Published:Updated:

BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்

Published:Updated:
BIZ பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
BIZ பாக்ஸ்
BIZ பாக்ஸ்

`பீஷ்மர்போல பார்த்துக் கொண்டிருக்கமாட்டேன்!’’

``ப
ணமதிப்பு நீக்கம் காரணமாக மோசமான பொருளாதாரச் சீர்குலைவு உருவாகியுள்ளது. தற்போதைய சீர்குலைவைச் சரிசெய்ய, அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்’’ என முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா சில நாள்களுக்கு முன்பு சொன்னதுதான் இன்றுவரை பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ‘‘திரெளபதியின் சேலையைத் துரியோதனன் உரித்தபோது பீஷ்மர் அதைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். ஆனால், இந்தியப் பொருளாதாரம் சீர்குலைந்து வரும்போது என்னால் அப்படி சும்மா பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பொருளாதார வளர்ச்சி பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்பதற்குப் பதிலாக, பேசிக்கொண்டே இருக்கிறார் மோடி’’ என்று வெளுத்து வாங்கி யிருக்கிறார். இத்தனை நாளும் எங்கே போனார் என்று தெரியாமல் இருந்தவர் இப்போது திடீரென பரபரப்பைக் கிளப்புவது ஏனோ?

BIZ பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போர்ப்ஸ் பட்டியலில் முன்னணித் தொழிலதிபர்கள்!

ந்தியாவிலுள்ள பெரும் பணக்காரர்களின் பட்டியலைச் சமீபத்தில் வெளியிட்டது போர்ப்ஸ் நிறுவனம். இந்தப் பட்டியலில் முதலிடத்திலிருக்கும் ‘ரிலையன்ஸ்’ முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 39 பில்லியன் டாலர். இரண்டாம் இடத்திலிருக்கும் ‘விப்ரோ’ அசீம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 19 பில்லியன் டாலர். மூன்றாம் இடத்திலிருக்கும் இந்துஜா சகோதரர்களின் சொத்து மதிப்பு 18.4 பில்லியன் டாலர். தமிழகத்தைப் பொறுத்தவரை, ஹெச்.சி.எல்-லின் சிவ் நாடார் 7-ம் இடத்திலும், சன் டிவி-யின் கலாநிதி மாறன் 29-ம் இடத்திலும், டாஃபே நிறுவனத்தின் மல்லிகா சீனிவாசன்  63-வது இடத்திலும், முருகப்பா குழுமத்தின் வெள்ளையன் 66-வது இடத்திலும் இருக்கிறார்கள்!

BIZ பாக்ஸ்

விவசாயக் கடனில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது. கேரளா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற நெருக்கடி அதிகமாகவே இருக்கிறது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் போன்ற சில மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதால், வங்கிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி ரூபாய் சுமை ஏற்படும் என கிரிசில் நிறுவனம் சொல்லியிருக்கிறது.

BIZ பாக்ஸ்

``ரோபோக்களுக்கு வேலை கிடையாது’’

``இ
யந்திரமயமாதலால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் என மிகைப்படுத்தப்பட்ட கருத்து நிலவுகிறது. இதை `ரோபோஃபோபியா’ எனலாம். மனித ஆற்றல் தேவைப்படும் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை துறைகளில் ரோபோக்களுக்கு வேலை கிடையாது. இது முழுக்க முழுக்க மனித ஆற்றல் சார்ந்தது. எனவே, இதுகுறித்து கவலைப்படவேண்டிய அவசியமில்லை. சில ஆசிய நாடுகள் வறுமையிலிருந்து மீண்டதற்கு, உற்பத்தித் துறை அதிகரித்ததும், ஏற்றுமதி மேம்பட்டதுமே முக்கியக் காரணமாகும். வருமானத்தை அதிகரித்து, அதன் மூலம் சமூகநலத் திட்டப் பணிகளில் அரசு அதிக அளவில் முதலீடு செய்யும்போதுதான் இது சாத்தியமாகும்’’ எனப் பொருளாதார நிபுணர் அர்விந்த் பனகாரியா கூறியுள்ளார். ரோபோக்களைக் கொண்டுவருவதினால் வேலையிழப்பு ஏற்படாமல் இருந்தால் சரிதான்!

BIZ பாக்ஸ்

பொருளாதாரம் வளர்ச்சி பெறும்!

`நா
ன் பொருளாதார நிபுணரும் அல்ல; அவ்வாறு நான் கூறிக் கொண்டதுமில்லை. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் ஆறு ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தித்திறன் வெறும் 5.7 சதவிகிதம் தான் இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் வளர்ச்சிவிகிதம் 7.5% இருந்தபிறகு, கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டதை ஏற்றுக்கொள்கிறோம். இருப்பினும், வரும் காலாண்டில் 7.7 சதவிகித வளர்ச்சி பெறும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ஜி.எஸ்.டி-யை இன்னும் எளிமையாக்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” எனப் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

பொருளாதாரம் வளர்ச்சி கண்டால் நல்லதுதான்!

BIZ பாக்ஸ்

எஸ்.பி.ஐ-யின் புதிய தலைவராக ரஜ்னிஷ் குமார்! 

பா
ரத ஸ்டேட் வங்கியின் தலைவராக ரஜ்னிஷ் குமார் பொறுப்பேற்றுள்ளார். அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக் காலம் அக்டோபர் 6-ம் தேதியோடு முடிவடைந்த நிலையில், அந்த இடத்தை ரஜ்னிஷ் குமார் நிரப்பியுள்ளார். 1980-ம் ஆண்டு எஸ்.பி.ஐ வங்கியில் புரபேஷனரி ஆபீஸராகப் பணியில் சேர்ந்த ரஜ்னிஷ் குமார், பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார். நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ-யின் மேலாண் இயக்குநராக இருந்த ரஜ்னிஷ் குமாருக்கு, இந்தப் பதவி மூலம் புரமோஷன் கிடைத்துள்ளது. எஸ்.பி.ஐ வங்கித் தலைவராக ரஜ்னிஷ் குமார் மூன்று ஆண்டுகள் பதவியில் இருப்பார். வங்கித் துறை கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ள இந்தக் காலகட்டத்தில் அவரின்மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது!

4,50,000  இயக்குநர்கள் - ஷெல் கம்பெனிகளை முழுவதுமாக முடக்க வேண்டும் என மத்திய அரசாங்கம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து சுமார் 4.5 லட்சம் இயக்குநர்கள் தகுதியிழப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism