நடப்பு
தொடர்கள்
அறிவிப்பு
Published:Updated:

வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட்... மூன்று முக்கியக் காரணங்கள்!

வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட்... மூன்று முக்கியக் காரணங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட்... மூன்று முக்கியக் காரணங்கள்!

வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட்... மூன்று முக்கியக் காரணங்கள்!

மியூச்சுவல் ஃபண்டில் ஒரு வகையான பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டத்தின்  (ELSS) மூலம் வருமான வரியை மிச்சப்படுத்தலாம். இந்தத் திட்டத்தில், நிபந்தனைக்கு உட்பட்டு ஓராண்டில் 80சி பிரிவின் கீழ் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்து வருமான வரியைச் சேமிக்கலாம். இந்தத் திட்டம் ஏன் சிறந்தது என்பதற்கு மூன்று காரணங்களைக் குறிப்பிடலாம்.  

வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட்... மூன்று முக்கியக் காரணங்கள்!

1. குறைவான லாக்கின் பிரீயட் : பி.பி.எஃப் - 15 வருடம், வங்கி எஃப்டி - 5 வருடங்கள், தேசிய சேமிப்பு பத்திரம் - 5 வருடங்கள் என லாக்கின் காலம் உள்ளது. இ.எல்.எஸ்.எஸ்-ல் மட்டும் குறைவான லாக்கின் காலம் மூன்றாண்டுகளாகும்.

2. வரியில்லா வருமானம் பெற வாய்ப்பு : இந்தத் திட்டத்தில் டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்திருப்பின் இடையில் தரப்படும் டிவிடெண்டுக்கு வரி இல்லை.

3. அதிக வருமான வாய்ப்பு :
பி.பி.எஃப் - 7.8%, வங்கி எஃப்டி - 6.5% ஆண்டு, தேசிய சேமிப்புப் பத்திரம் -7.8% எனத் தற்போதைய நிலையில் ஆண்டுக்கு வட்டி வழங்கப்படுகிறது.ஆனால், இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் கடந்த ஐந்தாண்டு காலத்தில் டாப் 10 ஃபண்டுகள், ஆண்டுக்கு 19% முதல் 22% வருமானம் கொடுத்திருக்கின்றன. இதுவே மூன்றாண்டு காலத்தில் 15%-20% வருமானம் கொடுத்திருக்கின்றன. இந்த ஃபண்டில் ரிஸ்க் இருந்தாலும், நீண்ட காலத்தில் குறைக்கப்பட்டு வருகிறது.

சேனா சரவணன்