யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் குரூப் பிரசிடென்ட் மற்றும் ஹெட் - ஈக்விட்டி, வெற்றி சுப்பிரமணியன் அண்மையில் சென்னைக்கு வந்திருந்தார். கால் நூற்றாண்டுக்கு மேல் நிதிச்சேவை சார்ந்த பணிகளில் பழுத்த அனுபவம் கொண்ட அவர், நமக்களித்த சிறப்புப் பேட்டி...

“கடந்த 15, 20 ஆண்டுகளுக்கு முந்தைய பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கும், இன்றைய முதலீட்டாளர்களுக்கும் இடையே என்ன பெரிய வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்?”

“இருபது ஆண்டுகளுக்குமுன் பங்குச் சந்தையைச் சூதாட்டமாகவே பார்த்தனர். இதை அப்போது பலரும் சட்டபூர்வமான சூதாட்டம் என்பார்கள். ஆனால், கடந்த 5, 10 ஆண்டுகளாக நிதித் திட்டமிடலின் ஒருபகுதியாக பங்குச் சந்தை, பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் (குறிப்பாக, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்) முதலீடு செய்ய வேண்டும் என்கிற சிந்தனை வந்திருக்கிறது. இந்தியாவில், சிறு முதலீட்டாளர்களால் மாதந்தோறும் சுமார் ரூ.10,000-12,000 கோடி, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இதில், பாதி எஸ்.ஐ.பி முதலீட்டு முறையின் மூலம் வந்துகொண்டிருக்கிறது. இப்போது பெரும்பாலான முதலீட்டாளர்கள், இலக்கு நோக்கிய முதலீட்டுக்கு மாறியிருப்பது, அதிக விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.’’

“தற்போது இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை ரூ.21 லட்சம் கோடிக்கு மேலான தொகையை நிர்வகித்து வருகிறது. இது 2020-ல் எவ்வளவாக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது?”

“ஆருடம் சொல்ல நான் ஜோதிடர் இல்லை. மூன்று வருடங்களுக்குமுன், 2017-ம் ஆண்டில் ரூ.21 லட்சம் கோடி நிர்வகிக்கப்படும் என யாரும் சொல்லி இருக்க இயலாது. இந்தியக் குடும்பங்களில் முன்பைவிட, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகரித்துள்ளது. ரியல் எஸ்டேட், ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் வருங்காலத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், இந்த முதலீடுகள் எல்லாம் மியூச்சுவல் ஃபண்ட் பக்கம் திரும்பியிருக்கிறது. தற்போதைய நிலையில், நம்மவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் விரும்பி முதலீடு செய்கின்றனர். அந்த வகையில், இந்தத் துறை வேகமான வளர்ச்சி காண அதிக வாய்ப்புண்டு.’’

“பங்குச் சந்தையின் ஏற்றப் போக்கு இப்படியே தொடருமா?”

“பங்குச் சந்தையின் இயற்கை குணமே, ஏற்ற இறக்கம்தான். அந்த வகையில், சந்தையில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கும். இதை யாராலும் சரியாகக் கணிக்க முடியாது. நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சியின் அடிப்படையில் தான், பங்குச் சந்தை கொடுக்கும் லாபம் அதிகரிக்கும். அந்த வகையில், நீண்ட காலத்தில் இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தின் போக்கில் இருக்கும்.”

“அடுத்த ஐந்தாண்டுகளில் எதிர்காலம் நன்றாக இருக்கும் ஐந்து முக்கியத் துறைகளைச் சொல்ல முடியுமா?”

“தனிப்பட்ட முறையில் துறைகளைக் கவனிக்க வேண்டிய தில்லை. எல்லாத் துறைகளிலும் நல்ல நிறுவனங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, இந்திய வங்கித் துறை சிக்கலில் இருக்கிறது. ஆனால், சில்லறைக் கடன் கொடுத்த வங்கிகள் நல்ல வளர்ச்சி கண்டிருக்கின்றன. நல்ல துறை களிலும் கெட்ட கம்பெனிகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில், துறைகளைக் கவனிக்கத் தேவையில்லை. நிறுவனங்களைக் கவனித்தாலே போதும்.”

“மியூச்சுவல் ஃபண்ட் பிரிவு குறித்து செபி செய்திருக்கும் வகைப்படுத்துதல், மியூச்சுவல் ஃபண்ட் துறையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்குமா?”

“மியூச்சுவல் ஃபண்ட் பிரிவுகள் குறித்து செபி செய்திருக்கும் வகைப்படுத்துதலை முதலீட்டாளர்களின் கோணத்தில் பார்த்தால் மிகவும் நல்ல விஷயம். தற்போது 2000-க்கும் மேல் உள்ள மொத்த ஃபண்டுகளின் எண்ணிக்கை குறையும். மேலும், ஃபண்டுகளை ஒப்பிட்டு வாங்குவது சுலபமாக இருக்கும். ஒரு காலத்தில் லார்ஜ் கேப் ஃபண்டாக ஆரம்பித்த ஃபண்ட், 3-5 வருடங்களில் மிட் கேப் ஃபண்டாக மாறியிருக்கும். இதனால், இந்த ஃபண்டின் ரிஸ்க் கூடியிருக்கும். இப்படி செய்வது முதலீட்டாளர் களைப் பாதிக்கக்கூடும். ஆனால், இனி அப்படி நடக்க வாய்ப்பில்லை. இந்த ஃபண்ட் இப்படிதான் இருக்க வேண்டும் என வரையறை செய்யப்படுவது நல்லது.

அதேநேரத்தில், தற்போது புதுமையான திட்டம் கொண்டுவந்தால், அதற்கு எப்படி அனுமதி வாங்குவது என்பது தெளிவுப்படுத்தப்பட வில்லை. பத்தாண்டுகளுக்கு முன் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் என்கிற புதுமையான திட்டம் வந்தது. இப்போது, பல ஃபண்ட் நிறுவனங்கள் இந்த ஃபண்டை வைத்திருக் கின்றன. இதுபோன்ற புதுமையான திட்டங்கள் இனி வருமா, அதற்கு செபி அனுமதி கிடைக்குமா எனத் தெரியவில்லை.”

“சிறு முதலீட்டாளர் களுக்கு ஏற்றது, குளோஸ்டு எண்டட் ஃபண்டா அல்லது ஓப்பன் எண்டட் ஃபண்டா?”

“சிறு முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோவில் குளோஸ்டு எண்டட் ஃபண்ட் 5% அளவுக்கு இருந்தால் போதும். உதாரணத்துக்கு, பிறந்தநாள் கேக் -ஐ எடுத்துக் கொள்வோம். அதன் பிரதான பகுதி, ஓப்பன் எண்டட் ஃபண்ட் ஆகவும், அலங்காரப் பகுதி (ஐசிங்) குளோஸ்டு எண்டட் ஃபண்ட் ஆகவும் வைத்துக்கொள்ளலாம். குளோஸ்டு எண்டட் ஃபண்டுகளில் சுமார் 20-30 நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்பட்டிருக்கும். இந்தப் பங்குகளைச் சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து விற்று லாபம் பார்க்கும் விதமாகத்தான் போர்ட் ஃபோலியோ வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் அதிக வருமானத்துக்கு வாய்ப்புகள் அதிகம்.’’

“இன்ஷூரன்ஸ் பாலிசிகள் போலவே, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலும் தவறான திட்டங்கள் விற்கப் படுகின்றனவே... இதற்கென்ன தீர்வு?”

“முதலீட்டாளர்களிடையே முதலீடு குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுவதுதான் ஒரே தீர்வு. பல முதலீட்டாளர்கள், முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே பார்க்கிறார்கள். முதலீட்டாளர் களிடம் பேராசை இருக்கக்கூடாது. பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் நீண்ட காலத்தில் 12-15% வருமான எதிர்பார்ப்பு இருப்பது நல்லது. யாராவது ஒருவர் 15 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்கும் என்றால் உஷாராக இருக்க வேண்டும். வருமானத்தைப் பார்க்கும் அதேநேரத்தில், அதிலுள்ள ரிஸ்க்கையும் பார்க்க வேண்டும். முதலீட்டாளர்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்த அதிக விழிப்புஉணர்வு கூட்டங்களை நடத்துவதோடு, கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறோம். செபி, ஆம்ஃபி போன்ற அமைப்புகள் பொது மக்களிடம் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்பு உணர்வைப் பல்வேறு வழிகளில் ஏற்படுத்தி வருகின்றன. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் முதலீடு குறித்த விவரங்களை மாணவர் களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.”

“சிறு முதலீட்டாளர்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?”

“நீண்ட காலத்தில் செல்வம் சேர்க்க பங்குச் சந்தை மற்றும் அது சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள் ஏற்றவையாக உள்ளன. இதற்கான முதலீட்டு முறையாக எஸ்.ஐ.பி உள்ளது. கடந்த 3, 5 ஆண்டுகளின் வருமானம் பார்த்து முதலீடு செய்யாதீர்கள். இந்திய பங்குச் சந்தை கடந்த 25, 30 ஆண்டுகளில் 15-16% வருமானம் கொடுத்திருக்கிறது. கடந்த 10, 20 ஆண்டுகளில் 11-12% வருமானம் கொடுத்துள்ளது. தற்போது இந்திய பங்குச் சந்தையின் பி/இ மதிப்பு 20-22-ஆகவிருப்பதால், இனிவரும் காலத்தில், பங்குச் சந்தை மூலமான வருமானம் 10-12% அளவுக்கு குறைவாகத்தான் இருக்க வாய்ப்புண்டு. அதேசமயம், ஈக்விட்டி ஃபண்டுகளில், ஃபண்ட் மேனேஜர்களின் செயல்பாட்டைப் பொறுத்து இதைவிட அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்த வருமானங்களுக்கு ஓராண்டுக்கு மேற்பட்ட நிலையில் வரி இல்லை என்பதால், மற்ற முதலீடுகளை அதிக வருமானமாகத்தான் இருக்கும்.”

படங்கள்: மீ.நிவேதன்

சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற முறை எது?

“டைரக்ட் பிளான், நிதி ஆலோசகர் மூலமான முதலீடு - இந்த இரண்டில் சிறு முதலீட்டாளர் களுக்கு ஏற்ற முறை எது?”

“முதலீட்டாளரின் இலக்கை அடைய எந்த ஃபண்டைத் தேர்வு வேண்டும் என்பது நிதி ஆலோசகருக்குத் தெரியும். ஃபண்ட் தேர்வு செய்ய வேண்டும் என்பது இப்போது நிதி ஆலோசனையின் ஒருபகுதியாக மாறியிருக்கிறது. முதலீட்டாளரின் மனநிலையைப் புரிந்துகொண்டு, அவர்களின் இலக்குகளை அறிந்து அதற்கேற்ப திட்டமிட நிதி ஆலோசகர் உதவி செய்வார். சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கும்போது, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை நிதி ஆலோசகர், முதலீட்டாளருக்கு எடுத்துச் சொல்வார். டைரக்ட் பிளான் முறையில் முதலீடு செய்யும்போது, இதுபோன்ற எந்த ஆலோசனையும் கிடைக்காது.

நிதி ஆலோசனை, முதலீடு பற்றிய தெளிவான அறிவு, சரியான ஃபண்டைத் தேர்வு செய்யும் திறன், குறிப்பாக முதலீட்டை தொடர்ந்து கண்காணிக்க போதிய நேரம் இருந்தால் மட்டுமே டைரக்ட் பிளான் மூலம் முதலீடு செய்ய வேண்டும். எனக்குத் தெரிந்து, நேரடியாக முதலீடு செய்திருப்பவர்களில் பலர் சந்தை அதிக இறக்கத்தைச் சந்திக்கும்போது எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தியிருக்கிறார்கள். ஈக்விட்டி ஃபண்டில் அதிக லாபம் எதிர்பார்ப்பவர்கள், சந்தை இறக்கத்தில் இருக்கும்போது, எஸ்.ஐ.பி-யை நிறுத்தக் கூடாது என்பதோடு, அந்த நேரத்தில் முதலீட்டை மேற்கொள்வது நல்லது.”

ஆர்காம்.. மூடிஸ் தரக்குறியீடு..!

அனில் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்காம்) ரூ.44,300 கோடி கடனுக்குள் சிக்கியதால், வரும் நவம்பர் 30-ம் தேதியோடு அதனுடைய 2ஜி மற்றும் 3ஜி மொபைல் சேவைகளை நிறுத்திவிடப் போவதாக அறிவித்துள்ளது. இச்சூழலில் மூடிஸ் தரக்குறியீடு நிறுவனம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை கார்ப்பரேட் குடும்ப நிறுவன ரேட்டிங்கிலிருந்து விலக்குவதாக அறிவித்துள்ளது.