Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் டைரக்ட் பிளான் யாருக்கு ஏற்றது?

மியூச்சுவல் ஃபண்ட் டைரக்ட் பிளான் யாருக்கு ஏற்றது?
பிரீமியம் ஸ்டோரி

மியூச்சுவல் ஃபண்டுகளில் ஏஜென்டுகள் மூலமாகவும், ஏஜென்டுகள் துணையின்றி நேரடியாகவும் முதலீடு செய்ய முடியும். டைரக்ட் பிளான்கள் (Direct Plans) மூலம் நேரடியாக முதலீடு செய்யும்போது சற்றுக் கூடுதல் லாபம் கிடைக்கும். டைரக்ட் பிளானில் ஏஜென்டுகள் என யாருமில்லை என்பதால், அவருக்குத் தரவேண்டிய கமிஷன் பணம் முதலீட்டாளருக்கு வருமானமாகவே கிடைக்கிறது.   

மியூச்சுவல் ஃபண்ட் டைரக்ட் பிளான் யாருக்கு ஏற்றது?

ரெகுலர் பிளான்களில் சராசரியாகச் செலவு விகிதம் (Expense Ratio) 2.60 சதவிகிதமாக உள்ளது. இது டைரக்ட் பிளான்களில் 1.60 சதவிகிதமாக  உள்ளது. இந்த ஒரு சதவிகித வருமானம் வித்தியாசத்தினால், என்ன பெரிய இழப்பு ஏற்படப் போகிறது என்று பார்த்தால், உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்.

ஒருவர் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஒன்றில் மாதம் ரூ.5,000 வீதம் 15 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடுசெய்து வருகிறார் எனில், அந்த முதலீட்டுக்கு ரெகுலர் பிளானில் 11%, டைரக்ட் பிளானில் 12% என ஆண்டுக்கு சராசரியாக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.   அப்போது ரெகுலர் பிளானைவிட டைரக்ட் பிளானில் ரூ.2,13,800 அதிக வருமானம் கிடைத்திருக்கும்.

முதலீட்டு மீதான ரிஸ்க்கைப் பொறுத்தவரை, இரண்டு பிளான்களிலும் எந்த வேறுபாடுமில்லை என்றாலும், டைரக்ட் பிளானில் ஏஜென்ட் / நிதி ஆலோசகரின் ஆலோசனை கிடைக்காது என்பதால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கே இது ஏற்றதாக இருக்கும். மேலும், ஃபண்டின் செயல்பாட்டைத் தொடர்ந்து கணிக்க நேரம் இருப்பவர்களுக்கே டைரக்ட் பிளான் ஏற்றது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குப் புதியவர்கள், அதற்குப் பழக்கமாகும்வரை, நிதி ஆலோசகரின் வழிகாட்டுதலின்பேரில் முதலீடு செய்வதே நல்லது.   
     
- சேனா சரவணன் 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism