Published:Updated:

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்


''அடடே, ஏழாம் ஆண்டு சிறப்பிதழைச் சிறப்பாக முடிக்கும் வேலையில் பிஸியாக இருப்பீர்கள் போலிருக்கிறதே!'' என்று சொன்னபடியே நம் கேபினுக்குள் நுழைந்தவர் பிரஸ்ஸிலிருந்து சுடச்சுட அச்சிடப்பட்டிருந்த பாரங்களை எடுத்துப் பார்த்தார். ''உம் உழைப்பு தமிழகத்தையே மலைக்க வைக்கிறதய்யா! தொடரட்டும் உம் பணி!'' என்று புகழ்ந்தவரை மேட்டருக்குள் இழுத்தோம்.

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''ச
ந்தை திடீரென்று ஏறுவதைப்போல் பயங்கரமான பாசாங்கு காட்டுகிறதே!'' என்று ஆரம்பித்தோம்.

''ஆமாம், திடீர் திருப்பங்களைக் கொண்ட வாரமாக இருந்தது இந்த வாரம். அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் புதன்கிழமை அன்று செய்த சர்க்கரை தடவிய அறிவிப்புகள் எல்லாம் பெரிய அளவில் 'ப்ரிக்’ நாடுகளுக்குப் பயனளிக்கும் என்பதற்கு கேரண்டி ஏதுமில்லை. ஃபெடரல் ரிசர்வ்-ன் இந்த அறிவிப்புகள் அமெரிக்க எஃப்.ஐ.ஐ.களின் முதலீடுகள் 'ப்ரிக்’ நாடுகளில் இருந்து ஓரளவு அதிக விலையில் விற்று வெற்றிகரமாக வெளியேறுவதற்கு உதவி செய்வதற்காக அறிவிக்கப்பட்டதைப் போலவே இருக்கிறது என்கிறார்கள், உள்ளர்த்தம் தெரிந்தவர்கள்.

அமெரிக்க அரசும் நிதி நிறுவனங்களும் ஒரு ஆர்க்கெஸ்ட்ராவைப் போன்றவை. அவர்கள் அனைவரும் லாபம் பார்க்க ஒருத்தர் ட்யூனுக்கு மற்றவர் மாறாமல் உலகெங்கிலும் அமர்ந்து கொண்டு வாசிக்கக்கூடியவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

சந்தைதான் விர்ரென்று ஏறுகின்றதே என்று சொல்லி சந்தையில் விளையாட களம் இறங்குபவர்களுக்காகச் சந்தையின் எல்லை லெவல்களையும் சொல்லிவிடுகிறேன். ஓரளவுக்கு ஸ்டெடியாக இருக்கிறது என்று நிரூபிக்க நிஃப்டி 4930 லெவல்களைத் தாண்டியே டிரேடாகிக் கொண்டிருக்க வேண்டும். இந்த லெவலைத் தாண்டி வால்யூமுடன் இறங்கினால், மீண்டும் பாதாளப் பயணம் ஆரம்பிக்க வாய்ப்புகள் அதிகம். புல்லிஷ் டிரெண்ட் தொடர்கின்றது என்ற ஐடியாவை ப்ரூவ் பண்ண நிஃப்டி 5178-க்கு மேலே சரசரவென்று போனால் மட்டுமே ஓரளவுக்கு நம்பலாம் என்கிறார்கள் வல்லுநர்கள். இன்னும் குழப்பம் தீரவில்லை, எதற்கும் உங்கள் வாசகர்களை லாங் சைடில் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லும்'' என்றார் ஷேர்லக்.

''சந்தை விழுந்த சமயத்தில் எல்.ஐ.சி. ஜாம்பவான் ஏதாவது சமாளித்திருக்கலாமே!'' என்றோம்.  

''வழக்கமா இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து சரிவிலிருக்கும் போதெல்லாம், தடாலடியாக முதலீடு செய்து, அதை மேலும் சரியவிடாமல் எல்.ஐ.சி. தடுக்கும் என்பது உண்மைதான். ஆனால், நிலைமை இப்ப வேறா இருக்கு... இந்த நிதியாண்டுல பங்குச் சந்தையில 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருந்தாங்க. ஆனா, யூலிப் பாலிசி விற்பனை படுத்துவிட்டதால, மொத்தத்தில் 40 ஆயிரம் கோடிதான் முதலீட்டுக்குப் போகும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

ஷேர்லக் ஹோம்ஸ்

''அது சரி, எல்.ஐ.சி.யோட டார்லிங் ஷேர் பட்டியலில் எந்தெந்த பங்குகள் இருக்கு?'' சுடச்சுட ஏலக்காய் டீயை தந்தபடி கேட்டோம். டீயை உறிஞ்சிக் குடித்தபடி ஒரு பேப்பரில் எழுதிக் காட்டினார். அது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், டாடா மோட்டார்ஸ், ஐ.டி.எஃப்.சி..!''

''கே.ஜி. கேஸில் தத்தளிக்கும் ரிலையன்ஸ் புதுசா பணம் திரட்டப் போகுதாமே?'' என்று கேட்டோம்.

''ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்ய தேவையான 100 கோடி டாலரை (சுமார் 5,215 கோடி ரூபாய்) திரட்டத் திட்டமிட்டிருக்கிறதா ஊர்ஜிதமாகாத தகவல். இந்த பணத்தை அது இந்தியாவுல திரட்டப் போறதில்லையாம்..! அமெரிக்காவுல 10 ஆண்டு முதிர்வு கொண்ட பாண்டாக வெளியிடப் போகிறதாம்..'' என்றவர், மேற்கொண்டு பேச ஆரம்பித்தார்.

''சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கிற காலத்திலேயும் இந்திய பொதுத் துறை நிறுவனங்கள் இலக்கை மீறி சிறப்பாக செயல்பட்டு வருவதாக பத்திரிகைகளில் ரிப்போர்ட் வருகிறது. இதன் மர்மத்தை மத்திய அரசின் பப்ளிக் என்டர்பிரைசஸ் துறை போட்டு உடைத்திருக்கு..! அதாவது, பல கம்பெனிகள் இலக்கை மிகக் குறைவாக நிர்ணயித்துக் கொண்டு, அதனைத் தாண்டியவுடன் பெரிதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறதாம். இனிமேல் இதுமாதிரி செய்யக்கூடாது என பொதுத்துறை கம்பெனிகளின் தலைவர்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருக்கிறதாம் பப்ளிக் என்டர்பிரைசஸ் துறை.''

ஷேர்லக் ஹோம்ஸ்

''எவரான் பங்கு திடீரென விலை கொஞ்சம் உயர்ந்திருக்கிறதே! அந்த கம்பெனியில் என்னதான் நடக்கிறது?'' என்று ஷேர்லக்கிடம் கேட்டோம்.

''வருமான வரித் துறை அதிகாரி களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் எவரான் எம்.டி. கிஷோர் கைதான பிறகு அந்த பங்கு விலை பயங்கரமாக வீழ்ச்சி அடைஞ்சது. இந்நிலையில இந்த கம்பெனியின் 20 சதவிகித பங்கை துபாயைச் சேர்ந்த வர்கி குரூப், ஓப்பன் ஆஃபர் (பங்கு ஒன்றுக்கு 528 ரூபாய்) மூலம் வாங்க செபி ஒப்புதல் அளித்திருப்பதே விலை உயர்வுக்கு காரணம்..!''

''உலகச் சந்தை நிலவரங்கள் எப்படி இருக்குது?'' என்றோம்.

''சீனா தன் பங்குக்கு வட்டி குறைப்பு நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. அந்த நாட்டு வங்கிகள், அதன் மத்திய வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க இருப்பு விகிதத்தை அரை சதவிகிதம் குறைச்சிருக்கு... இந்த அரை சதவிகிதம் என்பது சீனாவின் வங்கி சிஸ்டத்தில் சுமார் 6,000 கோடி டாலர் (சுமார் 3,12,000 கோடி ரூபாய்!) புழக்கத்தை அதிகரிக்கும். இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை சீன பங்குச் சந்தையை காளைத்தனமாக்கி இருக்கிறது''. பேசிக் கொண்டே போனவரை தடுத்து நிறுத்தி, ''நம் மத்திய வங்கியும் வட்டி விகிதத்தைக் குறைக்கப் போகிறதாமே!'' என்று கேட்டோம்.

''அப்படி ஒரு தகவல் என் காதுக்கும் வந்தது. பெட்ரோல் விலையை மத்திய அரசாங்கம் குறைத்தது மாதிரி, 0.25 முதல் 0.50 சதவிகிதம் வரை வட்டி விகிதத்தை ஆர்.பி.ஐ. குறைக்க வாய்ப்பிருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். அப்படி நடந்தால், லிக்விடிட்டி மீண்டும் அதிகரிக்கும். 9-லிருந்து 8 சதவிகிதமாக குறைந்திருக்கும் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் மீண்டும் எகிறும்.

பொருட்களின் விலை உயர்வை பத்தியோ, நம் ஜி.டி.பி. 6.9 சதவிகிதத்திற்கு குறைந்தது பற்றியோ ஆளும் கட்சி கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை'' என்றவரிடம் வழக்கம்போல டிப்ஸ் என்றவுடன் ''அதுதான் நீங்களே பல பங்குகளை பரிந்துரைத்திருக்கிறீங்களே'' என்று சொல்லிவிட்டு நடையை கட்டினார்.