வருமானத்தில் பெரும் பகுதியைச் செலவழிக்க நினைக்கிறோமோ ஒழிய, நம்மில் பலரும் சேமிக்கவோ அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்றோ நினைப்பதில்லை. அதிலும் குறிப்பாக, இன்றைக்கு நமது இளைஞர்கள் சம்பளத்தில் பெரும் பகுதியை நிகழ்காலத்திலேயே செலவு செய்துவிடுகிறார்கள். ஆறு நிலைகளில்தான் இன்றைய இளைஞர்களின் நிதிநிலை இருக்கிறது.

1. சம்பளம் அனைத்தும் செலவாகிவிடுகிறது.

2. சம்பளத்துக்கு மேல் செலவாகிவிடுகிறது; கூடுதல் செலவுக்கு நண்பர்கள், உறவினர்கள், கிரெடிட் கார்டு மூலம் 10% - 30% கடன்.

3. சம்பளத்துக்கு மேல் செலவாகிறது; கூடுதல் செலவுக்கு நண்பர்கள், உறவினர்களிடம் கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு மூலம் 40% - 80% கடன்

4. வருமானத்தில் அவசியமான செலவுபோக மீதி சேமிப்பு.

5. வருமானத்தில் அவசியமான செலவுபோக மீதி சேமிப்பு மற்றும் முதலீடு.

6. வருமானத்தில் எதிர்காலத் தேவைக்கு முதலீடு, அதுபோக உள்ள அவசியமான செலவு.

இதில், நீங்கள் எந்த நிலையில் வாழ்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத் தான் உங்கள் வாழ்க்கை வளமாக இருக்கும். பொது வாக, பலரும் வருமானத் துக்கேற்ப செலவைக் குறைக்காமல், பற்றாக் குறையைச் சமாளிக்க கடன் அட்டையைப் பயன் படுத்துகிறார்கள். சிலர் பல கடன் அட்டைகளை வைத்திருக்கிறார்கள். இதனால், இவர்கள் பிற் காலத்தில் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்படு கிறார்கள்.

ஒருவரின் பணம் சம் பந்தப்பட்ட வாழ்க்கை யில் இரண்டு பாதைகள் இருக் கின்றன. ஒன்று, கடன் பாதை. இன்னொன்று, முதலீட்டுப் பாதை. இதில் கடன் பாதையைத் தேர்ந்தெடுத்தவர்கள் நிலை மோசம். ஒரு சிலர் எல்லாத் தேவைக்கும் கடன்தான் தீர்வு என்று நினைத்து, கடன்மேல் கடன் வாங்கு கிறார்கள். மிகச் சிலரே தேவைக்கு மட்டும் கடன் வாங்கிப் பயன் பெறுபவர் களாக இருக்கிறார்கள்.

செலவழிக்கத் துணிந் தால் நமக்கு பல சுகங்கள் கிடைக்கும். ஆனால், செலவைக் குறைத்துச் சேமிப்பையும், முதலீட்டை யும் செய்தால், இப்போது வாழ்க்கை கொஞ்சம் கசக் கத்தான் செய்யும். அதனால் கஷ்டமாகத் தெரியும். ஆனால், போகப் போக அது நமக்குப் பழகிவிடும். உதாரணமாக, ஒருவரின் ஓய்வுக்கால இலக்கை நிறைவேற்ற எப்படி முதலீடு செய்ய வேண்டும்? இதற்கு ஒருவர் தனது வருமானத்தில் 30 சதவிகிதத்தைக் கட்டாயமாகச் சேமிக்க வேண்டும். இதில் 10 சதவிகிதத் தொகையை ஓய்வுக்காலத்துக்காகச் சேமித்தால், முதுமையில் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் நம்மால் நிம்மதியாக இருக்க முடியும்.

ஓர் இளைஞன் தனது 25-வது வயதில் தனது சம்பளத்தில் 10 சதவிகிதத் தொகையை ஓய்வுக்காலத்துக்குச் சேமிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரின் மாதச் சம்பளம் ரூ.15,000. இதில் 10 சதவிகிதமான ரூ.1,500 -ஐ ஓய்வுக்காலத்துக்காக முதலீடு செய்ய ஆரம்பிக்கிறார். சம்பளம் உயர உயர ஐந்தாண்டுக்கு ஒருமுறை முதலீட்டுத் தொகையை ரூ.500 அதிகரிக்கிறார்.

35 ஆண்டுகளில் ரூ.12,60,000 முதலீடு செய்து, அதற்கு ஆண்டுக்குச் சராசரியாக 12% வருமானம் கிடைத்தால், அவருடைய ஓய்வுக்காலத்தில் அவருக்கு ரூ.1,32,33,643 கிடைக்கும். ரூ.30,000 சம்பளம் வாங்குபவர் ஆரம்பத்தில் ரூ.3,000 முதலீடு செய்கிறார். சம்பளம் உயர உயர ஐந்தாண்டுக்கு ஒருமுறை முதலீட்டை ரூ.1,000 அதிகரிக்கிறார். இவர் செய்த முதலீடு 25,20,000 ரூபாய். 35 ஆண்டுகள் கழித்து இவருக்கு ரூ.2,64,67,241-ஆக அதிகரித்திருக்கும். (கூடுதல் விவரங்களுக்கு அட்டவணையைப் பார்க்க). பணத்துக்காக உழைப்பவன் உழைப்பாளி. தான் ஈட்டிய பணத்தை உழைக்க வைப்பவன் அறிவாளி. நீங்கள் உழைப்பாளியா அல்லது அறிவாளியா?

ஓவியத்தின் விலை 450 மில்லியன் டாலர்!

உலகப்புகழ் பெற்ற ஓவியர் லியானர்டோ டாவின்ஸியின் உலக ரட்சகர் (Salvator Mundi) என்ற ஓவியம் 450 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டு உலகச் சாதனை படைத்தது. இதுவரை நடந்த அனைத்து ஓவிய ஏலங்களையும் இது மிஞ்சி விட்டது. இதற்கு முன்னதாக ஓவியர் பிகாசோ வரைந்த அல்ஜியர்ஸ் பெண்கள் என்ற ஓவியம் 2015-ம் ஆண்டில், 179.4 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த ஏலம் வெறும் 19 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் மட்டுமே ஏல அரங்கில் இருந்தார். மற்ற நால்வரும் செல்பேசி வழியாகவே ஏலத்தில் பங்கெடுத்தார்கள் என்பது ஆச்சர்யமான செய்தி.

இன்ஃபோசிஸ் பைபேக் நவம்பர் 30-ல் ஆரம்பம்!

இந்திய ஐ.டி துறையின் பெரிய நிறுவனமான இன்ஃபோசிஸ் ரூ.13,000 கோடி மதிப்புள்ள பங்குகளை நவம்பர் 30 முதல் டிசம்பர் 14 வரை திரும்பப் பெற உள்ளது.

இதன் தொடக்க நாள் நிகழ்வில், நாராயணமூர்த்தி மற்றும் நிலகேனி பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 வருட அனுபவமுள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம், தற்போதுதான் முதன்முறையாக இந்த அளவுக்கு அதிக பங்குகளைத் திரும்பப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.1,150-க்கு திரும்பப் பெற இருப்பதாக இன்ஃ போசிஸ் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.