“யார் ஏ.ஐ-ல் வலிமையாக இருக்கிறார்களோ, அவர்களின் கீழ்தான் இந்த உலகமே இருக்கும்”- வல்லரசுக்கான இலக்கணத்தை இப்படி மாற்றிச் சொல்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். இதற்கு நேர்மாறாக, “மனித இனத்தின்முன் இருக்கும் மிகப் பெரிய ஆபத்துகளில் ஒன்று ஏ.ஐ.” என எச்சரிக்கிறார் இலான் மஸ்க்.

இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்க இன்னொருபுறமோ, ஏ.ஐ-க்காக புதிய அமைச்சகத்தையே உருவாக்கிவிட்டது சவுதி அரேபியா.

‘செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence)’ என்னும் தொழில்நுட்பத்தால் மனிதகுலத்துக்கு என்ன நன்மை என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை காண சென்னை ஐ.ஐ.டி கணினி அறிவியல் துறை பேராசிரியர் காமகோடி வீழிநாதனைச் சந்தித்தோம்.

இவர் பேராசிரியர் மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவை, பொருளாதார மேம்பாடு களுக்காகப் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் வழங்க இந்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள செயற்குழுவின் தலைவரும்கூட. இந்த ஆண்டின் இறுதியில் இந்தச் செயற்குழு, தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. இனி அவர் நமக்கு அளித்த பேட்டி...

“இன்றையச் சூழலில் செயற்கை நுண்ணறிவுக்கான அவசியம் என்ன?”

“அறிவியல் வளர்ச்சி ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸை நம் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் கொண்டு வந்திருக்கிறது.உதாரணமாக, ஒரு பால் தொழிற்சாலையில் ஒரு லட்சம் லிட்டர் நெய்யைக்கூட நம்மால் வெகு சுலபமாகத் தயாரிக்க முடியும். அதுவும் உயர்ந்த தரத்தில். ஆட்டோமேஷன்தான் இதற்குக் காரணம். சில ஆயிரம் பேருக்கு மட்டுமே உற்பத்தி செய்துகொண்டிருந்த பொருள்களை, பல லட்சம் பேருக்கு உற்பத்தி செய்ய வேண்டுமெனில், அதிக மனித உழைப்புத் தேவை. ஆனால், ஆட்டோமேஷன் இருந்தால், அந்தச் சிக்கல் இல்லை.

வங்கியில் காசோலை ஒன்றை கிளியர் செய்ய பல பேருடைய உழைப்பு தேவைப்படுகிறது. சிலநூறு காசோலை என்றால் பிரச்னையில்லை. ஆனால், தற்போது லட்சக் கணக்கான காசோலைகள் கிளியர் செய்யப்படுவதற்காக வங்கிகளில் குவிகின்றன. அத்தனை காசோலைகளையும் சோதிக்க, மனிதர்கள் தேவை என்றால் வங்கிகளின் நிலை என்னாவது? இந்த இடத்தில்தான் ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸின் தேவை உருவாகிறது. ஒரு காசோலை இப்படித்தான் இருக்க வேண்டும், அதில் இந்தப் பிரச்னையெல்லாம் இருக்கக்கூடாது என்பது போன்ற விதிமுறைகளை எழுதி ஒரு சிஸ்டத்தை தயார் செய்து விட்டால், ஒரே நாளில் லட்சக்கணக்கான காசோலைகளை எளிதாக கிளியர் செய்ய முடியும். இப்படித்தான் ஏ.ஐ ஒவ்வொரு துறையிலும் உள்ளே நுழைகிறது.”

“செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தும் ஒன்றா?”

“அச்சுறுத்தும் விதமாக இதில் எதுவும் இல்லை. கணினி, இன்டர்நெட் போன்றவையெல்லாம் புதிதாக உலகில் குதித்த தொழில்நுட்பங்கள் தான். அவை நம் உலகத்தை நிறையவே மாற்றின. ஆனால், ஆர்ட்டிஃபிஷியல் இன்டலி ஜென்ஸ் என்பது புதிதாக உருவானதல்ல. பல காலமாக நம்முடன் இருப்பது. முதலில் இருந்த இன்டலிஜென்ஸ்க்கும், தற்போது இருக்கும் இன்டலி ஜென்ஸ்க்கும் இடையே இருக்கும் முக்கியமான வேறுபாடு, பிக்டேட்டா. இதற்குமுன் இருந்த இன்டலி ஜென்ஸ் தொழில்நுட்பம், மனிதர்களின் கட்டளைகள் மூலமாக மட்டுமே இயங்கின. ஆனால், தற்போதைய இன்டலிஜென்ஸ் தொழில் நுட்பங்கள், அந்தந்தத் துறையில் உருவாகும் டேட்டா மூலமாக இயங்கிவருகிறது. டேட்டா அனலைஸ் மூலமாக இன்டலிஜென்ஸைப் பயன் படுத்துவது கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே இருக்கிறது. ஏனெனில், அதற்கான தொழில்நுட்பங்கள் நிறைய வளர்ந்துவிட்டன. எனவே, முன்பு இருந்ததைவிடவும் தற்போது ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸை இன்னும் முழுமையாக நம்மால் பயன்படுத்த முடியும்.”

“இந்திய அரசு அமைத்துள்ள செயற் குழுவின் பணிகள் என்னென்ன?”

“ஏ.ஐ-யைக்கொண்டு செயல்படும் விதத்தில் ஒரு நிறுவனம் நம் நாட்டுக்கு வருகிறது என்றால், அந்த நிறுவனத்துக்கு அரசு செய்ய வேண்டிய உதவிகள், ஏ.ஐ துறையில் பணிபுரியும் பணியாளர் களை உருவாக்க எடுக்கப்படும் முயற்சிகள், கல்வி நிறுவனங்களில் இதற்காகக் செய்ய வேண்டிய மாற்றங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்ற அனைத்தையும் விவாதித்து அரசுக்குப் பரிந்துரைகளை வழங்குவதுதான் எங்கள் பணி. நாட்டின் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, மனிதவளம், சட்டம், வணிகம் என ஒவ்வொரு பிரிவிலும் பரிந்துரைகள் வழங்க விருக்கிறோம்.”

“நம் நாட்டின் பொருளாதாரத்துக்கு செயற்கை நுண்ணறிவு எப்படிப் பயன்படும்?

“ஏ.ஐ மூலம் அனைத்துத் துறைகளிலும் குறைந்தது 20% வளர்ச்சி இருக்கும். வருங் காலத்தில் உலகளாவிய போட்டியில் நிலைத்து நிற்க ஏ.ஐ நமக்கு அவசியம். நாம் தயாரிக்கும் ஒரு பொருளை வெளிநாடுகள் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நம்மைவிட குறைந்த விலையில் கூடுதல் தரத்துடன் செய்துதர முடியும். நம்மால் அந்தத் தரத்துடன், குறைந்த விலையில் செய்துதர முடியவில்லையெனில், அந்த வணிகத்தில் நாம் பின்தங்கிவிடு வோம். எனவே, உலக நாடுகளுக்கு இணையாக இந்தப் பந்தயத்தில் நாம் ஓடியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.''

“இதனால் மனிதர்களின் வேலை பறிபோகுமா?”

“இன்று ஏ.டி.எம் வந்ததால், வங்கிப் பணியாளர்களுக்கு வேலை குறைந்துவிட்டதா, இல்லையே. திடீரென நான்கு நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. அந்த சமயத்தில் இந்தப் பணியை ஏ.ஐ-யிடம் விட்டுவிட்டால், கடந்த காலத்தின் எல்லா டேட்டாக்களையும் அனலைஸ் செய்து ‘இவ்வளவு பணம் வைக்கலாம்’ எனக் கணித்துச் சொல்லிவிடும். இதன்மூலம் வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நல்லதுதான் நடக்கும்.

எப்படி ஐ.டி துறை திடீரென பல லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியதோ, அதுபோல ஏ.ஐ-யும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இது பணியாளர்களுக்கு எதிரியாக செயல்படும் ஒரு தொழில்நுட்பமல்ல; ஏற்கெனவே செய்துவரும் பணிகளை இன்னும் மேம்படுத்த உதவும் ஒரு தொழில்நுட்பமே. எனவே, வேலைவாய்ப்புகள் பறிபோய் விடும் என கவலைபடத் தேவையில்லை. மக்கள் இந்தத் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, விரைவான வளர்ச்சி சாத்தியம். ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் என்பது காலத்தின் தேவையல்ல; காலத்தின் கட்டாயம்'' என்று முடித்தார் காமகோடி.

ஏ.ஐ-யினால் நம் நாட்டில் வேலைவாய்ப்பு பெருகினால் சரிதான்!

- ஞா.சுதாகர்

படம்: மீ.நிவேதன்