ஓர் ஆண்டு முடிந்து இன்னொரு ஆண்டு வந்துவிட்டது. 2018-ல் பங்குச் சந்தை மீது முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள நாணயம் விகடன் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு சர்வே எடுத்தோம்.

இந்த சர்வேயில் 51 சதவிகித முதலீட்டாளர்கள், 2018-ல் சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என சொல்லி இருக்கிறார்கள். முதலீட்டாளர்கள் சந்தையைச் சரியாக புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. உலக அளவிலான நிகழ்வுகள், உள்நாட்டுப் பொருளாதாரம் சிக்கல்களைச் சந்தித்துவரும் இந்தச் சமயத்தில் சந்தை மேல்நோக்கி மட்டுமே செல்லும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதே முதலீட்டாளர்களின் முடிவாக இருக்கிறது.

இந்த சர்வேயில் 37% பேர், சந்தையானது 10% - 15% வரை உயரும் என்று சொல்லியிருக்கிறார்கள். பங்குச் சந்தைமீது மிக அதிக நம்பிக்கையை முதலீட்டாளர்கள் வைத்திருப்பதையே இது காட்டுகிறது. இந்த நம்பிக்கை நிறைவேறலாம், நிறைவேறாமலும் போகலாம்.

ஆனால், மிகக் குறைந்த முதலீட்டாளர்கள் அதாவது, 12% பேர் மட்டுமே சந்தை 10% - 15 % வரை குறையும் என்று சொல்லி இருக்கிறார்கள். இதுவும் நடக்குமா, நடக்காதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். என்றாலும், சந்தையை எச்சரிக்கை உணர்வோடு எல்லோரும் அணுகுவது அவசியம் என்பதையே இவர்களின் முடிவுகள் காட்டுவதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

-ஏ.ஆர்.கே