பேராசிரியர் வைத்தியநாதன் எழுதிய ‘கறுப்புப்பணமும், கறுப்புப் பணத்துக்கு புகலிடம் அளிக்கும் நாடுகளும்' (Black Money and Tax havens) என்கிற புத்தகம்தான் இப்போது ‘ஹாட்கேக்’ போல விற்பனையாகிறது. இந்தப் புத்தகம் வெளியானதைத் தொடர்ந்து அவரை நாம் பேட்டி கண்டோம். பேட்டியைப் படிக்குமுன், அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் இதோ...

பேராசிரியர் வைத்தியநாதன், பெங்களூருவில் உள்ள இண்டியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஃபுல்பிரைடு ஸ்காலராக இருமுறை இருந்தவர். அமெரிக்க, இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் மேலாண்மை குறித்துப் பாடம் எடுத்தவர். செபி, ஆர்.பி.ஐ., ஐ.ஆர்.டி.ஏ.ஐ ஆகிய அமைப்புகள் அமைத்த பல்வேறு கமிட்டி களில் இடம்பெற்றவர். விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷனில் பொருளாதாரப் பிரிவில் கெளரவத் தலைவராக இருக்கிறார். தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பப்ளிக் பாலிசி தொடர்பான சோ.ராமசாமி இருக்கைப் பேராசிரியராக இருக்கிறார். இனி அவரது பேட்டி...

இந்தியாவில் இருக்கும் கறுப்புப் பணம் எவ்வளவு என்பதைச் சொல்ல முடியுமா?''

‘‘நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP - Gross Domestic Product) சுமார் 15% முதல் 40% வரை கறுப்புப் பணம் இருக்கலாம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். நமது ஜி.டி.பி-யில் வெறும் 10% அளவுக்கு மட்டுமே கறுப்புப்பணம் இருப்பதாக எடுத்துக் கொண்டால்கூட, சுமார் ரூ.15 லட்சம் கோடி கறுப்புப்பணம் நம் நாட்டில் இருக்கிறது. சென்ற ஆண்டில் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.150 லட்சம் கோடியாக இருந்தது.''

வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட பணம் எவ்வளவு?

‘‘வரி ஏய்ப்பு செய்த பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கென்றே உலக அளவில் சுவிட்சர்லாந்து உள்பட பல நாடுகள் உள்ளன. இந்த நாடுகளைத்தான் ‘டாக்ஸ் ஹவன்' (Tax havens) என்கிறோம். 500 பில்லியன் டாலர் முதல் இரண்டு ட்ரில்லியன் டாலர்கள் வரை நம் நாட்டுக்குச் சேர வேண்டிய பணம் பல்வேறு நாடுகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணம் ஒரு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே இருக்கும் என வைத்துக்கொண்டாலும், ஒரு டாலர் 65 ரூபாய் என்கிற அடிப்படையில் வைத்துப் பார்த்தால், சுமார் 65 லட்சம் கோடி ரூபாய் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். இதுதவிர, வைரம், வைடூரியம், முத்து, தங்கம் எனப் பல பொக்கிஷங்கள் வெளிநாட்டு வங்கிகளில் உள்ளன.''

உள்நாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்துக்கும், வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்துக்கும் என்ன வித்தியாசம்?

‘‘இரண்டுமே வரி ஏய்ப்பு செய்ததன் விளைவாக உருவானதுதான். உள்நாட்டில் இருக்கும் கறுப்புப் பணமானது நமது அரசாங்கத்தின்மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உருவானது. இதை ‘சைவக் கறுப்புப்பணம்’ என்று சொல்லலாம்.

ஆனால், வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணமானது நமது அரசாங்கத்துக்குத் துரோகம் செய்ததன் மூலமாக உருவானது. ஆயுதங்கள் வாங்கும்போது தரப்படும் கமிஷன்/போதைப் பொருள்கள் கடத்தலினால் உருவாகும் பணம் / மனிதர்களையும், பெண்களையும் கடத்துவதினால் கிடைக்கும் பணம் ஆகிய வற்றினால் உருவானது. இதை ‘அசைவக் கறுப்புப் பணம்’ என்று சொல்லலாம்.

இந்த இரண்டில், உள்நாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தைப் பற்றி நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், நாமோ சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்புப் பணத்தை பற்றி மட்டுமே அதிகம் பேசுகிறோம்.''

பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வுகளைக் கண்டுள்ளன?

‘‘அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் முக்கியமான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ‘டாக்ஸ் ஹெவன்ஸ்’ நாடுகளிலிருந்து தீவிரவாதிகளுக்குப் பணம் கொண்டுவந்து தந்ததற்காக சுவிட்சர்லாந்தின் யூ.பி.எஸ் வங்கியின்மீது அபராதத்தை விதித்தது அமெரிக்க அரசின் நீதித் துறை. உலகின் மிகச் சிறிய நாடுகளான பிலிப்பைன்ஸ், நைஜீரியா, எகிப்து போன்ற நாடுகள்கூட இந்த விஷயத்தில் முக்கியமான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன.’’

தீவிரவாதிகளுக்குக் கறுப்புப் பணம் எப்படி வருகிறது?

‘‘கறுப்புப் பணத்துக்குப் புகலிடமளிக்கும் ‘டாக்ஸ் ஹவன்ஸ்’ நாடுகள் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி கிடைக்கிறதா என அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் பலத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கின்றன. பங்குச் சந்தைகள் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி வருவது குறித்து கடந்த 2008-ம் ஆண்டிலேயே நம் நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன் எச்சரித்திருக்கிறார். மேற்கத்திய நாடுகள் இந்த விஷயத்தில் மிகக் கவனமாக இருக்கின்றன. நாமும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.’’

உள்நாட்டில் கறுப்புப் பணம் உருவாவதைத் தடுக்கவும், வெளி நாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை நம் நாட்டுக்குக் கொண்டு வரவும் நமது அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளன?

‘‘உள்நாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தைக் கணக்கில் கொண்டுவர தானாக முன்வந்து ஒப்புக்கொள்ளும் திட்டத்தையும் (voluntary disclosure schemes), பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தையும் (Amnesty schemes) கடந்த பல ஆண்டுகளாகப் பின்பற்றி வருகின்றன. கடந்த ஆண்டில் பிரதமர் மோடி கொண்டுவந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கைகூட கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான ஒரு நடவடிக்கைதான்.

பல்வேறு நாடுகளுடன் இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்வதன் மூலம் வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணம் குறித்த தகவல் களைப் பெற நமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது.’’

இனிமேலும் கறுப்புப் பணம் உருவாகாமல் தடுக்க வேண்டுமெனில் நமது அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

‘‘நான் அண்மையில் எழுதிய Black Money and Tax havens என்கிற புத்தகத்தில் பல வழிகளைச் சொல்லியிருக்கிறேன். உதாரண மாக, ஒருவர் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை ரொக்கமாக வைத்திருந்தால், அது குற்றமாகக் கருதப்பட வேண்டும். தேர்தல் சமயத்தில் உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களே லஞ்ச மாகத் தரப்படுகிறது. எனவே, உயர்மதிப்பிலான நோட்டுக் களையும் ஒழிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் ஒழித்து வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தைப் பொறுத்தவரை, ஐக்கிய நாடுகள் விதித்துள்ள விதிமுறைகள்படி, சட்ட விரோதமாக வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை பொதுச் சொத்தாக அறிவித்து தேசியமயமாக்க வேண்டும். நமது அரசை ஏமாற்றி, வெளிநாடுகளில் பணத்தைக் கடத்திச் செல்பவர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஏற்கெனவே உள்ள வழக்குகளும் இழுத்தடிக்கப்படுகின்றன. இதுதொடர்பான சட்ட அமைப்புகளும் துரதிருஷ்ட வசமாகத் திறமையாகச் செயல்படாமல் உள்ளன.’’

அடுத்த பத்தாண்டு களுக்குள் கறுப்புப் பணத்தை நம்மால் முற்றிலுமாக ஒழித்துவிட முடியுமா?

‘‘உலகின் எந்த நாடாக இருந்தாலும் கறுப்புப் பணத்தை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது. அதைக் குறைக்க மட்டுமே முடியும். அரசியல்வாதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் எனப் பலரும் கறுப்புப் பணம் உருவாகக் காரணமாக இருக்கிறார்கள். எனவே, இந்தப் பிரச்னை குறித்துக் கடுமையான நடவடிக்கை எடுக்க அரசியல் ரீதியான துணிவு (political will) அவசியம் வேண்டும். நேர்மை என்பது நம் வாழ்க்கையில் மந்திரமாக மாற வேண்டும். கக்கன்களை யும், காமராஜர் களையும் நமது ‘ரோல் மாடல்’களாக வைத்துக் கொள்ள வேண்டும்.’’

- ஏ.ஆர்.குமார்