தனிநபர் ஒருவர் எவ்வளவு தொகையை சேமிக்க வேண்டும் என்ற கேள்விக்கு தெளிவான பதில் யாருக்கும் தெரிவதில்லை.

ஒருவரது அவசர காலச் செலவுகள் முதல் ஓய்வுக்காலத் தேவை வரைக்கும், குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க வேண்டியிருக்கிறது. இந்த செலவுகளுக்கான பணத்தைச் சேர்க்க குறுகிய கால இலக்குக்கான சேமிப்பு, நீண்ட கால தேவைக்கான சேமிப்பு என்று பிரித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிப்புக்கு என்று தனியே ஒதுக்க வேண்டும். ஒருவரது மாத வருமானத்தில் 25% முதல் 40 சதவிகிதத்தைக் குறைந்தபட்சமாக சேமிக்க வேண்டும்.

கச்சிதமான பட்ஜெட்

ஒருவர் தனது சேமிப்பை மேம்படுத்து வதற்கு மாத வரவு செலவுத் திட்டத்தைத் (budget) தயாரிக்க வேண்டும். சாதாரணமாக, ஒவ்வொரு வீட்டிலும் தேவையில்லாத செலவினங்கள் 10% என்கிற அளவுக்காவது இருக்கும். இந்தச் செலவினைக் குறைத்து, மிச்சமாகும் பணத்தைச் சரியான வகையில் முதலீடாக மாற்ற வேண்டும்.

உதாரணத்துக்கு, ஒவ்வொரு மாதமும் 2,000 ரூபாயை மிச்சப்படுத்தி சேமிக்கத் தொடங்குகிறீர்கள். இதை நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள். உங்களுக்கு ஆண்டுக்கு 12% வருமானம் கிடைத்தால், பத்து ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.4.5 லட்சமாக உயர்ந்திருக்கும். இந்தத் தொகை உங்களின் ஒரு குறிப்பிட்ட இலக்கை நிறைவேற்ற போதுமானதாக இருக்கும்.

அவசர காலச் சேமிப்பு

குடும்பத்துக்குத் தேவையான வருமானத்தை ஈட்டக்கூடியவர் திடீரென வேலையை இழந்து, குறிப்பிட்ட காலம் வரை வருமானமின்றி வீட்டில் இருந்தால் அதுவரை சேமித்த தொகையெல்லாம் காணாமல் போய்விடும்.

இதுபோன்ற எதிர்பாராத தடுமாற்றத்தைச் சமாளிக்க, மூன்று மாத செலவினங்களுக்கான (வீட்டுக் கடனுக்கான தவணைகள் உள்பட) பணம் அவசர காலச் சேமிப்பாக அவசியம் இருக்க வேண்டும். எதிர்பாராத மருத்துவச் செலவுக்கு உதவும் வகையிலும் அவசரச் செலவுக்கான தொகையைத் தனியாகச் சேமித்து வைத்திருப்பது அவசியம்.

எந்தவிதமான வருமானமும் இல்லாமல் மூன்று மாத செலவுகளைச் சமாளிக்கும் வகையில் உங்களுடைய சேமிப்பு இருக்க வேண்டும். திருமணமாகிக் குடும்பமாக உள்ளவர்கள், தங்களின் வருமானத்தை நம்பி குடும்பத்தினர் இருந்தால் சேமிப்பு குறித்து அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆறு மாதம் முதல் 12 மாதம் வரை எந்தவிதமான வருமானமும் இல்லாமல் குடும்பச் செலவினங்கள் அனைத்தையும் சமாளிக்கும் வகையில் சேமிப்புக் கணக்கில் பெரும் தொகையை சேர்த்து வைத்திருக்க வேண்டும்.

அதிக வட்டியில் கடன்

கிரெடிட் கார்டு, அதிக வட்டி கடன்களை ஏற்கெனவே உள்ள சேமிப்புத் தொகையை எடுத்து அடைத்துவிடலாம். இவ்வாறு செய்யும்போது அடுத்த சில மாதங்களிலேயே உங்களுடைய சேமிப்பு தானாகவே உயர ஆரம்பித்துவிடும்.

தொகுப்பு: ஞா.சக்திவேல் முருகன்

படம் : எம்.விஜயகுமார்