நம் வருமானம் குறைவாக இருந்தாலும், அதனைத் திட்டமிட்டு செலவழிப்பதன் மூலம் நிறைவான வாழ்க்கையை வாழமுடியும். செலவுகளுக்கான திட்டம் இல்லாமல் இருக்கும்போதுதான், கடன் வாங்கும் நிலை ஏற்படும்.

மருத்துவச் செலவு வேண்டுமானாலும் திடீரென வரும். குழந்தையின் பள்ளிக் கட்டணம் ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட சமயத்தில்தான் வரும். இதற்கான பணத்தை திட்டமிட்டுச் சேர்க்காமல், கடன் வாங்கிக் கட்டுவது சரியல்ல. நாணயம் விகடன் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) நாம் நடத்திய சர்வேயின்படி (பார்க்க, சர்வே முடிவு), 60% பேர் கடன் வாங்கியும், எந்தத் திட்டமிடாமலும்தான் குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தைக் கட்டுகின்றனர். 40% பேர் மட்டுமே மாதந்தோறும் பணம் சேர்த்து கட்டணத்தைச் செலுத்துகின்றனர்.

ஒரு குழந்தையின் பள்ளிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.30,000 எனில், மாதமொன்றுக்கு ரூ.2,500-யை வங்கி, தபால் அலுவலக ஆர்.டி அல்லது மியூச்சுவல் ஃபண்டில் கடன் சார்ந்த திட்டத்தில் சேமித்தால் போதும்; கஷ்டப்படாமல் பள்ளிக் கட்டணத்தைக் கட்டிவிடலாம். இப்படிச் சேர்ப்பதால் சில நூறு ரூபாய் லாபமும் கிடைக்கும். கடன் வாங்கினால், எத்தனை சதவிகிதம் வட்டி விகிதம் என்பதைப் பொறுத்து சில ஆயிரத்தை வட்டியாக கட்ட வேண்டும். பள்ளிக் கட்டணத்தைக் கட்ட இப்போதே சேமிக்கத் தொடங்குங்கள்!

- ஏ.ஆர்.கே