Published:Updated:

ஒப்பிட்டுப் பார்த்து முதலீடு செய்யுங்கள்!

ஒப்பிட்டுப் பார்த்து முதலீடு செய்யுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி

நாணயம் விகடன் மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து ‘செல்வம் சேர்க்கும் செயல்திட்டம்’ என்ற முதலீட்டாளர்கள் விழிப்புஉணர்வு நிகழ்ச்சியை ஈரோட்டில் நடத்தின.  முதலில் பேசிய ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மண்டலப் பயிற்சி மேலாளர் ஜெ.சந்தோஷ், “உங்களுடைய மூலதன முதலீட்டுப் பணம் பாதுகாப்பாகவும், வருமானத்தை உருவாக்கவும், அதிகப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும். இந்த மூன்று விஷயங்கள்தான் முக்கியமானவை. இந்த மூன்றையும் உள்ளடக்கிய வகையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருக்கின்றன. மற்ற முதலீட்டைவிட சௌகர்யம், பாதுகாப்பு, தேவைப்படும் நேரத்தில் பணமாக்கிக் கொள்ளும் வசதிகளும் இருப்பதால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை அனைவரும் தேர்ந்தெடுக்கலாம்” என்றார்.  

ஒப்பிட்டுப் பார்த்து முதலீடு செய்யுங்கள்!

மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்  சொக்கலிங்கம் பழனியப்பன், ‘‘மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது உங்களுடைய பணத்தை எங்கு முதலீடு செய்கிறார்கள் என்பதையும், பாதுகாப்பு, எளிதில் பணத்தைப் பெறுவது, ரிஸ்க்குக்குத் தகுந்தாற்போல் வருமானம், வரிச் சேமிப்பு போன்றவற்றையெல்லாம் கண்கூடாகப் பார்க்க முடியும். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒப்பிட்டுப் பார்த்து முதலீடு செய்யுங்கள்!

மேலும், மற்ற முதலீட்டு வருமானத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது சிறந்த வருமானம் தந்திருப்பதையும் காணலாம். பல திட்டங்கள், பணவீக்கத்தைத் தாண்டி வருமானத்தையும் தருகின்றன.

செப்டம்பர் 2017-ல் எஸ்.ஐ.பி முறையில் 5,500 கோடி ரூபாய் வந்திருக்கிறது. 2016-17-ம் நிதியாண்டில், 8.80 லட்சத்துக்கு மேலான எஸ்.ஐ.பி கணக்குகளைத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது மியூச்சுவல் ஃபண்ட், வெற்றிகரமான முதலீடாக இருக்கிறது. நீங்களும் இதில் இணைந்து பயன்பெற வேண்டும்” என்றவர், மியூச்சுவல் ஃபண்டில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.
 
ஞா.சக்திவேல் முருகன்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி