Published:Updated:

கம்பெனி டிராக்கிங்

கம்பெனி டிராக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி டிராக்கிங்

கிர்லோஸ்கர் ஃபெரஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் - (BSE SECURITY CODE: 500245 SECURITY ID: KIRLFER)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

கம்பெனி டிராக்கிங்

கிர்லோஸ்கர் ஃபெரஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் - (BSE SECURITY CODE: 500245 SECURITY ID: KIRLFER)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:
கம்பெனி டிராக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி டிராக்கிங்

1991-ம் ஆண்டில், கிர்லோஸ்கர் ஆயில் இன்ஜின்ஸ் லிமிடெட் மற்றும் சிவாஜி வொர்க்ஸ் லிமிடெட் என்ற இரண்டு நிறுவனங்களின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் கிர்லோஸ்கர் ஃபெரஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். மும்பை பங்குச் சந்தையில் மட்டுமே பட்டியலிடப் பட்டுள்ளது இந்த நிறுவனம்.

கம்பெனி டிராக்கிங்

தற்சமயம் கர்நாடகாவில் கொப்பல் மாவட்டத் திலும், மகாராஷ்ட்ராவில் சோலாப்பூர் மாவட்டத்திலுமாக இரண்டு உற்பத்தி வசதிகளைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், பிக் அயர்ன் மற்றும் காஸ்டிங்குகளை உற்பத்தி செய்கிறது.

வேகமான வளர்ச்சியைக் கண்டுவரும் ஆட்டோமொபைல், டிராக்டர்கள் மற்றும் டீசல் இன்ஜின்களில் உபயோகப்படுத்தப்படும் உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கான உயர்தர பிக் அயர்னையும் மெல்லிய தடிமனுடனான சுவர்களைக் கொண்ட தரமான க்ரே அயர்ன் காஸ்டிங்குகளையும் உற்பத்தி செய்யும் எண்ணத்துடன் இந்த நிறுவனம்  ஆரம்பிக்கப்பட்டது.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கம்பெனி டிராக்கிங்

ஆரம்பத்தில் கர்நாடகாவில் உள்ள கொப்பல் மாவட்டம், பெவினஹள்ளி கிராமத்தில் உள்ள உற்பத்தி வசதியை மட்டுமே நிர்மாணித்து செயல்பட்டுவந்த இந்த நிறுவனம், 2007-ம் ஆண்டில் சிவாஜி வொர்க்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் மகாராஷ்ட்ராவில் உள்ள சோலாப்பூர் மாவட்டத்திலும் தன்னுடைய உற்பத்தி வசதியைப் பெற்றது.

பெவினஹள்ளியில் இருக்கும் காஸ்டிங் மற்றும் பிக் அயர்ன் உற்பத்தி வசதி, அதற்குத் தேவையான மூலப்பொருள்கள் கிடைக்கும் ஹோஸ்பெட்-சந்தூர்-பெல்லாரி என்ற இடங்களுக்கு அருகே அமைந்துள்ளது. இங்கு காஸ்டிங் உற்பத்தி வசதியையும், அதற்குத் தேவையான பின்னோக்கிய ஒருங்கிணைப்பு வசதியான ப்ளாஸ்ட் பர்னஸ் வசதிகளையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். அதேபோல், சோலாப்பூரில் இருக்கும் காஸ்டிங் உற்பத்தி வசதியில் வார்க்கப்பட்ட காஸ்டிங்குகளை,  பகுதி நிறைவு செய்யும் ரீதியான முன்னோக்கிய ஒருங்கிணைப்புக்குத் தேவையான மெஷினிங் வசதியை இந்த நிறுவனம் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.  இன்றைக்கு பிக் அயர்ன் மற்றும் காஸ்டிங்குகள் உற்பத்தியில் வேகமான வளர்ச்சியைக் கண்டுவரும் ஒரு நிறுவனமாக உருவெடுத்துள்ள இந்த நிறுவனம், பிக் அயர்ன், க்ரே அயர்ன் மற்றும் எஸ் ஜி அயர்ன் காஸ்டிங்குகளை உற்பத்தி செய்ததன் மூலம் 2016-ம் நிதியாண்டில் ரூ.1,134 கோடி அளவிலான வர்த்தகத்தைக் கொண்டிருந்தது.  

கம்பெனி டிராக்கிங்



கர்நாடகாவில் இருக்கும் கொப்பல் மாவட்டத் திலுள்ள உற்பத்தி வசதியில், ஆண்டொன்றுக்கு 3,09,400 மெட்ரிக் டன்  அளவிலான பிக் அயர்ன் உற்பத்தி வசதியையும், ஆண்டொன்றுக்கு 1,08,000 மெட்ரிக் டன் அளவிலான காஸ்டிங்குகளை உற்பத்தி செய்யும் வசதியையும் கொண்டுள்ளது இந்த நிறுவனம். அதேபோல், மகாராஷ்ட்ரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள உற்பத்தி வசதியில் ஆண்டொன்றுக்கு 42,000 மெட்ரிக் டன் அளவிலான காஸ்டிங்குகளை உற்பத்தி செய்யும் வசதியையும் கொண்டு திகழ்கிறது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனம் கொண்டிருக்கும் இரண்டு உற்பத்தி வசதிகளுமே அதிக உற்பத்தித் திறன் தருகிற வகையிலான நல்ல திறமையான பணியாளர்களையும், மூலப்பொருள்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் என்ற இரண்டையுமே கையாளுவதற்குத் தேவையான சப்ளை-செயின் வசதிகளையும் மிக லாகவமாக கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை, கிரே அயர்ன் காஸ்டிங்குகளில் ஒரே வார்ப்புப் பகுதியாக (single piece) அதிகபட்ச மாக முன்னூறு கிலோ எடையிலான காஸ்டிங்கு களையும், எஸ்.ஜி அயர்ன் காஸ்டிங்குகளில் ஒரே வார்ப்பு பகுதியாக 120 கிலோ எடை அளவிலான காஸ்டிங்குகளையும், மற்றும் பல்வேறுவகை பிக் அயர்ன், ஃபவுண்ட்ரி கிரேடு, பேசிக் கிரேடு காஸ்டிங்குகளையும் உற்பத்தி செய்யும் வசதியைக் கொண்டுள்ளது.   

கம்பெனி டிராக்கிங்

1994-ம் ஆண்டில், முதலாவது மினி ப்ளாஸ்ட் பர்னஸில் வணிகரீதியான உற்பத்தியை ஆரம்பித்த இந்த நிறுவனம், 1995-ம் ஆண்டில் கிரே அயர்ன் காஸ்டிங்குகளைத் தன்னுடைய இரண்டாவது மினி ப்ளாஸ்ட் பர்னஸில் செய்ய ஆரம்பித்தது. இந்த இரண்டு மினி ப்ளாஸ்ட் பர்னஸில்   காஸ்டிங்குகளை உற்பத்தி செய்யும்போது தண்ணீர் ஊற்றுவதால் கிடைக்கும் நீராவியை முழுமையாக உபயோகிக்கும் பொருட்டு, இரண்டு 3.5 மெகாவாட் அளவிலான மின் உற்பத்தி மையங்களை 1994 மற்றும் 1997-ம் ஆண்டில் நிறுவியது இந்த நிறுவனம்.  

கம்பெனி டிராக்கிங்

ஏற்கெனவே குறிப்பிட்டபடி, 2007-ம் ஆண்டில் இந்த நிறுவனம் சோலாப்பூர் ஃபவுண்டரியை கிர்லோஸ்கர் ஆயில் இன்ஜின்  நிறுவனத்திடமிருந்து 2007-ம் ஆண்டு வாங்கியது. பிக் அயர்ன் காஸ்டிங் உற்பத்தியில் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் செலவினங்களைக் குறைக்கவும் செய்யும் எண்ணத்துடன் இந்த நிறுவனம், மினி ப்ளாஸ்ட் ஸ்டவ்களுக்கான ஹாட் ப்ளாஸ்ட் ஸ்டவ்கள், சிண்டர் ப்ளாண்ட் மற்றும் 4.5  மெகாவாட் அளவிலான மின் உற்பத்தி நிலையம் போன்றவற்றை நிறுவியது. கொப்பல் என்ற இடத்தில் இருக்கும் காஸ்டிங் உற்பத்தி வசதியில் 2014-ம் ஆண்டில் புதிய பவுண்டரி ஒன்றையும், அதிக அழுத்தம் மூலம் செய்யப்படும் மோல்டிங் வசதிகளுக்கான உற்பத்தி வசதியையும் நிறுவியது.  

கம்பெனி டிராக்கிங்

தயாரிப்புகள் என்று பார்த்தால்,  பிக் அயர்ன் மற்றும் காஸ்டிங் என்ற இரண்டு விஷயங்களையும் இந்த நிறுவனம் உற்பத்தி செய்கின்றது. கிர்லோஸ்கர் பெரஸ் நிறுவனம் ஆட்டோ மொபைல்,  என்ஜின்கள், டெக்ஸ்டைல் மெஷின்கள், பைப்புகள், பம்புகள், பிட்டிங்குகள், காற்றாடிகள் மற்றும் கம்ப்ரசர்களுக்குத் தேவையான உதிரிபாகங்களை வார்ப்பு செய்யும் பவுண்ட்ரிகளுக்கு பிக் அயர்னை சப்ளை செய்துவருகிறது.

கம்பெனி டிராக்கிங்

அகில இந்தியரீதியாக, கிழக்கு இந்தியாவைத் தவிர, ஏனையப் பகுதிகளில் கிளை நிறுவனங்கள், டீலர்கள் மற்றும் ஏஜென்ட்டுகள் வாயிலாக தனது பொருட்களை விற்பனை செய்துவருகின்றது.  உயர்தரம் மற்றும் குறித்த காலத்தில் கையளித்தல் மற்றும்  விற்பனைக்குப் பிந்தைய வசதியான சேவை என்ற மூன்று நற்குணங்களையும் கொண்டது  இந்த நிறுவனம்.  பவுண்டரி பிக் அயர்ன்,  ஸ்பெரோ டைஸ்டு கிராபைட் கிரேடு அயர்ன், பேசிக் கிரேடு பிக் அயர்ன் என மூன்று வகை மூலப்பொருள்களை வார்ப்பு செய்யும் நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது இந்த நிறுவனம்.  காஸ்டிங் தொழிற் பிரிவில் சிலிண்டர் ப்ளாக்குகள், சிலிண்டர் ஹெட்டுகள், ஹெளசிங்குகள், ஆக்சிலுக்கான உதிரிபாகங்கள் போன்றவற்றை ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்து தருகிறது.

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

பொதுவாக இந்த நிறுவனம் ஆட்டேமொபைல் கள், டிராக்டர்கள், பம்புகள், இன்ஜின்கள் போன் றவற்றில் உபயோகப்படுத்தப்படும் உதிரிபாகங் களையும், அதைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களையும் உற்பத்தி செய்கிறது. இவை அனைத்துமே பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்து விற்பனை என்ற சூழலைக்கொண்டவை. எனவே, ஏதாவது ஒரு காரணத்தினால் பொருளாதார மந்தநிலை வந்தால், வியாபார ரீதியான பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மேலும், தொழில் ரீதியாக எதிர்காலத்தில் உருவாகக்கூடிய கடுமையான போட்டியும் லாபத்தைக் குறைத்துவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மூலப்பொருள்களின் விலையேற்றம், அந்நியச் செலவாணி மதிப்பு மாறுதல் போன்ற வையும், ஒரு சில பெரிய நிறுவனங்களுடனேயே பெரிய அளவிலான வர்த்தகத்தைக் கொண்டிருத் தல் போன்றவையும், இது போன்ற நிறுவனங்களைப் பொறுத்தவரை ஒரு ரிஸ்க்காகவே பார்க்கப் படவேண்டும்.

குறைந்தபட்சம் ஐந்து முதல் பத்தாண்டுகள் கால அவகாசத்திலேயே வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறபோதிலும், புதிதாக வரும் எலெக்ட்ரிக் ஆட்டோமொபைல்களிலும் ஏனைய வாகனங்களிலும் பெரிய அளவிலான காஸ்டிங்குகளின் உபயோகம் இல்லாது போக வாய்ப்புள்ளது.

ரிஸ்க்குகள் இப்படி பல இருக்கின்றபோதிலும்  தொழில் ரீதியான நீண்ட அனுபவத்தையும், வாடிக்கையாளர்களின் மத்தியில் நன்மதிப்பையும் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை, ஏதாவது ஒரு காரணத்தினால் சந்தை மிகவும் வேகமான இறக்கத்தைச் சந்திக்கும்போது வரும் கணிசமானதொரு விலை இறக்கத்தின் போது, மிகவும் சிறிய எண்ணிக்கையில் வாங்கி, மூன்றாண்டு காலத்திற்காக வைத்திருக்கும் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்ளும் எண்ணத்துடன் வாங்குவதற்காக, அதிக அளவில் ரிஸ்க் எடுக்கக்கூடிய வாசகர்கள் மட்டும்  தொடர்ந்து ட்ராக் செய்துவரலாம்.  ஏற்கெனவே ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்கு களையும், ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பங்குகளையும் அதிக அளவில் வைத்திருக்கும் வாசகர்கள் இந்தப் பங்கில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பதே நல்லது.

This section is not a buy/sell recommendation at the current price levels, but only a compilation of information about the company and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of  the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No;  4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past  12 months and nature of products / services for which such compensation is received? – No;  5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this report is available at
http://www.bseindia.com/stock-share-price/kirloskar-ferrous-industries-ltd/kirlfer/500245/ (to select one year chart click on “1Yr”)