யாருக்கு எப்போது வேண்டுமானாலும் எந்த நோயும் வரக்கூடிய காலம் இது. டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறவே தனியார் மருத்துவமனையில் அரை லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. அரசு மருத்துவமனைகளில் எல்லாமே இலவசமாகக் கிடைக்கும் என்றாலும், அங்கு சென்று குணப்படுத்திக் கொள்வதற்கான பொறுமை யாரிடமும் இல்லை. எனவே, கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தைத் தனியார் மருத்துவமனைக்குத் தருவதைத் தவிர வேறு வழியில்லை.

ஆண்டு ஒன்றுக்கு ரூ. 10,000 முதல் 15,000 வரை பிரீமியம் செலுத்தி ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டால், எந்த நோய் வந்தாலும் பெரிய செலவு எதுவும் செய்யாமல் குணப்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்திருப் பவர்கள் நம்மிடையே குறைவாகத்தான் இருக்கிறார்கள். ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி குறித்த விழிப்பு உணர்வும் பெரிய அளவில் மக்களிடம் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் திடீர் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்கப் பலரும் கடன் வாங்குவது கொடுமையிலும் கொடுமை.

இனியாவது, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி அவசியம் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.

-ஏ.ஆர்.கே