Published:Updated:

ஃபண்ட் கார்னர் - வேலை போய்விட்டது... கையிலிருக்கும் பணத்தை எதில் முதலீடு செய்வது?

ஃபண்ட் கார்னர் - வேலை போய்விட்டது... கையிலிருக்கும் பணத்தை எதில் முதலீடு செய்வது?
பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் கார்னர் - வேலை போய்விட்டது... கையிலிருக்கும் பணத்தை எதில் முதலீடு செய்வது?

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

ஃபண்ட் கார்னர் - வேலை போய்விட்டது... கையிலிருக்கும் பணத்தை எதில் முதலீடு செய்வது?

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

Published:Updated:
ஃபண்ட் கார்னர் - வேலை போய்விட்டது... கையிலிருக்கும் பணத்தை எதில் முதலீடு செய்வது?
பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் கார்னர் - வேலை போய்விட்டது... கையிலிருக்கும் பணத்தை எதில் முதலீடு செய்வது?

நான் கடந்த ஒரு வருட காலமாக ஐ.சி.ஐ.சி.ஐ புரூ.வேல்யூ டிஸ்கவரி ஃபண்டில் ரூ.5,000, மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் ஃபண்டில் ரூ.5,000,     டி.எஸ்.பி. பி.ஆர் மைக்ரோ கேப் ஃபண்டில் ரூ.5,000, ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ப்ளஸ் ஃபண்டில் ரூ.5,000, குவான்டம் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்டில் ரூ.8,000 என எஸ்.ஐ.பி முறையில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்து வருகிறேன். குவான்டம் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்டில் வருமானம் மிகக் குறைவாக உள்ளதுபோல தோன்றுகிறது. நான் முதலீடு செய்துள்ள ஃபண்டுகளில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா? 

சிவா, சென்னை  

ஃபண்ட் கார்னர் - வேலை போய்விட்டது... கையிலிருக்கும் பணத்தை எதில் முதலீடு செய்வது?


“குவான்டம் லாங் டேர்ம் ஈக்விட்டி ஒரு லார்ஜ் கேப் ஃபண்டாகும். அதற்கு நிகரான பிற லார்ஜ் கேப் ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஃபண்ட் சற்று மெதுவாகத்தான் செயல்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், கடந்த ஒரு வருட காலத்தில், இந்த ஃபண்டின் பெஞ்ச் மார்க்கானது சென்செக்ஸ் குறியீட்டைவிடவும், கிட்டத்தட்ட 4% குறைவான வருமானத்தைக் கொடுத்துள்ளது.

உங்கள் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் வேறு சில ஃபண்டுகளும் சற்று மெதுவாகவே செயல்பட்டு வருகின்றன. ஆகவே, உங்களின் முதலீட்டைக் கீழ்காணுமாறு மாற்றியமைத்துக் கொள்ளவும். உங்களின் இலக்கு நீண்டகாலம் என்பதால், உங்கள் போர்ட்ஃபோலியோவில் ஸ்மால் அண்ட் மிட் கேப் பகுதியை அதிகமாகக் கொடுத்துள்ளோம்.

மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் ஃபண்டில் மாதம் ரூ.12,000, பிரின்சிபல் குரோத் ஃபண்டில்  மாதம் ரூ.12,000, ரிலையன்ஸ் ஸ்மால் கேப் ஃபண்டில் மாதம் ரூ.12,000.”

என் வயது 34. இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். ஒரு மாதத்துக்குமுன் கட்டாயமாக வேலைநீக்கம் செய்யப்பட்டேன். என் வங்கி கணக்கில் ரூ.20 லட்சம் வைத்துள்ளேன். தொடர்ந்து நாணயம் விகடன் வாசிப்பதால், நிதி நிர்வாகம் பற்றி எனக்கு சற்றுத் தெளிவு உண்டு என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும், எதில் முதலீடு செய்தால், நியாயமான மாத வருமானம் கிடைக்கும் என்று சொன்னால் உதவியாக இருக்கும். முதலீடு தொடர்பான புத்தகங்கள் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன். 

மோகன், மெயில் மூலமாக


“நீங்கள் ரூ.20 லட்சத்தை ஃப்ராங்க்ளின் இந்தியா லோ டுரேஷன் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள். மூன்று மாத காலத்துக்கு அந்தப் பணத்தை விட்டுவிடுங்கள். நான்காம் மாதத்திலிருந்து மாதத்துக்கு ரூ.12,500-ஐ உங்களின் செலவுகளுக்காக எஸ்.டி.பி முறையில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த முறை, நீங்கள் முதலீடு செய்த தொகையைக் கரைக்காமல் வைத்துக் கொள்ள உதவும். விகடன் பிரசுரத்தில் முதலீடு சார்ந்த பல புத்தகங்கள் தமிழில் வெளியிடப்பட்டு உள்ளன. உங்களின் தேவைக்கேற்றாற்போல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபண்ட் கார்னர் - வேலை போய்விட்டது... கையிலிருக்கும் பணத்தை எதில் முதலீடு செய்வது?எனக்கு வயது 45. என் மகன் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். அவனுடைய மேற்படிப்புக்கும், என்னுடைய ஓய்வுக்காலத்துக்கும் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். இரண்டு இலக்குகளுக்கும் மாதம் தலா பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்ய முடியும். எந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என்பது குறித்து உங்கள் ஆலோசனை தேவை.

சி.ஜெ.பரணிதரன், மெயில் மூலமாக


“உங்களின் மகன் இன்னும் நான்கு வருடங்களில் கல்லூரிக்குச் செல்வார். அவருக்காக மாதம் 10,000 ரூபாயை ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள். இந்த ஃபண்ட் குறைவான ரிஸ்க்  உடைய பங்குச் சார்ந்த முதலீடாகும். உங்களின் ஓய்வுக்காலத்துக்கு  இன்னும் 13 வருடங்கள் உள்ளன. ஆகவே, அதற்கான ரூ.10,000 முதலீட்டை, பிரின்சிபல் குரோத் அல்லது மிரே இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளுங்கள். வருடத்துக்கு ஒருமுறை நீங்கள் செய்யும் முதலீட்டைப் பரிசீலனை செய்துகொள்ளுங்கள்.” 


எனக்கு வயது 29. நான் இதுவரை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யவில்லை. இப்போது என் குழந்தையின் படிப்புக்காக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். ரூ.5,000 முதலீடு செய்ய முடியும். எனக்கு ஏற்ற ஃபண்டுகளைச் சொன்னால் உதவியாக இருக்கும்.

ஸ்ரீராம், மெயில் மூலமாக


“உங்களின் ரூ.5,000 முதலீட்டைப் பின்வரும் இரண்டு ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்து கொள்ளுங்கள்.  கோட்டக் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டில் மாதம் ரூ.2,500, ஐ.டி.எஃப்.சி கிளாஸிக் ஈக்விட்டி ஃபண்டில் மாதம் ரூ 2,500.”  

ஃபண்ட் கார்னர் - வேலை போய்விட்டது... கையிலிருக்கும் பணத்தை எதில் முதலீடு செய்வது?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism