பொருளாதார வளர்ச்சியை (புரட்சி என்றுகூட சொல்லலாம்!) எட்டுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர்கள் தொழில்முனைபவர்கள் என்று சொல்லப்படும் பிஸினஸ்மேன்கள்தான். இன்ஃபோசிஸ் உங்களுக்குத் தெரியும். 1981-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் கடந்த முப்பது ஆண்டுகளில் சம்பாதித்த வருமானம் 27,000 கோடிக்கும் மேல். லட்சம் பேருக்கு மேல் இந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். இன்ஃபோசிஸ் மாதிரி பல நூறு நிறுவனங்கள், பல்வேறு துறைகளில் இன்று தொழில்முனைபவர்களின்  சாதனைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. இந்த சாதனைகள் பல புதிய தொழில்முனைபவர்களுக்கும் உத்வேகத்தை அளித்திருக்கிறது.

கட்டுரையாளர் பற்றி..!  

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

தில்லை ராஜன், பள்ளிப் படிப்பை வேலூரில் முடித்து விட்டு, பின்னர் பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தில் பட்டப் படிப்பு படித்தார். பிறகு, பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் ஆராய்ச்சி பட்டம் பெற்றார்.

2005-ல்  லண்டன் பொருளாதாரக் கல்லூரியில் உலகமயமாக்கல் மற்றும் தலைமை வகிப்பது பற்றிய நிர்வாகக் கல்வி பயிற்சி பெற்றார். தற்போது சென்னை ஐ.ஐ.டி.யில் மேலாண்மை படிப்பு மற்றும் ஆராய்ச்சித் துறையில் இணை பேராசிரியராக இருக்கிறார். சமீபத்தில் மணி விஸார்ட்ஸ் (Money Wizards) என்னும் நிறுவனத்தை தனது நண்பர் வெங்கடேஷ§டன் சேர்ந்து ஆரம்பித்து அதில் இயக்குநராகவும் இருக்கிறார்.

இந்தியாவில் தொழில் முனைவது கடந்த ஆண்டுகளில் பல்வேறு கோணங்களில் வளர்ந்தும் விரிந்தும் வருகிறது. 1990-க்கு முன்னால் தனியாரின் முதலீடு என்பது மிகக் குறைந்த நிலையிலேயே காணப்பட்டது. அப்போது தனியார் துறையில் வேலைவாய்ப்பும் குறைவுதான். படித்த பலருக்கு வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருந்ததை வறுமையின் நிறம் சிவப்பு, நிழல்கள் போன்ற படங்கள் நன்கு சித்தரித்தன. அரசாங்க  வேலை வாய்ப்பை நம்பியே பலரும் இருந்தனர்.

இத்தகைய சூழ்நிலையில் அரசு தொழில் முனைவதை ஊக்கப்படுத்துவதற்காக பல திட்டங்களை உருவாக்கியது. இதனால் பெரும்பாலான இளைய தொழில் முனைபவர்கள் சுயதொழில் செய்ய ஆரம்பித் தார்கள். ஆனால், பலர் விரும்பி எடுத்த முடிவல்ல இது, கட்டாயத்தினால் எடுத்த முடிவாக அமைந்தது. இன்றோ பலர் தொழில் முனைதலை விருப்பப்பட்டுச் செய்கிறார்கள். திறமை இருந்தால் இன்று வேலை கிடைப்பது ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை. என்றாலும், சொகுசான வேலைகளை எல்லாம் உதறித் தள்ளி விட்டு தொழில் முனைவதில் ஈடுபட்ட பலரை நான் நன்கு அறிவேன். நல்ல வேலையில் இருப்பவர்கள் ஓரளவுக்கு பணம் சேர்த்த பிறகு தாம் விரும்புவதைச் செய்வதற்காக வேலையை விட்டுவிட்டு சொந்த நிறுவனங்களைத் தொடங்குகின்றனர். நான் தற்போது இயக்குநராக இருக்கும் மணி விஸார்ட்ஸ் கம்பெனியைத் தொடங்கிய வெங்கடேஷையே இதற்கு ஒரு உதாரணமாக சொல்லலாம்.  

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

ஆர்.சந்திரசேகரன். தலைவர் மற்றும் நிர்வாக  இயக்குநர். காக்னிசென்ட்:

''தங்கம், ரியல் எஸ்டேட், பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளிட்ட அனைத்து வகையான முதலீட்டு திட்டங்களிலும் எப்படி முதலீடு செய்வது என்பதை நாணயம் விகடன் சொல்லி தருகிறது. நாணயம் விகடன் இன்னும் பல மைல்கற்களை எட்டவேண்டும்.''

  

கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் பல பன்னாட்டு நிறுவனங்களின் உயர் பதவிகளை  வகித்தவர் அவர், அந்த வேலையை விட்டுவிட்டு, நிதி முதலீட்டு ஆலோசனை தரும் கம்பெனி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். ஆக, தொழில் முனைதல் என்பது இன்று கட்டாயத்தின் பிடியில் இருந்து விரிவடைந்து விருப்பத்தோடு செய்யும் செயலாக மாறிவிட்டது.

இந்தத் தொழில் முனைதல் என்பது நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, சிறிய நகரங்களிலும் கிராமங் களிலும்கூட காண முடிகிறது. இதற்கு ஒரு உதாரணம், மகளிர் சுயஉதவி குழுக்கள். இன்று பல்லாயிரக்கணக்கான மகளிர் சுய உதவிக் குழுவினர் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம் அல்லது வங்கிகளில் இருந்து கடன் பெற்று பல்வேறு தொழில்களைத் தொடங்குகிறார்கள். கணினி மையம், தொலைபேசி மையம், செல்போன் சர்வீஸ் சென்டர், அழகுக்கலை மையம், கைவினைப் பொருட்களை தயார் செய்து விநியோகிக்கும் பலதரப்பட்ட தொழில்களைத் தொடங்கி தங்கள் குடும்பத்திற்குக் கூடுதல் வருமானத்தைச் சம்பாதிக்கிறார்கள். பல கோடி ரூபாய் முதலீடு செய்து பல நூறு பேருக்கு வேலை தந்தால் மட்டுமே தொழில் முனைதல் என்று சொல்லத் தேவையில்லை. இப்படி சிறிய மற்றும் குடும்பத் தொழில் செய்கிறவர்களைகூட நான் தொழில் முனைபவர்களாகவே கருதுகிறேன்.  

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!
ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

இன்று தொழில் முனைதல் என்பது, ஒருவர் தனது லட்சியத்தை அடைவது என பலராலும் கருதப்படுகிறது. பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு இவ்வளவு வங்கிக் கடன் வசதிகளும், துணிந்து கடன் தரும் நிதி நிறுவனங்களும் இருந்ததில்லை. இதனால் வியாபாரம் அல்லது தொழில் செய்தல் என்பது பரம்பரை பரம்பரையாக அதில் ஈடுபட்டு வந்தவர்களாலேயே செய்ய முடியும் என்கிற சூழ்நிலை பரவலாக இருந்தது. ஆனால், இன்றோ அந்த நிலை மாறிவிட்டது.

சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களுக்கு இன்று ஊக்க சக்தி அளிக்க முன்வருவோர் ஏராளம். விளைவு, பலர் முதல் முறையாக தொழில் முனைதலில் களம் இறங்கி இருக்கின்றனர். அதில் பலர் தங்களின்  அசாதாரண உழைப்பு மற்றும் திறமையினால் நிஜவாழ்வின் உண்மையான ஹீரோக்களாக ஆகியிருக்கின்றனர். இந்த தொடரில் முதல் தலைமுறை தொழில் முனைபவராக கனவு காணுகிறவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களையும், அவற்றை எதிர்கொண்டு சமாளித்து வெற்றிக் கொடி நாட்டிய சாதனையாளர்களைப் பற்றியும் விரிவாகச் சொல்லப் போகிறேன்.

யார் இவர்? பிஸினஸ் செய்வதில் இருக்கும் சவால்கள் பற்றி இவருக்கென்ன தெரியும் என சிலர் முணுமுணுப்பது என் காதுக்கு கேட்கிறது. தொழில் முனைவதில் எனக்கு அனுபவம் கம்மி என்றாலும், என்  தொழில் முறை வாழ்க்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைபவர்களுடன் பழகி இருக்கிறேன். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என பல தேசங்களுக்கும் தொழில் நிமித்தமாகச் சென்று  வந்திருக்கிறேன். அங்கு பலதரப்பட்ட தொழில் முனைபவர்களுடன் பழகவும் செய்திருக்கிறேன். அந்த அனுபவங்களை எல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

 

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

ஏ.பாலசுப்பிரமணியன், சி.இ.ஓ., பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்:

''பிராந்திய மொழியில் முதலீட்டு மந்திரங்களை அளிப்பதில் நாணயம் விகடன் பெரிய சாதனை படைத்திருக்கிறது. தமிழர்கள் டெல்லி, மும்பை, துபாய், சிங்கப்பூர் என எங்கு இருந்தாலும் தேடிப் படிக்கும் இதழாக அது இருக்கிறது.''

இது கதையும் அல்ல, கட்டுரையும் அல்ல, கட்டுரையாடல். அதாவது, நீங்களும் நானும் பேசப் போகிறோம். முதல் முதலில் தொழில் முனைபவர்கள் தங்களுக்கு வரும் எந்த கேள்வியை வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள். அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒருவர் அனுபவத்தை இன்னொருவருக்குத் தந்து நாம் அனைவருமே முன்னேற்றம் காணுவோம்.

'நான் ரொம்ப சாதாரணமானவன் சார், என்னால் பிஸினஸ்மேனாக முடியுமா’ என்று கேட்கிறீர்களா?   வெற்றி என்பது வலிமையான வர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்து விடாதீர்கள். உங்களைவிட மிகச் சாதாரணமானவர்கள் மிகப் பெரிய பிஸினஸ்மேன்களாக மாறியிருப்பவர்களை நான் அறிவேன்.

அதேபோல வசதியான நிலையில் இருப்பவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்கிற நியதியும் இல்லை. எந்த ஒரு பொருளாதார பின்புலமும் இல்லாமல் பிஸினஸ் உலகில் போராடி வெற்றி பெற்றவர்கள் பல ஆயிரம் பேர். அவர்களில் சிலரைப் பற்றியாவது பிற்பாடு சொல்கிறேன்.

பின்புலமும் வேண்டாம்; பொருளாதார பலமும் வேண்டாம். பிறகு தொழில் முனைதலை செய்ய என்ன வேண்டும் என்று கேட்கிறீர்களா? அது ஒரு உன்னத சக்தி. அந்த சக்தி என்ன என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்.

(தொழில் முனைவோம்)