நாணயம் விகடன், இன்டகிரேட்டட் இணைந்து நடத்திய `செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அசெட் அலோகேஷன்’ முதலீட்டு விழிப்பு உணர்வு கூட்டங்கள் மயிலாடுதுறை, தஞ்சாவூரில் நடைபெற்றன.

என்.எஸ்.டி.எல் நிறுவன உதவி மேலாளர் சிவப்பழம், ``டிமேட் கணக்கு வைத்திருப் பவர்கள், தங்களுடைய இ-மெயில் முகவரியையும் மொபைல் எண்ணையும் இணைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் உங்கள் டிமேட் அக்கவுன்ட் கணக்கு குறித்த விவரங்களை உடனுக்குடன் பெறலாம். எங்களின் ஆப்பை ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்துகொண்டால், பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் முதலீட்டு போர்ட்ஃபோலியோ விவரங்களைப் பார்த்துக்கொள்ளலாம்” என்றார்.

என்.எஸ்.இ அமைப்பின் துணை மேலாளர் ராகேஷ் ராமன், ``தற்போது, இளைஞர்கள் மாதத் தவணை (EMI) செலுத்துவதிலிருந்து விடுபட்டு, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் ப்ளானுக்கு (SIP) மாறிவருவது பாராட்டவேண்டிய விஷயம். ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்'' என்றார்.

இன்டகிரேட்டட் உதவிப் பொதுமேலாளர் ரவிச்சந்திரன், ``25 வயதில் வேலைக்குச் சேரும் இளைஞர், ஒவ்வொரு மாதமும் 1,444 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவந்தால், பணி ஓய்வுக்காலத்தில் கோடீஸ்வராகலாம். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவந்தால், சந்தை இறங்கும் போது கவலைப்படாமல் இருக்கலாம்'' என்றார்.

அடுத்து பேசிய இன்டகிரேட்டட் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் உதவிப் பொதுமேலாளர் குருராஜன், ``சாதாரணமாக வாங்கும் டூ வீலர் வண்டிக்கே இன்ஷூரன்ஸ் எடுக்கிறோம். ஆனால், மதிப்பிட முடியாத நமது உயிருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்காமல் இருக்கிறோம். உங்களுடைய குடும்பத்தின் மீது அக்கறையும் நேசிப்பும் கொண்டவராக நீங்கள் இருந்தால், குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் தரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை அவசியம் எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று ஆலோசனை வழங்கினார்.

இறுதியாக, அசெட் அலோகேஷன் குறித்து நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி பேசினார். அவர், ``உங்களுடைய முதலீட்டு ரிஸ்க் என்பது வயதைச் சார்ந்த விஷயமல்ல. வாழ்க்கைமுறை சார்ந்த விஷயம்.

ஒரே முதலீட்டில் அளவுக்கதிகமாக முதலீடு செய்வது சில நேரத்தில் பலன் தரலாம். பல நேரத்தில் பாதகமாக அமையும். எனவே, பிரித்து முதலீடு செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்களிடமிருக்கும் மொத்தப் பணத்தையும் பிக்ஸட் டெபாசிட்டில் போட்டால், பணவீக்கத்தின் அடிப்படையில் நீங்கள் சரியான முதலீட்டு முறையைக் கடைப்பிடிக்கவில்லை என்று அர்த்தம். உங்கள் முதலீடு, குறைந்த பட்சம் 8 சதவிகிதத்தைவிட அதிக அளவில் வருமானம் தரும் வகையில் இருக்க வேண்டும்.

அதற்குத் தகுந்தாற்போல் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம் எனப் பிரித்து முதலீடு செய்யுங்கள். ஒவ்வோர் ஆண்டும் உங்களுடைய முதலீட்டின் வளர்ச்சி குறித்துப் பரிசீலனை செய்யுங்கள். முதலீட்டுக் குருவான வாரன் பப்பெட், தன்னுடைய 11-வது வயதில் முதலீடு செய்ய ஆரம்பித்தார். ஆனால், அதையே காலம் தாழ்ந்தது என்று சொல்கிறார் அவர். ஆகையால், இளம் வயதிலேயே சேமிப்பையும் முதலீட்டையும் தொடங்குங்கள். முதலீட்டுத் தொகை சிறிது என்றாலும், அது உங்களைச் செல்வந்தராகவே மாற்றும்” என்றார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட வாசகர்கள், தங்களின் நிதி தொடர்பான சந்தேகக் கணைகளைத் தொடுத்து, நிபுணர்களின் பதிலைக் கேட்டுத் தெளிவடைந்தனர்.

- ஞா. சக்திவேல் முருகன்

படங்கள்: கே.குணசீலன், க.சதீஷ்குமார்