நமது அவசர கால நிதி மற்றும் வருடாந்திர நிதித் தேவைகளுக்காக ஒரு முதலீட்டைத் தேடுவோம். இல்லாவிட்டால், வங்கியில் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் தூங்கிக்கொண்டிருக்கும் பணத்தை முதலீடு செய்வதற்கு ஒரு முதலீட்டைத் தேடுவோம். அவ்வாறு தேடுபவர்களுக்காக இந்த வாரம் ஆக்ஸிஸ் பேங்கிங் & பி.எஸ்.யூ டெட் ஃபண்டை நமது அலசலுக்கு எடுத்துக் கொண்டுள்ளோம்.

இது ஒரு அல்ட்ரா ஷார்ட் டேர்ம் வகையைச் சார்ந்த (கடன்) ஃபண்டாகும். இந்த ஃபண்டை நாம் பரிந்துரை செய்வதற்கு முக்கியக் காரணம், இதன் போர்ட்ஃபோலியோ குவாலிட்டி ஆகும்.
நம்மில் பெரும்பாலோர் முதலீடு செய்யும்போது, நாம் செய்யும் முதலீடு எந்தக் காரணம் கொண்டும் குறைந்து விடக் கூடாது என்பதில் குறியாக இருப்போம். அவ்வாறு இழப்பை ஏற்படுத்தாத உயர்தர போர்ட் ஃபோலியோ குவாலிட்டியைக் கொண்டுள்ளது இந்த ஃபண்ட்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஃபண்டில் கிட்டத்தட்ட 88% முதலீடுகள் ஏஏஏ (AAA) அல்லது ஏ1 பிளஸ் (A1+) முதலீட்டுத் தரத்தை உடையவை. எஞ்சியது ஏஏ தரத்தைக் கொண்டதாகும். மேலும், கடந்த காலத்தில் இந்த ஃபண்ட் டீசன்டான வருமானத்தைத் தந்துள்ளது.
இந்த ஃபண்ட் ஆரம்பித்த தேதி ஜூன் 07, 2012 ஆகும். தற்போது ரூ.879 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் ஆதித்யா பகாரியா ஆவார்.

இந்த ஃபண்டின் பெயரில் உள்ளதுபோல் வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனங் களுக்கு மட்டுமே இந்த ஃபண்ட் கடன் கொடுக்கிறது. அதுவும் நல்ல முதலீட்டுத் தரத்தைக் கொண்ட நிறுவனங் களுக்கு மட்டுமே கடன் கொடுக்கிறது. ஆகவே, இந்த ஃபண்டின் ரிஸ்க் மிக மிகக் குறைவு. குறுகிய காலத்தில் மிகவும் பாதுகாப்பான முதலீட்டைத் தேடுபவர் களுக்கு இந்த ஃபண்ட் கனகச்சிதமாகப் பொருந்தும்.
இந்த ஃபண்ட் வைத்திருக்கும் பத்திரங்களின் சராசரி முதிர்வு காலம் 9 மாதங்கள் ஆகும். இந்த பண்டிலிருந்து எப்போது வேண்டு மானாலும் வெளியேறிக் கொள்ள லாம். வெளியேற்றுக் கட்டணம் ஏதுமில்லை.

இந்த ஃபண்ட், கடந்த 5 ஆண்டு களில் எந்தவொரு காலாண்டிலும் நெகட்டிவ் வருமானத்தைத் தந்ததில்லை என்பது குறிப்பிடத் தக்கது. குறைந்தது மூன்று மாதத்துக்குத் தேவைப்படாத பணத்தை இதில் முதலீடு செய்யலாம்.

சில அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி வசதி இருக்காது. இந்த ஃபண்டில் குறைந்த பட்ச மொத்த முதலீடு ரூ.5,000 ஆகும். அதேபோல, குறைந்தபட்ச எஸ்.ஐ.பி முதலீடு ரூ.1,000 ஆகும். உங்களின் எமர்ஜென்ஸி ஃபண்டிற்கு, குழந்தைகள் கல்விச் செலவிற்கு, இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டுவதற்கு மற்றும் தற்காலிகமாக பணத்தை போட்டு வைக்க இது ஒரு நல்ல ஃபண்டாகும்.

எஸ்.ஐ.பி மற்றும் மொத்த முதலீட்டை இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் துவக்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீட்டைத் துவக்குவதற்கு எல்லா நல்ல நேரமே. அவ்வப்போது வங்கி சேமிப்புக் கணக்கில் தூங்கிக்கொண்டிருக்கும் பணத்தை இந்தத் திட்டத்திற்கு முதலீட்டாளர்கள் மாற்றிவிடலாம். பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு ஒரு பிஸினஸ் டே ஆகும்.
எவ்வயதினரும் தங்களுடைய குறுகிய காலத் தேவைகளுக்கு இத்திட்டத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம். உங்கள் பணம் உங்களது வங்கி சேமிப்புக் கணக்குகளில் தூங்காமல், உங்களுக்காக வேலை செய்வதற்கு இது ஒரு அரிய முதலீட்டு வாய்ப்பாகும்.