நடப்பு
தொடர்கள்
அறிவிப்பு
Published:Updated:

முதலீட்டுக் கனவுகளை நிறைவேற்றும் எஸ்.ஐ.பி!

முதலீட்டுக் கனவுகளை நிறைவேற்றும் எஸ்.ஐ.பி!
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீட்டுக் கனவுகளை நிறைவேற்றும் எஸ்.ஐ.பி!

முதலீட்டுக் கனவுகளை நிறைவேற்றும் எஸ்.ஐ.பி!

நாணயம் விகடன் மற்றும் இன்டகிரேட்டட் இணைந்து ‘அஸெட்  அலோகேஷன் - செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா’ என்னும் நிகழ்ச்சியை அண்மையில் திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல்லில் நடத்தின. 

முதலீட்டுக் கனவுகளை நிறைவேற்றும் எஸ்.ஐ.பி!

திருநெல்வேலி நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கியின் உதவி மேலாளர் ரஞ்சித், திண்டுக்கல் நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கியின் டெக்னாலஜி ஆலோசகர் ராம் ஆகியோர் வங்கிச் சேவைகள் குறித்து விளக்கமாகப் பேசினார்கள்.

இன்டகிரேட்டட் நிறுவனத்தின் உதவிப் பொது மேலாளர் ரவிச்சந்திரன், “நீண்ட காலக் குறிக்கோள்களையும், முதலீட்டுக் கனவுகளையும் நிறைவேற்றும் முதலீட்டு முறைதான் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி). இது ரெக்கரிங் டெபாசிட் என்கிற ஆர்டி-யின் மறுவடிவம்தான். எப்போதுமே நம் முதலீடுகள் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தருவதாக இருக்க வேண்டும். பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைப் பெற மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீடு ஏற்றதாக இருக்கும்” என எஸ்.ஐ.பி முறையின் நன்மைகளை இரண்டு ஊர் நிகழ்ச்சிகளிலும் விளக்கிப் பேசினார்.

அஸெட் அலோகேஷன் குறித்துத் திருநெல்வேலி நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆலோசகர் வெ.கோபாலகிருஷ்ணன், “தற்போதைய முதலீட்டுச் சூழ்நிலையில் பங்குச் சந்தை மற்றும் அது சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் உச்சத்தில் இருக்கின்றன. தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் மந்த நிலையில் இருக்கின்றன. எஃப்.டி வட்டி குறைந்து வருகிறது. 

முதலீட்டுக் கனவுகளை நிறைவேற்றும் எஸ்.ஐ.பி!

இந்த நிலையில், ஒரே ஒரு வழி முதலீட்டு முறைக்கு விடை கொடுப்பது நல்லது. அஸெட் அலோகேஷன் என்கிற முறையில் முதலீட்டைப் பிரித்து மேற்கொள்வது லாபகரமாக இருக்கும். அதிக வருமானம் வேண்டும் என்றால் முதலீட்டில் ஒரு பகுதியைப் பங்குச் சந்தை மற்றும் அது சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம். முதலீட்டு மொழியில் ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான் பெரிய ரிஸ்க்” என்றார்.

 திண்டுக்கல் நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி, ரிஸ்க்கை பரவலாக்கம் செய்து, இலக்குகளை எளிதாக அடைய அஸெட் அலோகேஷன் எப்படிக் கைகொடுக்கும், ஒவ்வொரு தனிமனிதனும் அஸெட் அலோகேஷன் முறைப்படி எந்த முதலீட்டில் எத்தனை சதவிகிதம் செய்ய வேண்டும் என்பதை எப்படித் தீர்மானிப்பது என  விளக்கிப் பேசினார்.  

முதலீட்டுக் கனவுகளை நிறைவேற்றும் எஸ்.ஐ.பி!

டீமேட் கணக்கு ஏன் அவசியம், எப்படித் தொடங்குவது, அதன் நடைமுறைகள் என்னென்ன என்றும், என்.எஸ்.டி.எல் வழங்கும் மற்ற சேவைகள் குறித்தும் அதன் மண்டல உதவி மேலாளர் சிவப்பழம் விளக்கமாக எடுத்துச் சென்னார். என்.எஸ்.இ வழங்கும் பல்வேறு பயிற்சி முறைகள் மற்றும் சேவைகள் குறித்து அதன் உதவி மேலாளர் விஸ்வேஸ்வரன் விளக்கிப் பேசினார்.

குழந்தைகளுடன் வந்திருந்தவர்களை மேடைக்கு அழைத்த இன்டகிரேட்டட் ரவிச்சந்திரன், குழந்தைகளுக்குச் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்கும் வகையில் உண்டியலைப் பரிசாகக் கொடுத்துச் சிறப்பித்தார்.

திண்டுக்கல் நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி ஒருவர் ஆர்வமாகக் கலந்துகொண்டு, சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டதைப் பார்த்த வாசகர்கள் சிலர், “புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள எத்தகைய சிரத்தை எடுக்க வேண்டும் என இவரைப் பார்த்து உணர்ந்துகொண்டோம்” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்கள்.

இறுதியாக முதலீட்டாளர்கள் பலரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்ப,  அவர்களுக்கு நிபுணர்கள் தெளிவாகப் பதிலளித்தார்கள்.

சி.சரவணன், கா.முத்துசூரியா

படங்கள்: எல்.ராஜேந்திரன், வீ.சிவக்குமார்