Published:Updated:

நகைச் சீட்டு... கோல்டு ஃபண்ட்... தங்கப் பங்குகள்... தங்கம் வாங்க எது பெஸ்ட்?

நகைச் சீட்டு... கோல்டு ஃபண்ட்... தங்கப் பங்குகள்... தங்கம் வாங்க எது பெஸ்ட்?
பிரீமியம் ஸ்டோரி
நகைச் சீட்டு... கோல்டு ஃபண்ட்... தங்கப் பங்குகள்... தங்கம் வாங்க எது பெஸ்ட்?

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

நகைச் சீட்டு... கோல்டு ஃபண்ட்... தங்கப் பங்குகள்... தங்கம் வாங்க எது பெஸ்ட்?

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

Published:Updated:
நகைச் சீட்டு... கோல்டு ஃபண்ட்... தங்கப் பங்குகள்... தங்கம் வாங்க எது பெஸ்ட்?
பிரீமியம் ஸ்டோரி
நகைச் சீட்டு... கோல்டு ஃபண்ட்... தங்கப் பங்குகள்... தங்கம் வாங்க எது பெஸ்ட்?

ங்கம் வாங்கும் ஆசை நம்மில் பலருக்கும் அதிகமாகிக்கொண்டே போகிறதே தவிர, குறைந்தபாடில்லை. கடந்த 2016 ஆகஸ்ட்டில் வெறும் 22 டன் தங்கத்தை மட்டுமே நாம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தோம். ஆனால், கடந்த ஆகஸ்ட்டில் நாம் இறக்குமதி செய்த தங்கத்தின் அளவு 60 டன்களுக்கு மேல். கடந்த 2016 ஏப்ரல் - ஆகஸ்ட் வரையிலான ஆறு மாதங்களில் 5.08 பில்லியன் டாலர்களுக்குத்  தங்கத்தை இறக்குமதி செய்த நாம், இந்த ஆண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 15.24 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்) தங்கத்தை இறக்குமதி செய்துள்ளோம்.  

நகைச் சீட்டு... கோல்டு ஃபண்ட்... தங்கப் பங்குகள்... தங்கம் வாங்க எது பெஸ்ட்?

முதலீட்டை உடனடியாகப் பணமாக்க முடியும் என்பதால், இன்றைய சூழ்நிலையில் தங்கம் சார்ந்த முதலீடுகளை எல்லோருமே விரும்புகின்றனர். தவிர, அதில் செய்துள்ள முதலீடானது அதிக வருமானம் தரும் என யாரும் எதிர்பார்ப்பதில்லை என்றாலும், பெரிய அளவில் விலை குறைந்து நஷ்டம் வராது என்றும் நம்புகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, தங்கத்தை வைத்திருப்பது ஒருவரது அந்தஸ்தைக் காட்டுவதாக இருப்பதால், பலரும் தங்கத்தை ஆபரணங்களாக வாங்கி வைத்திருக்கவே விரும்புகிறார்கள். சுருக்கமாக, ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்க விரும்புபவர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதையே அதிகம் விரும்புகின்றனர்.

இவ்வாறு தங்கத்தில் முதலீடு செய்வதற்குப் பல்வேறு வழிமுறைகளை மக்கள் கையாளுகின்றனர். தங்க நகைச் சீட்டு, தங்க ஃபண்டுகள், தங்கப் பங்குகள் எனப் பல வழிகளில் முதலீடுசெய்து, அவற்றின் மூலம் கிடைக்கும் பணத்தைப் பயன்படுத்தி தங்க நகைகளை வாங்குகிறார்கள். இந்த வழிமுறைகளில் முதலீட்டாளருக்கு அதிக லாபம் தருவது எது, இவற்றிலுள்ள செளகர்யம் என்ன, ரிஸ்க் என்ன என்பதைப் புரிந்துகொண்டு பணம் சேர்த்தால், அதிக லாபம் பெற்று, கூடுதலான தொகைக்கு நம்மால் தங்கம் வாங்க முடியும். எனவே, தங்கத்தைச் சேர்ப்பதற்கான இந்த வழிமுறைகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

தங்க நகைச் சீட்டு

இன்றைய தேதியில், தங்க நகைகளை வாங்க நடுத்தர வர்த்தகத்தினரும், குறைந்த வருமானமுடையவர்களும் அதிகம் நாடுவது நகைச் சீட்டுகளைத்தான். காரணம், இன்றைக்குத் தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் உள்ள தங்க நகைக் கடைகளும் நகைச் சீட்டுத் திட்டங்களை நடத்தி வருகின்றன. பெரிய நகைக் கடைகள் மட்டுமின்றி, சிறிய நகைக் கடைகள்கூட இந்தத் திட்டங்களை நடத்தி வருவதினால், பெருவாரியான மக்கள் இவற்றில் சேர்ந்து, தங்கள் சக்திக்கேற்ப பணத்தைச் சேர்த்து, தங்கத்தை வாங்குகின்றனர்.

இந்தத் திட்டத்தில் சேர்ந்து, தொடர்ந்து 11 மாதங்களுக்குப் பணம் கட்ட வேண்டும். ஒவ்வொரு மாதமும் பணம் கட்டும்போது, அன்றைய தினம் இருக்கும் தங்கத்தின் விலையின் அடிப்படையில் தங்கமானது யூனிட்களாக ஒதுக்கப்படும். இப்படிச் சேர்க்கும் பணத்தை 11 மாதங்கள் முடிந்தபின், சேர்ந்த தொகைக்கேற்ப தங்கத்தை வாங்கலாம் என்பது இந்தத் திட்டத்தின் அடிப்படை விதிமுறைகளாகும். ஒவ்வொரு மாதமும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துக்கேற்ப வாங்குவதால், சராசரி விலையில் நமக்குத் தங்கம் கிடைக்க வாய்ப்புண்டு என்பது இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும். 

மாதமொன்றுக்கு ரூ.100 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்பதால், பலரும் இந்தத் திட்டத்தில் எளிதில் சேர்ந்துவிடுகின்றனர்.

இந்தத் திட்டத்தில் இணைந்து சேர்க்கும் பணத்தைக்கொண்டு அதே நகைக் கடையில் தங்க நகை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் போன்றவை வசூலிக்கப்படுவதில்லை என நகைக்கடைகள் விளம்பரம் செய்வது வாடிக்கையாளர்களைக் கவரக்கூடிய விஷயமாக இருக்கிறது. உதாரணமாக, தங்க நகை வாங்கும்போது 1% முதல் 18% வரை டிசைனுக்கேற்ப சேதாரம் வசூலிக்கப்படும். இந்தத் திட்டத்தில் சேர்வதன் மூலம் சேதாரத்துக்கான தொகையை மிச்சப்படுத்த முடியும். இந்தத் திட்டம் தவிர வேறு திட்டத்தின் மூலம் பணம் சேர்க்கும்பட்சத்தில், அதனைக் கொண்டு தங்க நகை வாங்கும்போது, சேதாரத்துக்கான தொகையை நாம் கட்டியே ஆகவேண்டும். எனவே, சேதாரம் மூலம் மிச்சமாகும் இந்தத் தொகையானது நமக்குக் கிடைக்கும் லாபமாக நாம் கருதலாம். உதாரணமாக, இந்தத் திட்டத்தில் சேர்ந்து நகை வாங்குவதன் மூலம் உங்களுக்கு 15% சேதாரத்துக்கான கட்டணம் இல்லை என்பதால், அதுவே உங்களுக்குக் கிடைக்கும் லாபம்தான். மற்ற திட்டங்களில் பணம் சேர்க்கும்போது இந்த அளவுக்காவது நிச்சய லாபம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நகைச் சீட்டு... கோல்டு ஃபண்ட்... தங்கப் பங்குகள்... தங்கம் வாங்க எது பெஸ்ட்?

ஆனால், இந்தத் திட்டத்தில் சில ரிஸ்க்குகளும் உண்டு. நகைச் சீட்டு நடத்தும் நிறுவனம் எப்படிப்பட்டது என்பதை நன்கு தெரிந்துகொண்டு சேர்வது நல்லது. சிறிய நிறுவனங்கள் நேர்மையாக நடத்தப்படும்பட்சத்தில் அவற்றில் சேரலாம். நகைக்கடை நிறுவனங்கள் திடீரென மூடப்பட்டால், இழப்பே ஏற்படும். நகைச் சீட்டு நடத்தும் நிறுவனங்கள், தங்கள் கடைகளிலேயே தங்க நகைகளை வாங்கிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதினால், குறைந்த காரட் மற்றும் தரம் குறைந்த தங்கத்தைக் கொடுக்க வாய்ப்புண்டு. எனவே, எல்லா விஷயங்களையும் நன்கு ஆராய்ந்தபின்பே நகைச் சீட்டு திட்டத்தில் சேருவது நல்லது.

கோல்டு இ.டி.எஃப் ஃபண்டுகளும், கோல்டு ஃபண்டுகளும்


புதிய தலைமுறையினர் நேரடியாக தங்க நகைகளை வாங்கி முதலீடு செய்ய விரும்புவதில்லை. காரணம், இன்றைக்கு எளிதில் திருடப்படும் பொருள்களில் முதலிடத்தில் தங்கம் இருக்கிறது. தங்க நகைகளை வாங்கிவிட்டு, அவற்றை வீட்டில் வைத்து, நிம்மதியில்லாமல் அலைவதைவிட வேறு வழிகளில் முதலீடு செய்யலாமா எனப் பலரும் யோசித்து வருகின்றனர். இதன் விளைவு, காகித வடிவிலான தங்கப் பத்திரங்களையோ அல்லது கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் மூலமாகவோ முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.  

நகைச் சீட்டு... கோல்டு ஃபண்ட்... தங்கப் பங்குகள்... தங்கம் வாங்க எது பெஸ்ட்?



கோல்டு இ.டி.எஃப், கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய இரண்டுமே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களினால் பராமரிக்கப்பட்டு வருபவை. இவை இரண்டையும் மேலோட்டமாகப் பார்த்தால், ஒன்றுபோல தோன்றும். என்றாலும், அவற்றுக்குள் சில வேறுபாடுகள் உண்டு. 
 
1) விலை நிர்ணயம்

கோல்டு இ.டி.எஃப்-பானது தங்கத்தின் சர்வதேச விலையை நேரடியாகப் பிரதிபலிக்கும் என்பதால், அதன் வர்த்தகம் வெளிப்படையாக இருக்கும். ஆனால், கோல்டு மியூச்சுவல் ஃபண்ட், தங்கத்தின் விலையை மட்டுமில்லாமல், அந்த ஃபண்ட் வைத்திருக்கிற மற்ற முதலீடுகளின் விலைப்போக்கையும் உள்ளடக்கியதாக இருப்பதால், சற்று வித்தியாசத்துடன் அதன் என்.ஏ.வி வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

2) முதலீடு செய்வதிலுள்ள வேறுபாடுகள்

கோல்டு இ.டி.எஃப்-ஐ பங்குச் சந்தை மூலம் வாங்கவும், விற்கவும் முடியும். இதற்கு டீமேட் அக்கவுன்ட் அவசியம் தேவை. ஆனால், கோல்டு ஃபண்டில் முதலீடு செய்வதற்கு டீமேட் கணக்குத் தேவையில்லை. மியூச்சுவல் ஃபண்டுகளை வாங்குகிற மாதிரி, ஃபண்ட் விநியோகஸ்தர் மூலம் கோல்டு ஃபண்டுகளை வாங்கலாம். டீமேட் கணக்கு இல்லாதவர்கள் கோல்டு இ.டி.எஃப்-ல் முதலீடு செய்ய முடியாது என்பதற்காகவே, கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் கொண்டு வரப்பட்டது.

3) சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்

கோல்டு இ.டி.எஃப்-ல் இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தக நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம். கோல்டு ஃபண்ட் மூலமும் எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம் என்றாலும், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட அளவு பணத்தை முதலீடுசெய்து, எஸ்.ஐ.பி முறையில் வாங்குவதைப் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படி வாங்கும்போது அந்தத் திட்டத்தின் என்.ஏ.வி-யின் அடிப்படையில் யூனிட்கள் வழங்கப்படும்.

4) குறைந்தபட்ச முதலீடு

கோல்டு ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் மாதமொன்றுக்குக் குறைந்தபட்சமாக ரூ.1,000 கூட முதலீடு செய்யலாம். ஆனால், கோல்டு இ.டி.எஃப்-ன் ஒரு யூனிட் என்பது ஒரு கிராமின் விலையையொட்டி இருப்பதால், சுமாராக ரூ.3000 என்கிற அளவுக்காவது முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

5) பரிவர்த்தனைக் கட்டணங்கள்


கோல்டு இ.டி.எஃப் வாங்கும்போதும் விற்கும்போதும் 0.62% முதல் 1.2% வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பராமரிப்புக் கட்டணம் ஆண்டுக்கு 1% கட்ட வேண்டும். மற்றபடி நுழைவுக் கட்டணம், வெளியேறும் கட்டணம் இதிலில்லை.  

நகைச் சீட்டு... கோல்டு ஃபண்ட்... தங்கப் பங்குகள்... தங்கம் வாங்க எது பெஸ்ட்?

ஆனால், கோல்டு ஃபண்ட் மூலம் முதலீடு செய்யும்போது (வாங்கும்போது) கட்டணம் எதுவுமில்லை. யூனிட்களை விற்கும்போது, வெளியேறும் கட்டணம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் விதிக்கப்படுகின்றன. 0.5% முதல் 3% வரை, முதலீட்டின் கால அளவைப் பொறுத்து வேறுபடும். பராமரிப்புக் கட்டணம் ஆண்டுக்கு 1% வசூலிக்கப்படுகின்றன.

கோல்டு ஃபண்டுகளின் கட்டணங்கள், கோல்டு இ.டி.எஃப்-பைவிட சற்று அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. ஏனெனில், கோல்டு ஃபண்டினை நிர்வகிப்பதற்கான செலவுகள் அதிகம். மேலும்,  கோல்டு ஃபண்ட் முதலீடுகள், கோல்டு இ.டி.எஃப் மீது செய்யப்படுவதால் (ஏற்கெனவே கோல்டு இ.டி.எஃப் அதற்குரிய செலவினங்களை உள்ளடக்கிய ஒன்று) கட்டணம் சற்றும் அதிகமாகவே இருக்கும்.

6) எளிதாகப் பணமாக்குதல்

கோல்டு இ.டி.எஃப் திட்டங்கள் பங்குச் சந்தையில் வர்த்தகமாவதால், அவற்றின் விலை ஏற்ற இறக்கத்துக்கேற்ப நாம் விரும்பும் விலையில் வாங்கவோ அல்லது விற்கவோ முடியும். ஆனால், கோல்டு ஃபண்ட் திட்டங்களில் என்.ஏ.வி-யின் அடிப்படையில் நிர்ணயம் செய்வதால், இன்ன விலை என்பதை முதலீட்டாளர்களால் தீர்மானிக்க இயலாது. கோல்டு இ.டி.எஃப் மற்றும் கோல்டு ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும். ஆனாலும், இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து நகை வாங்கும்போது சேதாரம் என்கிற வகையில் குறிப்பிட்ட தொகையை இழக்க வேண்டியிருக்கும்.   

நகைச் சீட்டு... கோல்டு ஃபண்ட்... தங்கப் பங்குகள்... தங்கம் வாங்க எது பெஸ்ட்?

தங்கம் சார்ந்த நிறுவனப் பங்குகள்

நகைச் சீட்டு, கோல்டு இ.டிஎஃப் அல்லது ஃபண்ட்  திட்டங்களில் ரிஸ்க் குறைவு என்பதுடன் நாம் அவற்றை அதிகம் கண்காணிப்பதற்கான தேவையில்லை. ஆனால், இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் என்பது குறைவாகவே இருக்கும். ஆனால், தங்கம் சார்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் கணிசமான வருமானத்தை நம்மால் ஈட்ட முடியும்.

உதாரணமாக, தங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பங்கு நிறுவனங்களான டைட்டன், பி.சி ஜுவல்லர்ஸ் நிறுவனப் பங்குகளை எடுத்துக்கொள்ளலாம். டைட்டன்  நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ஓராண்டுக்குமுன் சுமார் ரூ.400-ஆக இருந்தது. இந்தப் பங்கு தற்போது  ரூ.600 வரை உயர்ந்து, வர்த்தகமாகிறது. அதாவது, 50% லாபம் தந்துள்ளது. இதேபோல, பி.சி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ஓராண்டுக்குமுன் சுமார் ரூ.250. அது    தற்போது ரூ.375-க்கு மேல் சென்றுள்ளது. இது சுமார் 50% அதிகம். இந்தப் பங்குகள் மூலம் கிடைத்த லாபத்தை எடுத்து, 20% சேதாரமாக நீங்கள் தந்தால்கூட, 30% அளவுக்குக் கூடுதலாக உங்களால் தங்கத்தை வாங்க முடியும்.

தங்கத்துடன் தொடர்பில்லாத வேறு பங்குகளில்கூட முதலீடுசெய்து, அதிக லாபம் பார்த்து, கூடுதல் தொகைக்குத் தங்கம் வாங்க முடியும். என்றாலும், எல்லாப் பங்குகள் மூலமும் லாபம் பார்க்க முடியும் என்று சொல்ல முடியாது. சரியான பங்குகளைத் தேர்வு செய்யாதபட்சத்தில் மிகுந்த நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் இருப்பதை மறுக்க முடியாது.  

முடிவாக... மேற்சொன்ன எந்தத் திட்டமானாலும், நம்முடைய சேமிப்பின் நோக்கம், காலம் - இந்த இரண்டையும் முன்கூட்டியே திட்டமிட்டால், முதலீட்டின் முழுப்பயனை அடைய முடியும்.

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

தங்கம் - சமூகத்துக்குப் பயன் தராத முதலீடா?

ங்கத்தின் மீதான முதலீட்டை ‘டெட் இன்வெஸ்ட்மென்ட்’ என்பார்கள். இதன் அர்த்தம், இதன்மீது செய்யப்படும் முதலீடுகள், பொருளாதாரச் சுழற்சிக்கு உதவுவது கிடையாது என்பதே.  உதாரணமாக, ஒருவர் வீடு கட்ட ஆரம்பிக்கிறார் எனில், அதற்காக சிமென்ட், செங்கல், மணல், இரும்புக் கம்பி போன்றவற்றை வாங்க வேண்டும். அவர் செலவு செய்கிற பணமானது பல்வேறு துறைகளில் பயணித்து, வேலைவாய்ப்பை உருவாக்கி, சமூகத்துக்கு பல பயன்களைத் தருகிறது. ஆனால், அந்தப் பணத்தைத் தங்கத்தில் முதலீடு செய்தால், அந்த தங்கமானது அவருடைய லாக்கரில் சென்று தஞ்சமடைந்துவிடும். பொருளாதாரச் சுழற்சியில் பங்குபெறாமல் போய்விடுவதால் தான், இதனை ‘டெட் இன்வெஸ்ட்மென்ட்’ என்று அழைக்கிறார்கள்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism