Published:Updated:

புதிய தொடர் -1 - இனி உன் காலம்!

புதிய தொடர் -1 - இனி உன் காலம்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய தொடர் -1 - இனி உன் காலம்!

டாக்டர் வி. விஐய் ஆனந்த் ஸ்ரீராம்

புதிய தொடர் -1 - இனி உன் காலம்!

டாக்டர் வி. விஐய் ஆனந்த் ஸ்ரீராம்

Published:Updated:
புதிய தொடர் -1 - இனி உன் காலம்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய தொடர் -1 - இனி உன் காலம்!
புதிய தொடர் -1 - இனி உன் காலம்!

டம் கல்லூரி வகுப்பறை. அணுகுமுறை (Attitude) குறித்த வகுப்பு நடந்து கொண்டிருந்தது. பேராசிரியர் ஒருவர் மாணவர்களிடம் “Boys & Girls come one by one and write something on the board” என்றார்.

மாணவர்கள் ஒரு நிமிஷம் அப்படியே அமைதியானார்கள். திரும்பவும் பேராசிரியர் ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லி அழைத்து எழுதச் சொன்னார். மாணவர்களுக்கு என்ன எழுதுவதென்று தெரியவில்லை. திரும்பவும் அவர் “Write something on the board” என்றார்.

ஒரு மாணவன் ‘attitude’ என்று எழுதினான். இன்னொரு மாணவன், அவனது  பொழுதுபோக்குப் பற்றி எழுதினான். ஒரு மாணவி, தனது பெயரை எழுதினார். இப்படிப் பலரும் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் எழுதினார்கள். ஆனால், அந்தப் பேராசிரியர் எதற்குமே பதிலளிக்கவில்லை. அடுத்து, அடுத்து என்று மட்டும் சொன்னார்.    

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதிய தொடர் -1 - இனி உன் காலம்!

ஒரு பையன் எழுந்து, மற்றவர்கள் எழுதிய எல்லாவற்றையும் அழித்துவிட்டு,      ‘Something’ என்று எழுதினான்.

பேராசிரியர் கைதட்டினார். மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது பேராசிரியர், “உங்ககிட்ட write something on the board-ன்னுதான் சொன்னேன். ஆனா நீங்க உங்களுக்குத் தோணினதை எழுதினீங்க. இவன்  மட்டும்தான் ‘Something’-ன்னு சரியா எழுதினான்’’ என்று சொல்ல, வகுப்பிலிருந்த எல்லாரும் சேர்ந்து “வாவ்” என்று கோரஸாகக் கத்தினார்கள்.

இதுதான் நல்ல அணுகுமுறை. எந்தவொரு விஷயத்தையும் நாம் எப்படி அணுகுகிறோம் என்பதில் தான் நம் வெற்றி இருக்கிறது. பலபேர் கூடியிருக்கும் இடத்தில் நாம் எப்போதும் தனித்துத் தெரிய வேண்டும் என்றால், சரியான அணுகுமுறை நம்மிடம் இருக்க வேண்டும். எப்போது நாம் தனித்துத் தெரிகிறோமோ, அப்போது இந்த உலகம் நம்மை உற்றுநோக்கும்.

ஒரு குட்டிக் கதையைச் சொல்கிறேன்...

ஓர் அழகான குடும்பம். அம்மா, அப்பா, மகள் மூன்று பேர். பெண்ணுக்குத் திருமணமாகிறது. அவள் தன் புகுந்த வீட்டுக்குப் போனாள். இரண்டு மாதம் கழித்துத் தனியாக வீட்டுக்கு வந்தாள். அப்போது அவளின் அம்மா மட்டும் வீட்டில் இருந்தார்.  

புதிய தொடர் -1 - இனி உன் காலம்!

“என்னம்மா, தனியா வந்திருக்க, மாப்பிள்ளை வரலியா” என்று கேட்டார் அம்மா. அதற்கு அவள், “அம்மா, எனக்கு அங்க பிடிக்கவேயில்லை. எப்பவும் வேலை பாத்துக்கிட்டே இருக்குறமாதிரித் தோணுது. எல்லாரும் என்னையே வேலை வாங்குறமாதிரி இருக்கு” என்று  புலம்பினாள்.

உடனே அவளின் அம்மா, “சரிம்மா, நீ கொஞ்சம் நேரம் ஓய்வெடு. இன்னைக்கு நான் முட்டை வேக வச்சு,  உருளைக் கிழங்கு ரோஸ்ட் பண்ணப் போறேன். அப்புறம் உனக்கு டீயும் போடுறேன். நாம அப்புறமா இதப்பத்தி பேசலாம்” என்றாள்.

“சரிம்மா, நான் உதவி செய்றேன்’’ என்று மகள்  உதவி செய்ய முன்வந்தாள். அவள் அம்மா சொன்னபடி மூன்று பாத்திரங்களை எடுத்து,    தேவையான பொருள்களைப் போட்டாள்.

சிறிது நேரத்தில் டீ தயாரானது. சிறிது நேரத்தில முட்டையும், உருளைக் கிழங்கும் வெந்துவிட்டது. தன் மகளைக் கூப்பிட்டு, உருளைக்கிழங்கின் தோலை நீக்கிக் கொடுக்கச் சொன்னாள்.

‘‘இப்ப நாம செஞ்சதுலேருந்து உனக்கு என்னமா புரிஞ்சுது?’’ என்று அம்மா மகளிடம் கேட்டாள். “ஒண்ணும் புரியலையேம்மா” என்றாள் மகள்.

அம்மா சொன்னாள்...

‘‘ முதல்ல உருளைக் கிழங்கு கடினமாயிருந்தது. தண்ணில வெந்து அதனோட கடினத் தன்மையை இழந்துடுச்சு.

இரண்டாவதா போட்ட முட்டை ஓட்டுக்குள்ள திரவமா யிருந்தது. அது தண்ணில வெந்து கடினமா ஆகிடுச்சு.

ஆனா, நீ குடிச்ச தேநீர் நிறமற்ற நீருக்குத் தன்னுடைய நிறத்தையும், மனத்தையும் கொடுத்து, அந்த வெறும் தண்ணீரைச் சுவையுள்ளதாக மாத்திடுச்சு.’’ - அம்மா சொன்ன விஷயம்  மகளுக்கு மட்டுமல்ல, நமக்கும்தான்.   

புதிய தொடர் -1 - இனி உன் காலம்!

நாம் நமக்குள் மட்டுமே மாற்றம்கொண்டு வருவது  சாதாரண விஷயம். ஆனால், மாற்றத்தினால் நமக்கு மட்டு மல்லாமல், மற்றவர்களும்   பயனடைவதே சாதனையான விஷயம். நாம் எப்போதுமே, நாம் இருக்கிற இடத்தில் தனித்துத் தெரிய வேண்டும்.  அந்த டீ தூள் போல.

இன்னுமொரு குட்டிக் கதையையும் சொல்கிறேன்.

ஓர் அழகிய குட்டிக் கிராமம். அந்தக் கிராமத்து மக்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். அந்தக் கிராமத்தில் விவசாயம் தான் தொழில். கிராமத்தின் ஒரு பகுதியில் மலை சூழ்ந்தும், மற்றொரு பகுதியில் ஆறு ஓடிக் கொண்டும் இருந்தது.

அந்தக் கிராமத்து மக்கள் அந்த நீரைத்தான் உணவு சமைக்க, உழவு வேலைக்கு எனப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், ஒருவரும் அந்த ஆற்றில் இறங்க மாட்டார்கள்.

 ஏனென்றால், ஒருமுறை அந்த ஆற்றில் ஒருவர் சுழலில் சிக்கி இறந்துவிட்டார். எனவே, எல்லோருக்கும் பயம்.

சிறிது காலம் சென்றது. ஆற்றில் நீர்வரத்து குறையத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாகப் பஞ்சம் தொடங்கியது. அப்போது அந்தக் கிராமத்து ஆள் ஒருவன், “இனியும் இங்கேயே இருந்தால் செத்துவிடுவோம்.  வாருங்கள், நாம் அந்தப் பக்கம் போய் ஏதேனும் கிடைக்கிறதா என்று பார் ப்போம்” என்றான். ஆனால், ஒருவரும் அவனுடன் போகத் தயாராக இல்லை.

அவன் மட்டும் ஆற்றைக் கடந்து மறுபக்கம் சென்றான். சென்றவன் திரும்பி வரவேயில்லை. அவன் இறந்துவிட்டதாக எல்லோரும்  நினைத்தனர்.

ஒருசில இளைஞர்கள், அவனுக்கு என்னதான் ஆனது என்று தெரிந்து கொள்ள கிராமத்தைவிட்டு ஆற்றைக் கடந்து அந்தக் காட்டுக்குள் சென்றனர். அங்கே சென்று பார்த்தால், அங்கே அவன் தனக்கென ஒரு குடில் அமைத்துச் சுகமாக வாழ்ந்து கொண்டி ருந்தான். இந்த இளைஞர் களும் அவனுடன் சேர்ந்து  தங்களுக்கென குடில்களை அமைத்து வாழத் தொடங்கினர்.

ஆனால், அதிலிருந்த ஓர் இளைஞன் மட்டும், ‘‘வாருங்கள், நம் கிராமத்து மக்களையும் கூட்டிக் கொண்டு வருவோம் அல்லது ஆற்றில் நீர் ஏன் வரவில்லை என்பதையாவது நாம் சென்று பார்க்கலாம்’’ என்றான்.

ஆனால், மற்ற இளைஞர்கள், ‘‘வேண்டாம், கிராமத்து மக்களெல்லாம் மூடர்கள். நாம் அழைத்தாலும் அவர்கள் வரப் போவதில்லை” என்று கூறிவிட்டனர்.

அந்த இளைஞர் கிராமத்துக்குள் சென்று வெளியில் நடந்த விஷயங்களைச் சொல்லி, அவர்களை அங்கிருந்து அழைத்து வந்து, நீர் வராததற்கான காரணத்தைக் கண்டறிந்தான். அந்தக் கிராமத்து மக்களுடன் தானும் இணைந்து ஆற்றில் நீர் வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்தான். அந்தக் கிராமம் மீண்டும் செழிப்படையத் தொடங்கியது.

1. இந்தக் கதையில் உங்களுக்குப் புரிந்தது என்ன?

எந்த ஒரு விஷயத்தையும் சுய நலமாக யோசிக்காதீர்கள். பொதுநலமாக யோசியுங்கள். நமக்குச் சரி என்றும், மற்றவர் களுக்கு நன்மை என்றும் தோன்றி விட்டால் மற்றவர்கள் குறை சொல்வது குறித்துக் கவலைப்படாதீர்கள்.

2. முதலில் சென்ற இளைஞனின் செயல் சரியானதா?

அவனைப் பொறுத்தமட்டில், அவன் செயல் சரி. அவனுடைய சிந்தனை அன்றைய நிலைமை சரியானால் சரி என்றிருந்தது.அவனுக்கு எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையில்லை.

3. கிராம மக்களை வெளியில் அழைத்துவந்த இளைஞனின் செயல் சரியா?

நிச்சயமாக. தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று அவன் நினைக்க வில்லை.

அதோடு அந்தக் கிராம மக்களின் பயத்தையும் போக்கி, எதிர்காலத்தை மனதில் கொண்டு அவர்களைக் கொண்டே அந்த ஆற்றின் நீர்வரத்தையும் சரிசெய்து விட்டான்.

4. எல்லாவற்றையும்  சரிசெய்த அந்த இளைஞன் இப்போது அந்தக் கிராமத்தில் என்னவாக ஆகியிருப்பான்?

அவன் அந்தக் கிராமத்தின் தலைவனாக மாறியிருப்பான். அவன் கருத்துகளுக்கு அந்தக் கிராமமே செவிசாய்க்கும்.

இப்போது முடிவெடுங் கள், நீங்கள் உங்கள் வாழ் கையை ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்று இருக்கப் போகிறீர் களா அல்லது பிறந்தோம், நாமும் வாழ்ந்து அனைவ ரையும் வாழ வைத்தோம் என்று இருக்கப் போகிறீர் களா?

கூட்டமாக இல்லாமல் தனித்திருங்கள்... தலைவராயிருங்கள்!

(காலம் வெல்லும்)

படங்கள்: ப.சரவணகுமார், க.பாலாஜி  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism