என் பெயர் பேலன்ஸ்டு ஃபண்ட். என்னைப் பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாது. ஆனால், முதலீட்டாளர்களாகிய உங்களைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும். எனவே, என்னைப் பற்றி சில கூடுதல் தகவல்களை உங்களிடம் சொல்கிறேன்.

மனிதன் பாதி, மிருகம் பாதி என்கிற மாதிரி, சில விஷயங்களின் கலவையாக என்னை உருவாக்கியிருக்கிறார்கள். பொதுவாக, 35% கடன் பத்திரமாகவும், 65% பெரிய கம்பெனிகளின் பங்குகளாகவும் நான் இருக்கிறேன். இதனால்தான் என்னால் பல சமயங்களில் நன்கு செயல்பட்டு நல்ல வளர்ச்சியைத் தர முடிகிறது.

என்னிடமிருந்து இரண்டு வகையில் உங்களுக்கு வருமானம் கிடைக்கும். ஒன்று, வளர்ச்சி (Growth), மற்றொன்று, டிவிடெண்ட் (Dividend). மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை என்னுடனே இருந்து என்னை முழுமையாக ஆதரிப்பவர்களுக்கு என்னால் முடிந்த அளவுக்கு நல்ல லாபம் தந்து, அவர்களை மகிழ்விக்கிறேன். அதிலும் குறிப்பாக, பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஓய்வு பெறு பவர்கள் என்னை நாடிவந்து ஆதரித்தால் அவர்களுக்கு மாத அடிப்படையிலோ அல்லது மூன்று மாத அடிப்படையிலோ நல்ல வருமானத்தையும் தந்து வருகிறேன். என்னிடமிருந்து வளர்ச்சியை மட்டும் எதிர்பார்ப்பவர்களுக்கு அவர்களின் நம்பிக்கைக்கு மோசம் செய்யாமல் நல்ல வருமானம் தந்திருக்கிறேன்.

மாத அடிப்படையில் என்னை ஆதரிப்பவர்களுக்கும் நீண்ட கால அடிப்படையில் எனது ஆதரவையும் வளர்ச்சியையும் கொடுத்து வருகிறேன். உதாரணமாக, ஐந்து வருடங்களுக்குமுன் ரூ.10,000 முதலீடு செய்திருந்தால், ஆண்டு சராசரி வளர்ச்சி (CAGR) சுமார் 15% எனில், அதன் இன்றைய மதிப்பு ரூ.24,500 ஆகும்.

குறிப்பாக, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மாத அடிப்படையில், குறிப்பிட்ட லாபத் தொகையை அவர்களின் வாழ்வாதாரத்துக்கு அளித்து உதவுகிறேன். அதேபோல், என்னை எப்போது வேண்டுமானாலும் முழுமை யாகவோ அல்லது பகுதியாகவோ தங்கள் தேவைக்கேற்ப பெற்றுக்கொள்ளலாம். என் யூனிட்களை ஓராண்டுக்குப் பிறகு விற்று பணமாக்கும்பட்சத்தில், வருமான வரி கிடையாது.

எனக்கு ஓர் அண்ணன் இருக்கிறான். அவன் பெயர் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் (Balanced Advantage) ஃபண்ட். அவன் என்னை விடப் பாதுகாப்பானவன். அவன் எப்படிப்பட்டவன் எனில், பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும்போது, குறைவான தொகை பங்குச் சந்தையிலும், அதிக தொகை கடன் பத்திரத்திலும், பங்குச் சந்தை இறக்கத்தில் இருக்கும்போது, அதிக தொகை பங்குச் சந்தையிலும், குறைவான தொகை கடன் பத்திரத்திலும் இருக்குமாறு முதலீடு இருக்கும். எங்கள் இருவரையும் விஷயம் தெரிந்த பல நிபுணர்கள் கண்காணிப்பதால், நாங்கள் நல்ல வளர்ச்சியைக் கொடுத்து வருகிறோம்.

எனது மற்றொரு குணாதிசயம் என்னவெனில், ஓய்வூதியம் பெறுபவர்கள் என்னிடம் ரொக்கமாக முதலீடு செய்து ஒரு சிறு தொகையை மாதந்தோறும் எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கும் நான் நல்ல வளர்ச்சியைக் கொடுத்திருக்கிறேன். சில முதலீட்டாளர்கள் வங்கியில் மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்கு வைப்பு நிதியில் வைத்திருப்பார்கள். மிகக் குறைந்த வட்டியே அதற்குக் கிடைக்கும். அந்த சொற்பத் தொகைக்கும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இதுபோன்றவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், என்னை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டால் அவர்களுக்கு மாத அடிப்படையில் ஒரு நல்ல லாபத் தொகையும், முதலீட்டுக்கு நல்ல வளர்ச்சியையும் தருவேன். அதற்கு வரியாக ஒரு நயா பைசாகூட கட்டத் தேவையில்லை.

இத்தனை நாளும் என்னைப் பற்றி உங்களில் பலருக்குத் தெரியாததால், என்னை நாடிவராமல், வேறு ஏதேதோ விஷயங்களைத் தேடிப் போய், நான் தரும் லாபம் அளவுக்குக் கூட லாபம் பெறாமல் போயிருப்பீர்கள். இப்போது நீங்கள் தெரிந்துகொண்டதால், இனியாவது என்னைத் தேடி வருவீர்களா?