புத்தகத்தின் பெயர்: த ஆர்ட் ஆஃப் டூயிங் (The Art of Doing: How Super achievers Do What They Do and How They Do it so Well)

ஆசிரியர்: கேமிலி ஸ்வேனி மற்றும் ஜோஷ் கோஸ்பீல்ட் (Camille Sweeney & Josh Gosfield)

பதிப்பகம்: பெங்குவின் யு.எஸ்.ஏ

வெற்றிபெற்ற பல்வேறு சாதனையாளர்களை ஆராய்ந்ததன் மூலம் உருவான கருத்துகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புத்தகம்தான் ‘த ஆர்ட் ஆஃப் டூயிங்’ என்கிற, இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கிற புத்தகம். இதை எழுதியவர்கள் கேமிலி ஸ்வேனி மற்றும் ஜோஷ் கோஸ்பீல்ட்.

வெற்றி பெற்ற சாதனையாளர்களைச் சந்தித்து நேர்காணல் செய்து, அவர்களைப் பற்றி தனித்தனியாக புத்தகம் எழுதுவதே இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர்களின் நோக்கமாக ஆரம்பத்தில் இருந்ததாம். நூற்றுக்கணக்கான மணி நேரம் நேர்காணல் செய்தபின் இந்த சூப்பர் சாதனையாளர்கள் சொன்ன பல விஷயங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்திருக்கிறது. ‘அதெப்படி ஒரு ராக் பேண்ட் இசையைமைப்பாளரும், ரேஸ்கார் ஓட்டும் டிரைவரும் தங்களுடைய வெற்றியை நிர்ணயிக்க ஒரே மாதிரி சிந்திக்கின்றனர்’ என வியந்துபோனார்கள் ஆசிரியர்கள். ‘அட, இது நன்றாக இருக்கிறதே’ என்று இந்தக் கோணத்தில் யோசித்து, தாங்கள் நேர்காணல் செய்த 36 பேரும் அவர்கள் வெற்றிக்குக் காரணமாக சொன்ன குணாதிசயங்களில் முக்கியமானவற்றைக் கண்டறிந்தனர்.

அர்ப்பணிப்பு

அர்ப்பணிப்பு எனும் அரிய விஷயம் இந்த சூப்பர் வெற்றியாளர்களிடம் இருக்கும் முக்கியப் பண்பு என்கின்றனர் ஆசிரியர்கள். பணமா, பெயரா, புகழா எதை அடையவேண்டும் என்று நினைக்கின்றனரோ, அதற்குத் தேவையான அர்ப்பணிப்பை இவர்கள் அனைவரும் முழுமனதுடனும் முழுமூச்சுடனும் செய்து வந்துள்ளனர் என்கிறார் ஆசிரியர்.

‘‘வெற்றி என்பது வெறும் அர்ப்பணிப்பு இருந்தால் மட்டும் வந்துவிடாது. திறமை, சூழல் எனப் பல விஷயங்கள் உண்டு என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. இவர்களுடன் பேசியபோது எங்களுக்குத் தெரியவந்தது, வெற்றி என்பது சட்டென ஒரு நொடியில் இவர்களுக்கு வந்துவிடவில்லை என்பதே.

திறமை என்பது ஒரு ஆரம்பமே. திறமை இருக்கிறது. அந்தத் திறமையைப் பளிச்சிடச் செய்ய எந்தெந்த விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்திப் பாடுபட வேண்டும் என்பதை ஆராய்ந்தறிவது அடுத்த நிலை. அப்படிப் பாடுபடும்போது எதிர்கொள்ளும் கஷ்டநஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டு போராடுவதற்கான மனநிலையே முழுவெற்றிக்குக் காரணமாகிறது’’ என்கின்றனர் ஆசிரியர்கள். இவர்கள் அனைவருமே வெற்றிக்கான சாலையின் வரைபடம் எதுவும் கையில் இல்லாமல், தங்களுடைய பயணத்தைத் துவக்கியவர்களே என்பதையும் முக்கியமாக நினைவில் கொள்ளவேண்டும் என்கின்றனர்.

புத்திசாலித்தனமான பிடிவாதம்

அடுத்து ஆசிரியர்கள் சொல்வது, இவர்கள் அனைவரிடமும் இருந்த புத்திசாலித்தனமான பிடிவாத குணத்தினை. சாதிக்க வேண்டும் என்ற முடிவுடன் கிளம்பினால், உடனடியாக உலகம் நமக்கு இலவச அட்வைஸை வாரி வழங்க ஆரம்பித்துவிடும். ஒரு கூட்டம், ‘‘தம்பி, தலையே போனாலும் சரி, நீ நினைப்பதை முடிக்கிறவரைத் தளராமல் போராடு” என்று சொல்லும். மற்றொரு கூட்டமோ, “முடியாதுன்னு தெரிகிற விஷயத்தை ஏன் கட்டிக்கொண்டு அழவேண்டும். அது முடியாதுன்னா, அதைவிட சிறந்த விஷயம் இருக்குன்னு கண்டுபிடிச்சா அந்த ரூட்டுல போவதுதானே புத்திசாலித்தனம்” என்று சொல்லும்.

வெற்றி பெற்றவர்கள் இந்த இரண்டு அட்வைஸ்களையுமே மனதில் கொண்டு, அதே சமயத்தில் கொண்ட கொள்கையையும் மனதில் வைத்துக் கொண்டு எப்போது தொடர வேண்டும், எப்போது இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் போன்ற புத்திசாலித்தனமான உறுதிப்பாடுகளினால் மட்டுமே வெற்றிக் கனியைப் பறிக்கிறார்கள்.

டீம் ஒர்க்

ஆசிரியர்கள் கண்டறிந்த மற்றொரு குணாதிசயம் டீம் வொர்க் எனும் கூட்டு வேலையை. ‘டீம் வொர்க் எல்லாம் எங்களுக்குத் தெரியாதா?’ என்பீர்கள். இங்கே குழு என்பது உங்களுடன் வேலை பார்க்கும் நபர்கள் மட்டுமல்ல என்பதுதான் வேறுபடுத்தும் விஷயமே. குழு என்பதைச் சமுதாயம் என்பதன் மாற்று வார்த்தையாகவே இவர்கள் அனைவரும் பார்க்கிறார்கள். அந்த அளவுக்குப் பெரியதாக தங்களுடைய நெட்வொர்க்கைக் கொண்டிருக்க நினைக்கின்றனர் இவர்கள் என்பதே பெரிய அளவிலான வெற்றிக்கு வழிவகுக்கிறது என்கின்றனர் ஆசிரியர்கள்.

வாடிக்கையாளர்கள், வலைப்பதிவு செய்பவர்கள், விளம்பரதாரர்கள், ரசிகர்கள், சக ஆர்வலர்கள் (enthusiast), விமர்சகர்கள் அனைவரையுமே ஒரு குழுவாகவே (டீம்) பார்க்கும் மனப்பான்மையை இந்த அனைவரும் கொண்டிருக்கின்றனர் என்கின்றனர் ஆசிரியர்கள்.

கவனமுடன் கேட்டல்

கவனமுடன் கேட்டல் எனும் குணத்தின் பங்களிப்பை மிக விரிவாக விளக்குகின்றனர் ஆசிரியர்கள். சில சூப்பர் சாதனையாளர்கள் கவனமுடன் கேட்பது வெறும் வார்த்தைகளை மட்டுமல்ல, அவை சொல்லப்படும்போது வெளிப்படும் ஒவ்வொரு நுணுக்கங்களையும்தான் என்கின்றனர்.

உணர்வுகளை மேலாண்மை செய்தல்

உணர்வுகளை மேலாண்மை செய்தல் என்பது பயத்தில் இருந்து மீள்தல், பதற்றமான எதிர்பார்ப்புகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளுதல், எந்தச்சூழலிலும் நம்பிக்கையை மனதில் கொணர்தல், கர்வம் தவிர்த்தல், எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கைப் பெறுதல், நகைச்சுவையுடன் இருத்தல் எனப் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது என்கின்றனர் ஆசிரியர்கள். இந்தக் குணங்கள் எல்லாம் சூப்பர் வெற்றி யாளர்களின் உணர்வு மேலாண்மைக்கான பட்டியலில் இருக்கின்றன.

கற்றுக்கொள்ளல்

வெற்றிக்கான பாதையில் பயணிக்கும்போது வரும் இடைஞ்சல்களிலிருந்து எப்படி நமது கற்றுக்கொள்ளல்கள் இருக்கின்றன என்பதே, நாம் சூப்பர் வெற்றியாளரா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த வகை கற்றல்களில் இரண்டு வகை உள்ளன. ஒன்று, தோல்விக்கான காரணிகள் வெளிஉலகத்தில் மட்டுமே இருக்கிறது என்று நினைத்து அதை ஆராய்ந்து சரிசெய்ய நினைப்பது. இரண்டாவது, கற்றல் என்பது வெளிஉலக காரணங்களுடன் சேர்த்து நம்முள்ளே இருக்கும் நம்பிக்கைகள், திறமைகள், அதிலுள்ள குறைபாடுகள் போன்றவற்றையும் மிக நேர்மையாக, குறைகளைக் களைவதற்காக சீர்தூக்கிப் பார்ப்பது என்பதாகும். இதில், இரண்டாம் வகைக் கற்றலைப் பெரும்பாலான சூப்பர் வெற்றியாளர்கள் கொண்டிருந்தனர்.

பொறுமை

ஒரு மணித்துளியோ, ஒரு நாளோ, ஒரு வருடமோ அல்லது ஒரு தசாப்தமோ – ஒரு செயலில் இறங்கிவிட்டால் அதன் தன்மைக்கேற்ப பொறுமையைக் கடைப்பிடித்தல் என்பது மிக மிக அவசியமாகிறது. இதுவும் சூப்பர் வெற்றியாளர்களுக்கு வெகுவாக கைகொடுக்கும் டெக்னிக்காக திகழ்கிறது என்கின்றனர் ஆசிரியர்கள்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி என்பது நம் அனைவருக்கும் வெற்றிக்கான தூண்டுகோலாக அமைகிறது. செய்யும் வேலையில் ஒவ்வொரு படிநிலையிலும் மகிழ்ச்சியடைதலின் அவசியத்தைச் சொல்லும் ஆசிரியர்கள், ஒருவர் சிறு விஷயத்தைச் செய்வதில் வெற்றிபெற்றால் அதனால் மகிழ்ச்சியடை கிறார். அந்த மகிழ்ச்சி அவருக்கு உற்சாகத்தை அளிக்கிறது. அதனால், அவர் அடுத்த செயலை இன்னமும் சுலபமாக முடிக்கிறார். மறுபடி மகிழ்ச்சி, மறுபடி வெற்றி என்ற வகையிலேயே வாழ்க்கை மறுபடி மறுபடி செல்கிறது. எனவே, செய்வதை அதிக பிடித்தத்துடனும், அதில் பெறும் சிறுசிறு வெற்றிகளில் மகிழ்ச்சியையும் அடைய பழகிக் கொள்ளுங்கள் என்று முடிக்கின்றனர் ஆசிரியர்கள்.

சாதாரண வெற்றிக்கே அரும்பாடு படவேண்டிய இந்தக் காலத்தில், சூப்பர் வெற்றிபெற்றவர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து, அவற்றில் இருக்கும் ஒற்றுமைகளை உதாரணங்களுடன் விரிவாகச் சொல்லும் இந்தப் புத்தகத்தை வெற்றி பெறவிரும்பும் அனைவரும் கட்டாயம் ஒருமுறை படிக்கலாம்.

- நாணயம் டீம்

வெறும் 1.7% பேரே வரி கட்டியிருக்கின்றனர்

நம் நாட்டில் வரி கட்டு பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. கடந்த 2015-16-ம் ஆண்டு கணக்கின்படி, வெறும் 1.7 சதவிகிதத்தி னரே வரி கட்டியிருப்பதாக வருமான வரித் துறை சொல்லியிருக்கிறது. கடந்த 2015-16-ல் மொத் தம் 4.07 கோடி பேர் வரிக் கணக்கைத் தாக்கல் செய்தனர். (கடந்த 2014-15-ம் ஆண்டில் வெறும் 3.65 கோடி பேர் மட்டுமே வரிக் கணக்கைத் தாக்கல் செய்தனர்.) இதில் 2.8 கோடி பேர் மட்டுமே வருமான வரி கட்டியிருக் கின்றனர். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரி கட்டியவர்கள் 9,690 பேர் மட்டுமே. ஒரே ஒருவர் மட்டும் 100 கோடி ரூபாய் மேல் வரி கட்டியிருக்கிறார். அவரது நேர்மையைப் பாராட்டுவோம்!

மீண்டும் வருகிறார் கேப்டன் கோபிநாத்

இந்தியாவில் மிகக் குறைந்த கட்டணத்தில் விமானப் பயணத்தை அறி முகப்படுத்திய கேப்டன் கோபிநாத், தனது ஏர் டெக்கான் நிறுவனத்தை மீண்டும் தொடங்கி இருக்கிறார். ஏர் டெக்கான் விமான நிறுவனத்துக்கான அனுமதி சமீபத்தில் கிடைத்துள்ளது. உடான் திட்டத்தின்கீழ், நம் நாடு முழுக்க இருக்கிற சிறு நகரங்களை இணைக்கிற மாதிரி ஏர் டெக்கான் செயல்படுமாம். ஏர் டெக் கான் நிறுவனத்தை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் மல்லையாவுக்கு விற்றார் கேப்டன் கோபி நாத். ஆறு ஆண்டுகளுக்கு தனியாக எந்த விமான நிறுவனத்தையும் தொடங் கக்கூடாது என்கிற நிபந் தனை முடிந்திருப்பதால், தனி விமான நிலையத்தைத் தொடங்கயிருக்கிறார்!