“எனக்கு என் பணத்தைப் பாதுகாப்பதைவிட, அடுத்தவர்களின் பணத்தைப் பாதுகாப்பதில் கூடுதல் திருப்தி கிடைக்கும். அதனால்தான் ஷேர் மார்க்கெட்டில் டிரேடிங் தொழிலை விட்டுவிட்டு, மியூச்சுவல் ஃபண்டில் இறங்கினேன்” என்று உற்சாகமாகப் பேசுகிறார் கோவையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கலக்கிவரும் கோவையைச் சேர்ந்த ராகேஷ் ரடாடியா. மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முதலீட்டு முறையின் மூலம் அதிக அளவிலான கணக்கை நிர்வகிப்பவர்களில் இவருக்கு இரண்டாவது இடம்.

ராகேஷின் தனிச்சிறப்பு, ஒரு வீட்டிலுள்ள அனைவரின் பெயரிலும் எஸ்.ஐ.பி கணக்கைத் தொடங்குவதுதான். தற்போது கோவை மட்டுமின்றி, பெங்களூரு, மும்பை, டெல்லி, புனே எனப் பல்வேறு இந்திய நகரங்களில் வசிக்கும் மக்களிடமும் எஸ்.ஐ.பி கணக்கைத் தொடங்கியிருக்கிறார். நாடு தாண்டி சிங்கப்பூரில் இருப்பவர்களையும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வைத்திருக்கிறார். எப்போதும் பரபரப்பாகச் செயல்பட்டு வரும் ராகேஷை, கோவை ஆர்.எஸ் புரத்திலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

“என் பூர்வீகம் ராஜஸ்தான். ஆனால், என் தந்தை தன்பத்ராஜ் ரடாடியா, அவரின் திருமணத்துக்குமுன்பே கோவைக்கு வந்துவிட்டார். நான் பிறந்தது, படித்தது எல்லாமே கோவைதான். பி.எஸ்.ஜி கல்லூரியில் பி.காம் படித்தேன். என் திருமணமும் இதே ஊரில்தான் நடந்தது.

நான் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு ஷேர் மார்க்கெட்டில் டிரேடிங்தான் செய்துவந்தேன். ஒருமுறை என் நண்பர் ஒருவர் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்துத் தெரிந்துகொண்டேன். அதன்பிறகுதான், மியூச்சுவல் ஃபண்டில் இறங்கினேன். நான் இதில் இறங்கி 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது என்னிடம் சுமார் 1,200 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்காக மக்களின் நம்பிக்கையைப் பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ‘பணம் இன்று வரும், நாளை போகும். ஆனால், மனிதர்களின் உறவுதான் முக்கியம்’ என்று என் தந்தை அடிக்கடி சொல்வார். எனது வாடிக்கையாளர்களிட மிருந்து முதலீட்டினைப் பெற வேண்டும் என்பதற்காக மட்டும் நான் பழகமாட்டேன். நடப்புச் சூழ்நிலைகள், அவர்களின் குடும்பச் சூழல்கள் என்று பல விஷயங்களைப் பேசுவேன். அவர்களது குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரின் நலன் குறித்தும் நிஜமான அக்கறையுடன் விசாரிப் பேன். அதனால்தான் ஒரு குடும்பத்தில் அனைவரின் பெயரிலும் எஸ்.ஐ.பி கணக்கைத் தொடங்க அவர்கள் சம்மதிக்கின்றனர். சமீபத்தில் ஒரு குடும்பத்தில் உள்ள இருபது பேருக்கு எஸ்.ஐ.பி கணக்குத் தொடங்கினேன். என் வாடிக்கையாளர்களை எங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி களுக்கு அழைப் பேன். அவர்களது வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைப்பார்கள். குடும்பத்தில் ஒருவராகத்தான் நாங்கள் பழகுவோம்.

முதலீட்டைத் தாண்டி, வாடிக்கையாளர்களுக்கு எப்படியெல்லாம் உதவ முடியுமென்று பார்ப்பேன். உதாரணமாக, அவர்கள் குடும்பத்துடன் சுற்றுலா போனால், அவர்கள் செல்லும் இடங்களில் நல்ல ஹோட்டல்கள், சுற்றிப் பார்க்கத் தகுந்த இடங்களை நான் பரிந்துரைப்பேன். எனவே, அவர்கள் என்னை முதலீட்டு ஆலோசகர் என்று மட்டும் பார்க்காமல், குடும்ப நண்பராகவே பார்க்கி றார்கள்” என்றவரிடம், ‘பல்வேறு காரணங்களால், பங்குச் சந்தை ஏறியிறங்கும் போது, முதலீட்டாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லி சமாளிக்கிறீர்கள்' என்று கேட்டோம்.

“சந்தை என்பது எப்போதுமே ஏற்ற, இறக்கங் களுடன்தான் காணப்படும். ஏற்றம் மட்டுமே இருந்தால், அதுவும் வாடிக்கை யாளருக்கு ஒருவிதத்தில் நஷ்டம்தான். சந்தை பற்றி வாடிக்கையாளர்களிடம் எப்போதுமே நான் நெகட்டிவாகப் பேச மாட்டேன். சந்தை பற்றி ஏதாவது சொல்லி அவர்களைப் பயமுறுத்தக் கூடாது. ‘2008-ம் ஆண்டில் இதைவிடக் கடினமான சூழலைச் சந்தித்தோம். அதனுடன் ஒப்பிடும்போது, தற்போது நிலைமை எவ்வளவோ பரவாயில்லை' என்பேன். அப்படிச் சொல்லியும் வாடிக்கையாளரின் பயம் குறையவில்லை எனில், பத்து ஆண்டுகளுக்குமுன் முதலீடு செய்திருந்த வாடிக்கை யாளர்களின் முதலீட்டு டேட்டாவைக் காட்டி, பாசிட்டிவாகப் பேசுவேன். நான் இப்படிப் பேசுவது வாடிக்கையாளர்களின் முதலீடு தொடர்ந்து என்னிடம் இருக்க வேண்டும் என்பதற்காகவல்ல. சந்தையைப் பொறுத்தவரை, இன்றிருக்கும் நிலை நாளை மாறும். குறுகிய காலத்தில் சந்தை இறங்கலாம்; ஆனால், நீண்ட காலத்தில் நிச்சயம் உயரும் என்பதை உங்களுடைய வாடிக்கையாளருக்குப் புரிய வைத்துவிட்டால், அவர்கள் சந்தையை விட்டுச் செல்லவேமாட்டார்கள்’’ என்றார் உறுதியாக.

‘‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் நிறைய பணம் சேர்க்க முடியுமா?’’ - சாதாரண மனிதர்கள் கேட்கும் கேள்வியை நாமும் அவரிடம் கேட்டோம்.

“முடியும். அப்படிச் சேர்த்தவர்கள் நிறையவே என்னிடம் இருக்கிறார்கள். சமீபத்தில், என்னுடைய வாடிக்கையாளர் ஒருவர், எஸ்.ஐ.பி தொகை மூலம் பணம் சேர்த்து வீடு கட்டினார். சில ஆண்டு களுக்குமுன் ரூ.10 ஆயிரத்தில் கணக்கைத் தொடங்கிய நண்பர் ஒருவரின் கணக்கின் மதிப்பு தற்போது பல கோடிகளில் உள்ளது.

சிறிய தொகையை இப்போது முதலீடு செய்தாலும், எதிர் காலத்தில் அது மிகப் பெரிய தொகை யாக வளர்ந்து நிற்கும். ஆனால், இன்றைக்குப் பலரும் எக்கச்சக்கமாக செலவு செய்கிறார்களே தவிர, எதிர்காலத்துக்காக முதலீடு செய்யமாட்டேன் என்கிறார்கள். வீண்செலவு களைக் குறைத்து முதலீடு செய்தால், எதிர்காலத்தில் யாருக்கும் பணக்கஷ்டம் என்பதே இருக்காது’’ என்றார்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் அருமை குறித்து பெண்களுக்குப் புரியவைத்து, அவர்களையும் முதலீடு செய்யவைக்க,தனது மனைவியை இந்தத் துறையில் கொண்டுவரப் போகிறாராம் ராகேஷ். கலக்குங்க சார்!

இரா.குருபிரசாத்

படங்கள்: தி.விஜய்